Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவை கடத்தியதாக கூறி கைது செய்யப்பட்ட சத்யாவை போலீசார் விடுதலை செய்துள்ளனர். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவை கடத்தியதாக கூறி சத்யாவை போலீசார் கைது செய்தனர். கண்டிப்பாக இது சிந்தாமணியின் சூழ்ச்சியாக தான் இருக்கும் என்பதை யூகித்த மீனா, சிந்தாமணியின் கணவர் வீட்டில் வேலை பார்ப்பவர்களிடம் விசாரிக்கையில், ரேகா வீட்டில் தான் இருக்கிறார் என்கிற உண்மை தெரியவருகிறது. இதையடுத்து முத்துவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்கிறார் மீனா. அப்போது மிஸ்ராவும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்ததால், அவருடன் சென்று போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பேசுகிறார் முத்து.
சத்யாவை அடிப்பதை நிறுத்துங்க என மிஸ்ரா சொல்ல, அதற்கு அந்த போலீஸ் அதை சொல்ல நீங்க யார் என திமிராக கேட்கிறார். பின்னர் மிஸ்ரா அவரிடம் தன்னுடைய ஐடி கார்டை எடுத்துக் காட்டி தான் ஒரு வருமானவரித்துறை அதிகாரி என்று சொல்ல, உடனே கப்சிப்னு ஆகும் இன்ஸ்பெக்டரை, அவரை அமர வைத்து பேசுகிறார். அப்போது மிஸ்ரா, போலீஸிடம் என்ன லஞ்சம் வாங்கிட்டு நீங்க சத்யாவை கைது பண்ணீருக்கீங்களா, ரேகாவோட அப்பா கொடுத்தது பொய் புகார், இப்போ சத்யாவை நீங்க ரிலீஸ் பண்ணலேனா நான் அடுத்ததா கமிஷ்னரை சந்தித்து புகார் அளிப்பேன் என மிரட்டுகிறார்.
35
ரிலீஸ் ஆன சத்யா
பின்னர் அந்த போலீஸ் அதிகாரி வெளியே சென்று ரேகாவின் தந்தைக்கு போன் போட்டு, சார் நீங்க உங்க பொண்ணை வீட்டில் வச்சிருக்க விஷயம் இவங்களுக்கு தெரிஞ்சிருச்சு, இப்போ ஒரு அதிகாரியை கூட்டிட்டு வந்து கமிஷ்னரிடம் புகார் அளிப்பேன்னு சொல்றாங்க. இதனால எனக்கு தான் பிரச்சனை வரும் என சொல்லிவிட்டு, உள்ளே வந்ததும் சத்யாவை ரிலீஸ் பண்ண சொல்கிறார். பின்னர் அவரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு வீட்டுக்கு அனுப்புகிறார்கள். அப்போது வெளியே இருந்த அருணை மீனா திட்டிவிட்டு செல்கிறார்.
வீட்டுக்கு சென்றதும் சத்யாவுக்கு சீதா ஒத்தனம் கொடுத்துக் கொண்டிருக்க, அப்போது சந்திரா, சத்யாவிடம் இனிமேல் ஆச்சும் அந்த பொண்ணை விட்டுருடா, எனக்கு நீ மட்டும் தான் இருக்க, பெரிய இடத்து சம்மந்தம் நமக்கு வேண்டாம் என கெஞ்சுகிறார். ஆனால் சத்யா, தான் ரேகாவை தான் கல்யாணம் செய்துகொள்வேன் என ஒற்றைக் காலில் நிற்கிறார். பின்னர் சீதாவும், மீனாவும் தங்கள் பங்கிற்கு சத்யாவை பிரையின் வாஷ் பண்ண பார்க்கிறார்கள். ஆனால் சத்யா எதற்கு செவிசாய்க்கவில்லை. அப்போது முத்துவும் அங்கு வருகிறார்.
55
ரேகாவை என்ன செய்யப்போகிறார் சிந்தாமணி?
அவரிடம் சத்யா, தான் ரேகாவை பார்க்க வேண்டும் என சொல்ல, மேலும் கடுப்பாகும் சந்திரா அவரை அடிக்கப் பாய்கிறார். அவரை தடுத்து நிறுத்தும் முத்து, நீங்க இப்படி அவனிடம் சொன்னால், அந்த பொண்ணு மருந்தை குடிச்சிட்டு செத்துரும், இவனும் கடலில் குதிச்சு செத்துருவான். அப்போ நிம்மதியா இருப்பீங்களா என கேட்கிறார். அதனால் மனம் மாறும் மீனா, சத்யாவை எப்படியாவது ரேகாவுடன் சேர்த்து வைக்க முடிவெடுக்கிறார். மறுபுறம் சிந்தாமணி தன்னுடைய மகளை வேறு இடத்தில் கடத்திக் கொண்டு வைக்க பிளான் போட்டிருக்கிறார். இதன்பின் என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.