Saravanan Doubts Thangamayil in Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்று தங்கமயில் மீது சந்தேகமடைந்த சரவணன் திரும்ப திரும்ப அவரது ஆதார் கார்டை கேட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் தீபாவளி விருந்தில் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தீபாவளிக்கு செய்த வடை, பலகாரங்களை சாப்பிட்டதோடு இட்லி, அசைவ உணவுகள் என்று தீபாவளி விருந்தை ஒரு பிடி பிடித்தனர்.
26
வயதில் மூத்த தங்கமயில், சரவணன் அதிர்ச்சி
இதில் பாண்டியன் கோமதி, சரவணன் தங்கமயில், செந்தில் மீனா, பழனிவேல் சுகன்யா மற்றும் கதிர் ராஜீ என்று அனைவரும் ஜோடியாக அமர்ந்து தீபாவளி சாப்பாடு சாப்பிட்டனர். இதைத் தொடர்ந்து பட்டாசும் வெடித்தனர். பின்னர், பழனிவேல் மற்றும் சுகன்யா இருவரும் தல தீபாவளிக்கு வீட்டிற்கு புறப்பட இருந்த சூழலில் பாண்டியன் அவருக்கு ஒரு வேலை சொன்னார்.
36
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
இதனால் மன வேதனை அடைந்த சுகன்யா ஏங்க என்னுடைய வீட்டிற்கு எப்போது போக, வீட்டிற்கு தல தீபாவளிக்கு வரச்சொன்னார்கள். நீங்கள் உங்களுடைய மாமாக்கிட்ட சொல்ல வேண்டியது தானே என்று அப்படி இப்படி என்று கேட்டார். இதோ இப்போ போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று புறப்பட்டுச் சென்றார்.
46
ஆதார் கார்டு, விஜய் டிவி சீரீயல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
அடுத்த காட்சியாக சரவணன் மற்றும் தங்கமயில் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், சரவணன், தங்கமயிலிடம் ஆதார் கார்டை கேட்க, அவரோ மலுப்ப ஆரம்பித்தார். என்னுடைய ஆதார் கார்டா, உங்களுடைய ஆதார் கார்டா, எதுக்கு மாமா என்று கேட்க, எனக்கு சந்தேகம் இருக்கிறது. நீ கிச்சனில் இருக்கும் போது 2010ல் 10ஆவது படித்துக் கொண்டிருந்தேன் என்று சொன்ன போது எனக்கு சந்தேகம் வந்தது அதான் கேட்டேன் என்றார்.
56
தங்கமயில் சரவணன் சர்ச்சை
அதற்கு பதிலளித்த மயில், அதான் நான் திருத்திக் கொண்டேன் மாமா என்று சொல்ல ம்ம் பார்த்தேன் பார்த்தேன் நீ திருத்தியதையும் பார்த்தேன் திருட்டு முழியையும் பார்த்தேன் இந்த முகத்தை வைத்து கொண்டு பொய் சொன்னதையும் பார்த்தேன் என்றார். எனக்கு என்னமோ நீ எல்லா விஷயத்திலேயும் பொய் சொன்ன மாதிரி இந்த வயசு வித்தியாசத்திலேயும் பொய் சொல்லியிருப்பாயோ என்று தோன்றுகிறது.
எனக்கு சின்ன வயதில் நடந்த எல்லா விஷயமும் நினைவில் இருக்கிறது என்று சரவணன் சொல்ல, அதற்கு உங்களை விட 2 வயசு குறைவு தான் என்று மயில் சொல்லவே உடனே உஷாரான சரணன் நீ என்னைவிட 2 வயது பெரியவள் என்று நான் சொல்லவே இல்ல என்று சொன்னார். இப்படி வழ வழன்னு பேசுவதற்கு பதிலாக ஆதார் கார்டை எடுத்துக் கொடுக்கலாம்.
66
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
அதையெல்லாம் கையில் வைத்துக் கொண்டிருப்பார்களா? இங்கு தான் எங்காவது இருக்கும். நான், பிறகு எடுத்து தருகிறேன் என்றார். பண்டிகை நாள் அதுவுமாக வேலை நிறைய இருக்கிறது என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். கடைசி வரை ஆதார் கார்டு பற்றி வாயவே திறக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த சரவணன், இவள் பெருசா ஏதோ பொய் பேசுகிறாள். அவளுடைய முகத்தை பார்த்தாலே தெரிகிறது. ஒரு விஷயத்தில் கூட உண்மை இல்லாதவளை நான் கல்யாணம் செய்திருக்கிறேனே என்று தனக்கு தானே நொந்து கொண்டார்.