Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கில் அக்ஷிதா மற்றும் அவினாஷின் ஆட்டத்துக்கு அஸ்மிதா - பிரித்வி ஜோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி நான்கு வாரங்களை நிறைவு செய்து தற்போது ஐந்தாவது வாரத்தில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், இதுவரை பெரிதாக கவனம் பெறாத சில போட்டியாளர்களும் தற்போது தங்களது ஆட்டத்தை மாற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். கடந்த வார இறுதியில் நிகழ்ச்சிக்குள் மூன்று வைல்ட்கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்தனர். காமென் மேன் நிகழ்ச்சியில் பங்கேற்ற கரிஷ்மா, டிடிஎஃப் வாசன் மற்றும் அக்ஷிதா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் புதுவரவுகளாக களமிறங்கியுள்ளனர்.
24
உருவாகும் புது கூட்டணி
இதில் அக்ஷிதா சீரியல் நடிகை என்பது மட்டுமின்றி, ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் அவினாஷின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் வருகைக்குப் பிறகு வீட்டில் இருந்த போட்டியாளர்களின் உறவுகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுவரை நெருக்கமாக இருந்த சில போட்டியாளர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகி வரும் நிலையில், ஏற்கனவே போட்டி மனப்பான்மையுடன் இருந்த சிலர் புதிய கூட்டணிகளை உருவாக்கி வருகின்றனர். இதனால் பிக் பாஸ் வீடு நாளுக்கு நாள் அதிக பரபரப்பாகி வருகிறது.
34
போட்டியை சூடுபிடிக்க வைக்கும் புதிய டாஸ்க்!
இந்நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்க் போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான போட்டியை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுதொடர்பாக நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள இரண்டாவது புரோமோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. புரோமோவில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள போட்டியாளர்களுக்கு நீல நிற செங்கற்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட அணியிடம் ஆறு நீல செங்கற்கள் சேர்ந்தால், எதிரணியில் உள்ள ஒரு போட்டியாளரின் ஆட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும் என விதிமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அஸ்மிதா மற்றும் பிரித்வி அணியினர் ஆறு நீல செங்கற்களை கைப்பற்றியுள்ளனர்.
அக்ஷிதா – அவினாஷுக்கு எதிராக எடுத்த அதிரடி முடிவு!
ஆறு செங்கற்களை பெற்ற அஸ்மிதா – பிரித்வி அணியினர், தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி அக்ஷிதா மற்றும் அவினாஷின் ஆட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்கின்றனர். இதனை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் அண்ணன் – தங்கை இருவரும் போட்டியாளர்களாக இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவர்களின் ஆட்டத்தை முடக்க எடுத்துள்ள இந்த முடிவு நிகழ்ச்சியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த டாஸ்க் அடுத்தடுத்து போட்டியாளர்களுக்கு இடையே புதிய மோதல்களை உருவாக்குமா, அல்லது புதிய கூட்டணிகளுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தற்போதைய புரோமோ வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.