Pandian Stores 2 Serial 26 June 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்திலின் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்ட விவகாரம் மீனாவுக்கு தெரியவந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் அலுவலகத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆகி இருந்தார் செந்தில். அவருடன் வேலை பார்க்கும் 3 அதிகாரிகளை லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்தனர். இந்த விஷயம் நியூஸ் சேனலிலும் ஒளிபரப்பானது. அதிகாரிகளை பார்த்ததும் நடுங்கிப்போன செந்தில், என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார். இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மீனா தன்னுடைய ஆபிஸில் சாப்பிடும் போது போன் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது செந்தில் அலுவலகத்தில் ரெய்டு நடந்த விஷயத்தை நியூசில் பார்க்கிறார். இதைப்பார்த்ததும் பதறிப்போன மீனா, ஒருவேளை செந்தில் சிக்கி இருப்பாரோ என்கிற பயத்தில், விறுவிறுவென கிளம்பி செந்திலின் ஆபிஸுக்கு செல்கிறார். அங்கு சென்று பார்த்தபோது அவர் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருக்கிறார். பின்னர் அவரிடம் சென்று பேசுகிறார் மீனா. அப்போது தனக்கு இங்கு இருந்தால் படபடப்பாக இருக்கிறது, வா வீட்டுக்கு போலாம் என அழைத்து செல்கிறார் செந்தில்.
35
உண்மையை உளறிய செந்தில்
வீட்டுக்கு வந்த பின்னரும் பதற்றத்துடன் இருக்கிறார் செந்தில், அவரிடம் என்ன ஆச்சு என மீனா கேட்க, அப்போது தான் லஞ்சம் வாங்கிய விஷயத்தை சொல்லிவிடுகிறார். அதைக்கேட்டதும் அதிர்ச்சி அடையும் மீனா, அப்போ வீட்டுல இருந்த பணம் லஞ்சப் பணமா என மீனா கேட்க, அதற்கு ஆமாம் என சொல்கிறார் செந்தில். அதைக்கேட்டு கடும் கோபம் கொண்ட மீனா, உங்களை நினைச்சா எனக்கு அசிங்கமா இருக்கு, இப்படி லஞ்சம் வாங்கிருக்கீங்களே என சொல்லிவிட்டு கோபத்துடன் ரூமை விட்டு வெளியே சென்றுவிடுகிறார்.
மறுபுறம் குமார் வீட்டில் உள்ள தனது பாட்டியிடம், அரசியை என்னுடன் சேர்த்து வைப்பதாக சொன்னேல்ல இப்போ அவ எவன்கூடயோ ரோட்ல நின்னு சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கா என சொல்ல, எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார் காந்திமதி. பின்னர் சத்தம் கேட்டு அனைவரும் வர, அப்போது குமாரை திட்டுகிறார் சக்திவேல். உடனே குமார், தான் மட்டும் தான் கல்யாணம் ஆகாம இருக்கேன். என்னோட நண்பர்கள் எல்லாம் கல்யாணம் ஆகி குழந்தை பெத்து சந்தோஷமாக இருக்காங்க என புலம்புகிறார்.
55
ராஜிக்கு ஷாக் கொடுத்த கதிர்
இதையடுத்து மாடிக்கு செல்லும் குமாரை தனியாக சந்தித்து பேசும் காந்திமதி, நீ முதல்ல அரசிக்கிட்ட பாசமா நடந்துக்கோ, அப்ப தான் அவ மனசுல இடம்பிடிக்க முடியும் என ஐடியா கொடுக்கிறார். மறுபுறம் ராஜி வீட்டில் அமர்ந்து காய்கறி வெட்டிக் கொண்டிருக்க, அப்போது அங்கு வரும் கதிர், உன்னுடைய ரிசல்ட் எப்போ என கேட்க, அதற்கு அவர் இரண்டு வாரத்துல வரும்னு நினைக்குறேன் என சொல்கிறார். உடனே கதிர் தன்னுடைய போனை எடுத்து இன்னும் இரண்டு நாளில் ரிசல்ட் வரப்போவதாக சொன்னதும் ராஜி பதற்றம் அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.