தீபாவளி கொண்டாடுவதற்காக முத்து, மீனா, ரோகிணி, மனோஜ், ஸ்ருதி, ரவி, அண்ணாமலை, விஜயா ஆகியோர் ஊருக்கு சென்றடைந்ததும், முத்துவின் பாட்டி, அனைவரையும் பாசத்தோடு வரவேற்கிறார். பின்னர் அங்கு வரும் முத்துவின் நண்பர்கள், அவருக்கு சீம்பால் கொடுக்கிறார்கள். இதை அனைவருக்கும் கொடுக்கிறார் முத்து. அதை சாப்பிட்டு பார்த்த ஸ்ருதி செம டேஸ்டாக இருப்பதாக சொல்வதோடு, இந்த ஸ்வீட்டை நம்முடைய ரெஸ்டாரண்டிலும் வைத்தால் நல்லா சேல்ஸ் ஆகும் என சொல்ல, அதற்கு டெய்லி 100 மாடு குட்டி போடணும்மா என கிண்டலடிக்கிறார் முத்து.