ஒரு ஈ, காக்கா கூட வரக்கூடாது, அப்புறம் நான் மனுசனாவே இருக்கமாட்டேன் – இளையவர் சக்திவேல் ஆவேஷம்!

Published : Oct 16, 2025, 05:16 PM IST

Sakthivel angry mode against Gomathi : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் கோமதி மற்றும் கதிர் இருவரும் காந்திமதியின் 75ஆவது பிறந்தநாளுக்கு ஒரு ஈ காக்கா கூட வரக்கூடாது என்று சக்திவேல் ஆவேஷமாக பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

PREV
17
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தன்னுடைய ஆத்தாவின் 75ஆவது பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகளை ஒட்டு மொத்த குடும்பமும் செய்து வருகிறது. இதில் கோமதியும் அவரது குடும்பமும் கண்டிப்பாக பிறந்தநாள் விழாவிற்கு வர வேண்டும் என்று காந்திமதி கண்டிஷன் போட்டுள்ளார். அப்போது தான் தான் பிறந்தநாள் விழாவிற்கு வருவேன் இல்லையென்றால் என்னுடைய ரூமை விட்டு வெளியில் கூட வரமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். 

27
நீண்ட நாள் பகை

உண்மையில் முத்துவேலுவை விட இளையவர் சக்திவேல் தான் கோமதி மீதும், அவரது குடும்பத்தின் மீதும் ரொம்பவே கோபமாக இருக்கிறார். கோபம் கூட கிடையாது, பகை. நீண்ட நாள் பகை என்று கூட சொல்லலாம். இதற்கிடையில் தனது மகனை கோர்ட்டுக்கு வரை கொண்டு வந்துவிட்டார்கள் என்ற கோபமும் பற்றிக் கொண்டது. அதனால், எப்படியாவது பாண்டியன் குடும்பத்தை பழி வாங்க வேண்டும் என்று ஆக்ரோஷமாக இருக்கிறார்.

37
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 613ஆவது எபிசோடு

இந்த நிலையில் தான் இன்றைய 613ஆவது எபிசோடில் பழனிவேல், கதிர் மற்றும் கோமதி ஆகியோர் பிறந்தநாள் விழாவிற்கு செல்வது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில், காந்திமதியின் பிறந்தநாள் கோயிலில் வைத்து நடப்பதால் நாம் எல்லோருமே சென்று கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு அப்படியே அம்மாச்சி காலில் விழுந்து ஆசிர்வாதமும் வாங்கிவிட்டு வரலாம் என்று கதிர் நல்ல யோசனை சொல்கிறார்.

47
போட்டுக் கொடுத்த சுகன்யா

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பழனிவேலுவின் மனைவி சுகன்யா அங்கிருந்து மூச்சப்பிடிக்க ஓடி வந்து சக்திவேல் குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டார். அதாவது, அத்தை பிறந்தநாளுக்கு கோமதி அத்தாச்சியும், அவரது குடும்பமும் வரப்போறங்களாம். இப்போது தான் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். உங்களது தம்பி சொன்னதையெல்லாம் கேட்டு அவர்கள் வருவதாக முடிவு செய்துள்ளார்கள்.

57
ஆத்திரமடைந்த சக்திவேல்

இதையெல்லாம் கேட்டு ஆத்திரமடைந்த சக்திவேல் என்னுடைய உடம்பில் உயிர் இருக்கும் வரை இது நடக்காது, நடக்கவும் விடமாட்டேன் என்று ஆக்ரோஷமாக பேசினார். கதிரெல்லாம் ஒரு சில்லுண்டு பையன் ஓங்கி ஒரு அடி விட்டேனா ஒன்றை மயில் தூரத்துக்கு அங்கிட்டு போய் விழுவான். அரைவேங்காடு பையன் அவனெல்லாம் வீர வசனம் பேசுகிறானா என்று ஆக்ரோஷமானார். அவர்கள் என்னுடைய ஆத்தா பிறந்தநாளுக்கு வரக்கூடாது.

முதல் வாரமே அதளபாதாளத்துக்கு சென்ற பிக் பாஸ் சீசன் 9 டிஆர்பி ரேட்டிங்... அதுக்குன்னு இவ்வளவு கம்மியா?

67
கோயில், சாமியெல்லாம் எல்லோருக்கும் பொது

அவர்கள் கோயிலுக்கு தானே வருகிறார்கள். கோயில், சாமியெல்லாம் எல்லோருக்கும் பொது. அங்கு யார் வர வேண்டும், யாரு வரக் கூடாது என்று நாம் சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் கோயிலுக்கு சாமி கும்பிட வரவில்லையே. நீங்கள் பிரச்சனை ஏதும் பண்ண வேண்டாம். அப்படி பிரச்சனை பண்ணினால், அவர்கள் அடிக்க வந்துவிட்டால் என்ன செய்வது. யாரும் யாரையும் அடிக்க கூடாது. கோமதி குடும்பமும் வரட்டுமே முத்து என்று காந்திமதி அமைதியாக பேசினார்.

பிக்பாஸ் வீட்டில் அலைமோதும் காதல் லீலைகள் - பாருவுக்கும் ஆளு கிடைச்சாச்சு!

77
ஒரு ஈ காக்கா கூட வரக்கூடாது - சக்திவேல்

ஆத்தா, அந்த வீட்டிலிருந்து ஒரு ஈ காக்கா கூட வரக் கூடாது, கோயிலினும் பார்க்க மாட்டேன், உன்னுடைய பிறந்தநாளுனும்னு பார்க்கமாட்டேன், என்ன செய்வது என்று எனக்கே தெரியாது என்று சக்திவேல் பேச, அதிர்ச்சி அடைந்த காந்திமதி அப்புறம் எதுக்கு இந்த கொண்டாட்டம். அது அடுத்தவர்கள் கூட கிடையாது. உன்னுடைய சொந்த ரத்தம். என்னுடைய ஆசைக்காக அவர்களுடைய குடும்பம் பிறந்தநாளுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறது. எல்லோரும் ஒன்றாக இருந்து என்னுடைய 75ஆவது பிறந்தநாளை கொண்டாடினால் சரி, இல்லையென்றால் இந்த வீட்டை விட்டு நான் கால் எடுத்து வைக்க மாட்டேன் என்று காந்திமதி சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories