Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்

Published : May 18, 2026, 08:32 AM IST

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து வருமானவரித்துறை அதிகாரியை அழைத்து சென்று பைனான்சியரை சந்தித்து பேசி இருக்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
16
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும் மீனாவும் வீட்டை மீட்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் மனோஜ் எந்த வித கவலையும் இன்றி ரோகிணியுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் காட்டி வருகிறார். ரோகிணியும், மனோஜும் ஷோரூமில் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததை பார்த்த வக்கீல், விஜயாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லிவிடுகிறார். இதனால் கடும் கோபம் அடையும் விஜயா, நேரடியாக மனோஜை ஷோரூமில் பார்க்க கிளம்புகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : பைனான்சியருக்கு ஆப்பு... வீட்டை மீட்க முத்துவுக்கு கிடைத்த புது ரூட்

26
வசமா சிக்கிய மனோஜ்

மனோஜின் ஷோரூமிற்கு செல்லும் விஜயா, ரோகிணி எப்போ இங்க வந்தா என கேட்க, மனோஜ் ஷாக் ஆகிறார். பின்னர் அவ எதுக்கு இங்க வந்தா என விஜயா துருவி துருவி கேட்க, அருகில் இருந்த சந்தோஷ், அவ எலி பிடிக்க இங்க வந்தா என கூறி மழுப்புகிறார். எலி பிடிப்பதற்காக அவ பூனை வாங்கி வந்ததாகவும், ஆனால் அந்த பூனை தற்போது எலி உடன் ஃபிரெண்டாகிவிட்டது என்றும் கூறுகிறார். அதன்பின்னர் அந்த பூனையை எடுத்து வர சொல்லும் விஜயா, அவ கொண்டுவந்த எந்த பொருளும் இங்க இருக்க கூடாது. உடனே அதை வெளியே கொண்டு போ என சொல்கிறார்.

36
விஜயாவின் பலே பிளான்

அதுமட்டுமின்றி இனிமே ரோகிணி இங்கு வருகிறாளா என்பதை தான் எப்படி கண்காணிப்பது என விஜயா கேட்க, அதற்கு ஜீவா, இங்கு சிசிடிவி இருக்கு, அதை உங்க போன் உடன் கனெக்ட் செய்தால், எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்க இங்க என்ன நடக்குதுனு பார்க்கலாம் என கூறுகிறார். அதற்கு விஜயா உடனே எனக்கு அந்த கனெக்‌ஷன் வேண்டும் என கூறுகிறார். அதுமட்டுமின்றி இனி அந்த ரோகிணி கூட நீ பேசவே கூடாது என மனோஜுக்கும் கண்டிஷன் போடுகிறார் விஜயா.

46
வருமான வரித்துறை அதிகாரி உடன் செல்லும் முத்து

மறுபுறம் முத்துவும், மீனாவும், தங்கள் நண்பரான வருமான வரித்துறை அதிகாரியை அழைத்துக் கொண்டு பைனான்சியரை பார்க்க செல்கிறார்கள். அங்கு சென்று கேட்கும் போது அவரை பார்க்க 3 மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும் என ஊழியர் ஒருவர் சொல்ல, முத்து அழைத்து வந்த வருமான வரித்துறை அதிகாரி தான் யார் என்பதை சொன்னதும், உடனே பைனான்சியரை அங்கு வர வைக்கிறார் அந்த ஊழியர். அப்போது உள்ளே வாங்க சார், என பைனான்சியர் அந்த அதிகாரியை அழைத்து செல்கிறார். முத்துவும் மீனாவும் உடன் செல்கிறார்கள்.

56
பைனான்சியர் உடைத்த உண்மை

உள்ளே சென்றதும் நீங்க இவங்க வீட்டை திருப்ப அவகாசம் கொடுக்காமல் உடனே நோட்டீஸ் அனுப்பி ஏன் ஜப்தி பண்ணுனீங்க என கேட்கிறார். அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்த பைனான்சியரிடம், நீங்க பதில் சொல்லலேனா நான் என்னுடைய டீம் உடன் வந்து உங்க ஆபிஸில் ஐடி ரெய்டு நடத்துவேன் என மிரட்டியதும் வேறுவழியின்றி எல்லா உண்மையையும் சொல்லிவிடுகிறார். இவங்களுக்கு நான் பணம் கொடுக்கல, என்னை பணம் கொடுக்க வைத்தது சிந்தாமணி தான் என்கிற உண்மையை உடைக்கிறார்.

66
மிரட்டலுக்கு பயப்படாத சிந்தாமணி

அவங்க எதுக்காக உங்க மூலமா பணம் கொடுத்தாங்க என அவர் கேட்க, விஜயா அவங்களுடைய பிரெண்ட் அதனால் பணத்தை அவங்களே கொடுத்தால் திருப்பி வாங்க முடியாது என்பதால் என் மூலம் கொடுத்தார்கள். பின்னர் சிந்தாமணிக்கு போன் பண்ணி பேச சொல்கிறார் அந்த வருமான வரித்துறை அதிகாரி, அப்போது போனில் திமிராக பேசும் சிந்தாமணி, யார் வேண்டுமானாலும் வரட்டும் நான் எல்லா டாக்குமெண்ட்டும் பக்காவா வச்சிருக்கேன். எனக்கு அந்த பணம் வந்தால் தான் நான் சீல் எடுக்க சம்மதிப்பேன் என கூறிவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories