Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபலம்... அவருக்கு பதில் இவரா?

Published : Oct 08, 2026, 08:58 PM IST

Pandian Stores 2 Serial Actress Quit : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்து வந்த நடிகை ஒருவர் தற்போது திடீரென விலகி இருக்கிறார்.

PREV
15
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து நடிகை விலகல்

விஜய் டிவியில் பிரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்கிற கடையை நடத்தி வரும் பாண்டியனுக்கு கோமதி என்கிற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அதில் மூத்த மகன் பெயர் சரவணன், இரண்டாவது மகன் பெயர் செந்தில், மூன்றாவது மகன் பெயர் கதிர். இந்த மூன்று மகன்களுக்குமே திருமணமாகிவிட்ட நிலையில், பாண்டியனின் எதிர்வீட்டில் இருக்கும் கோமதியின் அண்ணன் மகன் குமார், அரசியை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.

சிறகடிக்க ஆசை vs பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 : ஜெராக்ஸ் எடுத்ததுபோல் ரெண்டு சீரியலுக்கும் இவ்ளோ ஒற்றுமையா?

25
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

குமார் ஒரு ரெளடி என்பதால் அவனை வெறுக்கிறார் அரசி. இருந்தாலும் அவன் தன்னை லவ் பண்ண சொல்லி அரசியை டார்ச்சர் பண்ணுகிறார். அரசியை எப்படியாவது தன்னுடைய பேரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என கோமதியின் அம்மா காந்திமதி ஆசைப்படுகிறார். இதற்காக பல தில்லாலங்கடி வேலையெல்லாம் பார்த்திருக்கிறது பாட்டி. மறுபுறம் அரசிக்கு வேறு ஒருவருடன் நட்பு ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறிவிடுகிறது. இந்த மேட்டர் குமாருக்கு தெரிந்து அவர் அந்த நபரை எச்சரிக்கிறார்.

35
நடிகை சத்ய சாய் விலகல்

இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய கேரக்டராக இருக்கிறது அரசி கதாபாத்திரம். அந்த கேரக்டரில் சத்ய சாய் என்பவர் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக நடித்து வந்தார். அவரின் நடிப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த நிலையில், தற்போது அரசி கேரக்டரில் நடித்து வந்த சத்ய சாய், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவர் இந்த சீரியலில் இருந்து விலகியதற்கு முக்கிய காரணம், அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். விரைவில் குழந்தை பிறக்க இருப்பதால், சீரியலில் இருந்து விலகி உள்ளார்.

45
இனி அரசியாக நடிக்கப்போவது யார்?

சத்ய சாய் விலகியதால் அவருக்கு பதில் யார் நடிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. அதற்கு விடை அளிக்கும் விதமாக இன்று முதல் வேறு ஒரு நடிகை அரசி கேரக்டரில் வந்துள்ளார். அவர் பெயர் ஸ்ரீ பிரியா. இவர் இதற்கு முன்னதாக கண்மணி அன்புடன் என்கிற சீரியலில் நடித்திருந்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் அரசியாக ஸ்ரீ பிரியா நடித்துள்ள எபிசோடு இன்று முதல் ஒளிபரப்பாகி உள்ளது. சத்ய சாய் அரசியாக நடித்து பெற்ற பெயரையும் புகழையும் ஸ்ரீ பிரியா பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

55
அடுத்தடுத்து விலகிய நடிகைகள்

பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து ஒரே மாதத்தில் இரண்டு நடிகைகள் விலகி இருக்கிறார்கள். தற்போது அரசியாக நடித்து வந்த சத்ய சாய் விலகிய நிலையில், அவருக்கு முன்னதாக இந்த சீரியலில் அஞ்சலி என்கிற கேரக்டரில் நடித்து வந்த ஷாதிகா, கடந்த மாதம் விலகினார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர். அஞ்சலி கதாபாத்திரம் சரவணனின் முன்னாள் காதலி, அவரை வைத்து தான் மிகப்பெரிய பிரச்சனையே சீரியலில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories