Sivanandi washes saree and vessels in Chamundeshwari House : கார்த்திக்கை தீபம் 2 சீரியலில் எதிரியாக இருந்து வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட சிவனாண்டியை புடவை துவைக்கவும், பாத்திரம் கழுவவும் வைத்த கார்த்திக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Sivanandi washes saree and vessels in Chamundeshwari House : கார்த்திகை தீபம் 2 சீரியலில் நாளுக்கு நாள் சுவாரஸ்யமான காட்சிகளும், விறுவிறுப்பான காட்சிகளும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்து தேர்தலில் ஜெயித்தால் சிவனாண்டியை தனது வீட்டில் எடுபுடி வேலை பார்க்க வைக்கிறேன் என்று கார்த்திக் சபதம் போட்டிருந்தார். அதே போன்று தான் சிவனாண்டியும் தான் ஜெயித்தால் சாமுண்டீஸ்வரியின் மகள்கள் 4 பேரும் தனது வீட்டில் வந்து பத்து பாத்திரம் தேய்த்து வீட்டு வேலைகளை பார்க்க வேண்டும் என்று சபதம் போட்டிருந்தார்.
25
கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்
சாமூண்டீஸ்வரிக்கு பக்க பலமாக இருந்த கார்த்திக் அவரை பஞ்சாயத்து தேர்தலில் ஜெயிக்க வைத்து சபதத்தில் வென்றுவிட்டார். இதையடுத்து ஊரைவிட்டு எஸ்கேப் ஆக பார்த்த சிவனாண்டி மற்றும் அவரது சித்தப்பா முத்துவேலுவை கார்த்திக்கை பிடித்து தனது வீட்டில் முதலில் புடவைகளை துவைக்க வைத்தார். அதன் பிறகு பத்து பாத்திரம் தேய்க்க வைத்தார். இதைத் தொடர்ந்து வீட்டிலுள்ள ஒட்டடைகளை அடிக்க வைத்து வீட்டிற்கு மாஃப் போட வைத்தார்.
35
பத்து பாத்திரம் தேய்த்த சிவனாண்டி
ஒரு கட்டத்தில் புடவைகளை துவைத்துக் கொண்டிருக்கும் போது உங்களது வீட்டில் யாரும் புடவைகளை துவைக்க மாட்டீர்கள், இத்தனை புடவைகள் இருக்கிறது என்று கேட்க, அதற்கு பதிலளித்த நீ சபதம் போட்ட போதே வீட்டில் யாரும் எந்த வேலையும் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவனாண்டி தனது வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டோம் என்று புலம்பித் தவித்தார்.
45
பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற சாமுண்டீஸ்வரி
தொடர்ந்து ரெஸ்ட் இல்லாமல் வேலை பார்க்கிறோம், கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று முத்துவேல் கெஞ்ச, அதற்கு கார்த்திக்கோ சரி, நீங்கள் புறப்படுங்கள். இனிமேல் இது போன்று செய்யக் கூடாது என்று வார்னிங் கொடுத்து அனுப்பினர். ஆனால் அப்போதும் அவர்கள் திருந்துவது போன்று தெரியவில்லை. சந்திரகலாவின் பேச்சைக் கேட்டு, கோயிலீல் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
55
கார்த்திகை தீபம் 2 சீரியல்
அதாவது, கோயில் இடம் அம்மா அபிராமி பெயரில் இருக்கும் நிலையில் அதனை அண்ணன் தம்பி மூவர் பெயருக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுவும் சந்திரகலாவின் திட்டம் என்று கார்த்திக் புரிந்து கொண்டார். எப்படியாவது அத்தையிடம் கார்த்திக்கை மாற்றிவிட வேண்டும் என்பது தான் அவரது பிளான் என்று மயில்வாகனம் நன்கு புரிந்து கொண்டு அதைப் பற்றி கார்த்திக்கிடம் கூறியுள்ளார். இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.