Saravanan Shocked Mayil Not Pregnant in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 562ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்
Saravanan Shocked Mayil Not Pregnant in Pandian Stores 2 :பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மாசமாக இருக்கும் தங்கமயிலுக்கு மருத்துவ பரிசோதனைக்காக கோமதி, சரவணன், பாக்கியம், ராஜீ மற்றும் கதிர் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்ற எபிசோடு கடந்த வாரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இனி இன்று நடைபெறும் 562ஆவது எபிசோடில் பாக்கியம் இதுவரையில் என்ன நடந்தது என்று எல்லாவற்றையும் கூறிவிட்டார். அதில், பிரக்னன்ஸி கிட்டை வைத்து நாங்கள் பரிசோதனை செய்து பார்த்தோம். அதில் 2 கோடு இருந்தது. அதனால், நாங்கள் குழந்தை பிறக்க போகிறது என்ற சந்தோஷத்தில் இருக்கிறோம் என்றார்.
25
கதறி அழுத தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பின்னர், தங்கமயிலுவிற்கு மருத்துவர் ஸ்கேன் செய்து பார்க்கிறார். அப்போது ஸ்கேனில் சரியாக தெரியவில்லை. இதே போன்ற ஒரு காட்சி மாமன் படத்திலும் இடம் பெற்றிருந்தது. அதில், ஸ்கேனில் சரியாக தெரியவில்லை என்பதால், அவரை மருத்துவர் நன்றாக தண்ணீர் குடித்துவிட்டு நீண்ட நேரம் காத்திருக்க சொன்னார்கள். மேலும், சிறுநீர் வரும் போது உள்ளே வாருங்கள் ஸ்கேன் எடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியதைத் தொடர்ந்து உள்ளே சென்று ஸ்கேன் செய்த போது அவர் அம்மாவானது உறுதி செய்யப்பட்டது.
35
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய 562ஆவது எபிசோடு
அப்படி ஒரு சீன் தான் இன்றைய எபிசோடிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில், பிரெக்னன்ஸி கிட்டை வைத்து 2 கோட்டு இருப்பதாக உறுதி செய்த தங்கமயில், தனது கணவருக்கும் தெரியப்படுத்தினார். அதன் பிறகுதான் பாண்டியனின் வீட்டிற்கே தங்கமயில் வர முடிந்தது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, தங்கமயிலுவை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் கர்ப்பம் இல்லை என்பதை எல்லோ முன்பும் தெளிவாக சொல்லிவிட்டார்.
45
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 562ஆவது எபிசோடு
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சரவணன் அழுது கொண்டே அங்கிருந்து புறப்பட்டார். ஆனால், தங்கமயில் மட்டும் புறப்படவில்லை. நீங்கள் மறுபடியும் ஸ்கேன் எடுங்கள். நான் கர்ப்பமாக தான் இருக்கிறேன். பாப்பா வரும். எனக்கு பிரெக்னன்ஸி கிட்டில் 2 கோடு காட்டியது. அதான் மேலும் இன்னொரு முறை கூட ஸ்கேன் எடுக்கலாம் வாங்க என்றார். ஆனால், மருத்துவர் 100 சதவிகிதம் உண்மை. நீங்கள் கர்ப்பமாக இல்லை என்று சொல்லிவிட்டார்.
55
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
அதன் பிறகு அனைவரும் வீட்டிற்கு வர, ஒவ்வொருவரும் என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று கேட்க, கர்ப்பம் இல்லை என்பது தெரிந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஹாஸ்பிட்டலிலிருந்து வீட்டிற்கு வந்த கையோடு சரவணன் கடைக்கு செல்கிறார். இதற்கிடையில் மீனா ராஜீக்கு போன் போட்டு கேட்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இனி நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.