Revathi Love Plan to Karthik in Karthigai Deepam 2 : தனது கணவர் கார்த்திக்கை எப்படியாவது காதலிக்க வைக்க ரேவதி பிளான் போட்டு வரும் நிலையில் எதுவுமே ஒர்க் அவுட் ஆகாத நிலையில் இன்றைய எபிசோடில் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.
Revathi Love Plan to Karthik in Karthigai Deepam 2 : கார்த்திகை தீபம் 2 சீரியல் முன்பை விட இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில், கார்த்திக்கை துரத்தி துரத்தி காதலிக்கும் ரேவதியின் பாவட்ட முகம் தான் ரசிகர்களை சுவாரஸ்யமாக ரசிக்க வைக்கிறது. வெகுளி, சுட்டித்தனம், காதலின் சின்ன சின்ன ரொமாண்டிக் காட்சிகள் என்று காதலிப்பவர்களை ரசிக்க வைக்கிறது.
24
ரேவதி, கார்த்திக், சாமுண்டீஸ்வரி
இதுவரையில் எந்த சீரியலில் முத்தக் காட்சி காட்டியது இல்லை என்று சொல்லும் அளவிற்கு முதல் முறையாக ரேவதி கார்த்திக்கிற்கு முத்தமிட்ட காட்சி ரசிகர்களை ரசிக்க தூண்டியது. இதே போன்றுதான் ரேவதி பூக்குழி இறங்கிய போது அவருக்கு காலில் அடிப்பட்டது என்று கூறி கார்த்திக்கை தூக்கச் செய்தார். மேலும், கால் வலிப்பதாக கூறி காயத்திற்கு மருந்தும் போட செய்தார்.
34
கார்த்திகை தீபம் 2 சீரியல்
அப்போது மைண்ட் வாய்ஸாக கால பிடிக்க வைக்க இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு இனி காதலிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்படனுமோ என்று கூறியிருந்தார். அதன் பிறகு கார்த்திக் தூங்க வருவதற்கு முன்னதாக அவரது பாயை எடுத்து மறைத்து வைத்தார். பின்னர் கண்ணில் தூசி விழுந்துவிட்டதாக கூறி கார்த்திக்கை கண்ணில் ஊதி எடுக்க சொன்னார். ஆனால், அவரோ ரோகிணியை கூட்டிக் கொண்டு வந்தார். அவரிடம் நீ எதற்கு இங்கு என்று கேட்க, ரோகிணியோ அதை புரிந்து கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
44
கார்த்திகை தீபம் சீரியல்
இப்படியே சென்று கொண்டிருக்க ரேவதியை கார்த்திக் காதலிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதற்கும் முன்னதாக ரேவதியோ தனக்கு குழந்தை வேண்டும் என்றும் ஆசைப்பட்டதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.