சினிமாவை போல் சின்னத்திரையிலும் பிரபலங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாரி வழங்கப்படுகிறது. அந்த வகையில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சினிமாவைப் போலவே சின்னத்திரையும் நாளுக்கு நாள் அதீத வளர்ச்சி அடைந்து வருகிறது. தயாரிப்பு மற்றும் விளம்பரப்படுத்தல் போன்றவற்றில் எப்போதும் புதுமையாக இருப்பதுதான் இந்தத் துறையின் மிகப்பெரிய சவால். அதிக ரேட்டிங் உள்ள சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம் நம்மை ஆச்சரியப்படுத்தும். சில நேரங்களில் சினிமாவை விடவும் அதிகமாக இருக்கும். இந்திய தொலைக்காட்சியில் அதிக சம்பளம் பெறும் நட்சத்திரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
24
சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்குவது யார்?
இந்திய தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். இந்நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி முதன்முதலில் தொடங்கப்பட்டது இந்தியில் தான். பிக் பாஸின் இந்தி பதிப்பை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.
சல்மான் கான் கடைசியாக தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சி கலர்ஸ் டிவி மற்றும் ஜியோ சினிமாவில் 2024 அக்டோபர் 6 முதல் 2025 ஜனவரி 19 வரை ஒளிபரப்பானது. 15 வாரங்கள் நீடித்த இந்த பிக் பாஸ் சீசனில் சல்மான் கானுக்கு ரூ.250 கோடி கிடைத்தது. அதாவது மாதத்திற்கு ரூ.60 கோடி. இதன்மூலம் சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக சல்மான் கான் உள்ளார்.
34
பிக் பாஸ் சல்மான் கான்
பல ஆண்டுகளாக இந்தி பிக் பாஸின் முகமாக சல்மான் கான் உள்ளார். அர்ஷத் வார்சி, ஷில்பா ஷெட்டி, அமிதாப் பச்சன் ஆகியோர் நிகழ்ச்சியின் முதல் சீசன்களில் தொகுப்பாளர்களாக இருந்தனர். சல்மான் கான் அந்த இடத்திற்கு வந்ததும், ரேட்டிங் உயர்ந்தது. பிக் பாஸ் ஓடிடியில் கரண் ஜோஹர் தொகுப்பாளராக வந்தபோது, அதன் ரேட்டிங்கில் சரிவு ஏற்பட்டது. உடல்நலக் காரணங்களாலோ அல்லது சினிமா படப்பிடிப்புகளாலோ சல்மான் கான் தொகுப்பாளர் இடத்தில் இருந்து விலகிய எபிசோடுகளிலும் பிக் பாஸ் ரேட்டிங்கில் சரிவு ஏற்பட்டுள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன்பு பிக் பாஸுக்கு வந்தபோது, சல்மான் கான் ஒரு படத்திற்கு ரூ.5-10 கோடி சம்பளம் வாங்கினார். தற்போது ஒரு படத்திற்கு ரூ.150 கோடி வாங்குகிறார். சல்மான் கானுக்கு அடுத்தபடியாக இந்திய தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் கபில் ஷர்மா மற்றும் ரூபாலி கங்குலி. தி கிரேட் இந்தியன் கபில் ஷர்மா நிகழ்ச்சியின் முதல் சீசனில் கபில் ஷர்மா ரூ.60 கோடி சம்பளம் பெற்றார். பிரபலமான 'அனுபமா' தொடரில் நடிப்பதற்காக நடிகை ரூபாலி கங்குலி ஒரு எபிசோடுக்கு ரூ.3 லட்சம் பெறுகிறார்.