அடுத்ததாக தங்கமயில் மற்றும் சரவணன் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் தங்கமயில் அயர்ன் செய்து வைத்து சட்டையை சரவணன் போடவில்லை என்று ஒரு பஞ்சாயத்து. அப்போது சரவணன் உண்மையை சொல்ல வருவதற்கு முன்னதாகவே சுதாரித்துக் கொண்ட தங்கமயில் அவர் என்ன சொல்லிடபோகிறார். திரும்பவும் குழந்தை விஷயத்தை தான் ஆரம்பிப்பார் என்று சொல்லி அழுதார். இதைத் தொடர்ந்து கோமதி அவரை கண்டிக்க அதற்குள்ளாக சரவணன் கடைக்கு சென்றார்.
சரவணனுக்கு அட்வைஸ் செய்த பாண்டியன்: அங்கும் அவருக்கு தங்கமயில் போன் போடவே சரவணன் எடுக்கவில்லை. பின்னர், பாண்டியனுக்கு போன் போட்ட தங்கமயில் மாமா, நான் வரும் போது டிபன் எடுத்துக் கொண்டு வருகிறேன். இதோ கிளம்பிவிட்டேன். நான் போன் போட்டேன் அவர் எடுக்கவில்லை. நீங்கள் போன் கொடுத்தாலும் அவர் பேசப்போவதில்லை என்று அப்பாவியாக பேசினார். அதன் பிறகு பாண்டியன் ஏண்டா கடைக்கு வரும் கஸ்டர்களிடம் நல்லா தான் பேசுற, அப்புறம் என்ன தங்கமயில் கிட்ட மட்டும் ஏன் சரியாக பேசவில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.