ஜனனி கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி, ஜீவானந்தத்தை தேட தனிப்படை அமைக்குமாறு போலீசுக்கு உத்தரவிடுகிறது. அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரைம் டைம் சீரியல்களில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலும் ஒன்று. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். இதில் ஈஸ்வரியை ஆதி குணசேகரன் தாக்கியதில், அவர் படுகாயம் அடைந்து பேச்சு மூச்சின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவருக்கும் இன்னும் சுயநினைவு திரும்பாமல் இருக்கிறது. இதனிடையே ஈஸ்வரியின் இந்த நிலைக்கு ஆதி குணசேகரன் தான் காரணம் என ஜனனி, தர்ஷினி ஆகியோர் குற்றச்சாட்டுகளை முன்வைக்க, ஆதி குணசேகரனோ, இவர்கள் தன்மீது வீண் பழி சுமத்தி தன்னை திட்டம்போட்டு ஜெயிலுக்கு அனுப்ப பிளான் போடுவதாக கூறுகிறார்.
24
ஜீவானந்தத்தால் ஏற்பட்ட ட்விஸ்ட்
பார்கவி ஈஸ்வரியை பார்க்க வந்தபோது, அவரை அழைத்துக் கொண்டு ஜீவானந்தம் மருத்துவமனையை விட்டு ஓடும் சிசிடிவி காட்சிகளை பார்த்த போலீஸார், அவர் தான் ஏதேனும் செய்திருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து வீட்டில் விசாரிக்கும் போதும் ஜீவானந்தம், தன்னுடைய மனைவியின் முன்னாள் காதலன் என்பதையும், அவர்கள் இருவரும் பிளான்போட்டு தன்னை கவிழ்க்க சதி செய்து வருவதாகவும் கூறினார். அந்த சமயத்தில் ஜீவானந்தம் ஜனனிக்கு போன் போட, அவரிடம் இருந்து போனை பிடுங்கிய கதிர், போனை ஸ்பீக்கரில் போடுகிறார். அப்போது தான் பிரச்சனையில் சிக்கி இருப்பதாகவும், நாம் திட்டமிட்டபடி செயல்படுமாறும் கூறுகிறார். இதனால் போலீசுக்கு மேலும் சந்தேகம் வந்து, ஜனனியை கைது செய்தனர்.
34
நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
கைது செய்யப்பட்ட ஜனனியை போலீசார் நீதிமன்றத்தில் அஜர்படுத்தினர். அப்போது, அவரை விசாரித்த நீதிபதி, நடந்தவற்றை கேட்டு தெரிந்துகொள்கிறார். ஆதி குணசேகரன் தான் இதற்கு காரணம் என ஜனனி சொன்னதும், அதற்கு ஆதாரம் இருக்கிறதா என நீதிபதி கேட்டதும் ஜனனி ஆஃப் ஆகிவிடுகிறார். பின்னர் வாதிட்ட குணசேகரன் தரப்பு வக்கீல், ஜீவானந்தம் பற்றிய உண்மைகளை நீதிபதி முன் உடைக்கிறார். பின்னர் தர்ஷனை விசாரிக்கும்போதும் அவர் ஜீவானந்தமும், ஈஸ்வரியும் சில மாதங்கள் கொடைக்கானலில் இருந்ததை ஒப்புக் கொள்கிறார். இதனால் கன்பியூஸ் ஆன நீதிபதி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பிக்கிறார்.
ஜீவானந்தத்தை தனிப்படை அமைத்து தேட உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கிறார். இதனால், ஜீவானந்தத்தை கைது செய்ய விரைகிறது போலீஸ். இதற்கிடையே அறிவுக்கரசியிடம் இருக்கும் ஆதி குணசேகரனுக்கு எதிரான ஆதாரம் இந்த வழக்கில் சிக்குமா? தன் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளை தகர்த்து ஜனனி இந்த வழக்கில் இருந்து விடுதலை ஆவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விரைவில் தர்ஷனின் திருமண எபிசோடும் ஆரம்பமாக உள்ளதால், இனி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் டிஆர்பி எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.