சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தன்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது தெரியாமல் இருந்த நிலையில், அவரை ஊர் பஞ்சாயத்தில் வைத்து தண்டனை வாங்கிக் கொடுக்க முடிவு செய்தார் சுயம்பு. ஆனால் பஞ்சாயத்தில் தீர்ப்பு சுயம்பு எதிர்பார்த்தபடி வரவில்லை. ஆனந்தி தன்னுடைய கர்ப்பத்திற்கு காரணமானவனை கண்டுபிடித்து வர உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சிங்கப்பெண்ணாய் சென்னைக்கு கிளம்பிய ஆனந்தி அங்கு தேடுதல் வேட்டையில் இறங்குகிறார். அவருக்கு துணையாக அன்புவும் வர, இருவரும் சேர்ந்து முதலில் ரகுவை தேடுகின்றனர். ஏனெனில் அவர் கொடுத்த மயக்க மருந்தால் தான் தனக்கு இப்படி ஆனதாக ஆனந்தி கூறுகிறார்.
24
ரகுவை கண்டுபிடித்த அன்பு
அன்புவும் ஆனந்தியும் தேடுவதை தெரிந்துகொண்ட ரகு அவர்களுக்கு தெரியாமல் ஓடி ஒளிந்து வந்த நிலையில், இன்று ஒருவழியாக அவன் தங்கி இருந்த ஓட்டல் அறையை கண்டுபிடித்து ஆனந்தியும், அன்புவும் வருகிறார்கள். அங்கு சரக்கடித்துக் கொண்டிருக்கும் ரகு, திடீரென கதவை யாரோ தட்டுவதை கேட்டு, அது டெலிவரி பாய் ஆக இருக்கும், போய் அவனிடம் சிக்கன் வாங்கிட்டு வா என தன்னுடைய ஆளை அனுப்புகிறார். அந்த நபர் கதவை திறந்தபோது உள்ளே மாஸாக அன்புவும், ஆனந்தியும் எண்ட்ரி கொடுக்கிறார்கள். அவர்களைப் பார்த்ததும் ஷாக் ஆகும் ரகுவுக்கு அடித்த போதையெல்லாம் இறங்கிவிடுகிறது.
34
மித்ராவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
அவனை அடிக்கும் அன்பு, ஆனந்தியை எதுக்குடா இப்படி பண்ணீங்க. எதுக்குடா அவளுக்கு மயக்க மருந்து கொடுத்தீங்க என கேட்கிறார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற ரகுவை, துரத்தி செல்கிறார் அன்பு. இந்த சமயத்தில் மித்ரா அந்த ஓட்டலுக்கு வருகை தருகிறார். அங்குள்ள ஊழியரிடம் ரகுவை பற்றி விசாரிக்கிறார்கள். அவர், யாரோ ஒரு பொண்ணும், பையனும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவரை துரத்தி சென்றதாக கூறுகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் மித்ரா, அன்பு தான் அவனை துரத்தி சென்றிருப்பார் என்பதை யூகிக்கிறார். பின்னர் அவர்களை தேடி அழைகிறார் மித்ரா.
மறுபுறம் ரகுவை துரத்தி பிடிக்கும் அன்பு மற்றும் ஆனந்தி, அவனிடம், யார் சொல்லி மயக்க மருந்து கொடுத்த என கேட்க, கேட்க வாய் திறக்காமல் இருக்கிறார் ரகு. உடனே கையில் இருந்த கட்டையை வைத்து ரகுவை குத்த வருகிறார் அன்பு, இதைப்பார்த்து பதறிப்போன ரகு உயிர் பயத்தில், உண்மையெல்லாம் சொல்லிவிடுகிறான். இதைக்கேட்டு அன்பு, ஆனந்தி இருவருமே ஷாக் ஆகிறார்கள். அப்படி ரகு யாருடைய பெயரை சொன்னார்? ஆனந்தி மற்றும் அன்பு எடுக்கப்போகும் அடுத்தக்கட்ட முடிவு என்ன என்பதை சிங்கப்பெண்ணே சீரியலின் இனி வரும் எபிசோடுகளில் தெரிய வரும்.