பல்லவனை அரெஸ்ட் பண்ணிய போலீஸ்... தம்பியை காப்பாற்றினாரா சோழன்? அய்யனார் துணை சீரியல் அப்டேட்

Published : Mar 08, 2026, 10:05 AM IST

அய்யனார் துணை சீரியலில் காயத்ரி உடன் தனியாக ஹோட்டலில் ரூம் போட்டு தங்கிய பல்லவனை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

PREV
14
Shocking Twist in Ayyanar Thunai Serial

அய்யனார் துணை சீரியலில் சேரன் மற்றும் பாண்டியனின் திருமணம் தொடர்பான பிரச்சனைகள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருந்தாலும் மறுபுறம் பல்லவன் ஜாலியாக தன்னுடைய காதலி காயத்ரி உடன் ரொமான்ஸ் செய்துகொண்டிருந்தார். தொடர்ச்சியாக காலேஜை கட் அடித்துவிட்டு, பல்லவன் காயத்ரியோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்த நிலையில், கல்லூரியில் இருந்து சேரனுக்கு போன் போட்டு பல்லவன் காலேஜுக்கு ஒரு வாரம் வரவில்லை என சொல்கிறார். இதனால் பல்லவன் மீது சேரனுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

24
சோதனை செய்ய வந்த போலீஸ்

பல்லவன் காயத்ரி உடன் ஹோட்டல் ஒன்றிற்கு செல்லும் போது அவரை சோழன் பார்த்துவிடுகிறார். பார்த்ததும் அவரை கண்டிக்காமல், என்ன செய்கிறார் என பார்க்கலாம் என சோழன் வெயிட் பண்ணிக் கொண்டிருக்க, அப்போது பல்லவனும் காயத்ரியும் ரூம் போட்டு தங்கி இருந்த ஓட்டலிற்கு போலீஸ் வருகிறார்கள். இந்த ஓட்டலில் சட்டவிரோதமாக போதைப் பொருள் விற்கப்படுவதாக தங்களுக்கு புகார் வந்திருப்பதால், இங்கு சோதனை செய்ய வந்திருப்பதாக போலீஸ் சொல்கிறார். இதையடுத்து ஓட்டல் ஊழியரும் ஒவ்வொரு ரூமாக சென்று சோதனை செய்கிறார்கள்.

34
கைது செய்யப்படும் பல்லவன்

அப்போது போலீஸ் பல்லவன் இருக்கும் ரூமிற்குள் சென்று சோதனை செய்ய, அப்போது அவர் போலீஸ் பார்த்து பதற்றத்தில் குண்டக்க மண்டக்க பதில் சொல்கிறார். அதுமட்டுமின்றி அவர்கள் இருவரும் காலேஜை கட் அடித்துவிட்டு வந்திருப்பதை அறிந்த போலீஸ், சந்தேகத்தின் பேரில் பல்லவனை கைது செய்கிறார்கள். அப்போது அவர் போலீஸிடம் தாங்கள் இருவரும் படிப்பதற்காக தான் ரூம் எடுத்ததாக சொல்ல, அதையெல்லாம் நம்ப மறுத்த போலீஸ், வாடா என பல்லவனை கழுத்தை பிடித்து வெளியே அழைத்து செல்கிறார்கள். அங்கிருந்து காயத்ரியையும் வெளியேற்றுகிறார்கள்.

44
காப்பாற்றினாரா சோழன்?

பல்லவனை போலீஸ் அழைத்து சென்று வருவதை சோழன் பார்த்துவிடுகிறார். அப்போது சோழனிடம், நான் எந்த தப்பும் பண்ணல அண்ணேன் என சொல்கிறார் பல்லவன். சோழனும் என் தம்பி எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டான் சார் என சொல்ல, உடனே எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனில் வந்து சொல்லுங்க என கூறிவிட்டு பல்லவனை அழைத்து செல்கிறது போலீஸ். பல்லவனும் கதறி அழுதபடி செல்கிறார். அவருடன் காயத்ரியையும் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார். இதன்பின்னர் என்ன ஆனது, பல்லவனை போலீஸ் பிடியில் இருந்து சோழன் மீட்டாரா என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories