சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மையை எல்லாம் தெரிந்த முத்து, அதை வீட்டில் உள்ள அனைவரிடம் சொல்லி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தான் கிரிஷோட அம்மா கல்யாணி என்கிற உண்மை அறிந்த முத்து, அதை வீட்டில் உள்ளவர்களிடம் நாமே நேரடியாக சொன்னால் பார்லர் அம்மா பிளேட்டையே மாற்றிவிடுவாள் என கணித்த முத்து, அவள் வாயாலேயே உண்மையை வர வைக்கலாம் என முடிவு செய்கிறார். அதற்குள் வீட்டுக்கு வந்ததும் மனோஜ், தான் கிரிஷை தத்துக்கொடுக்க முடிவெடுத்துள்ள விஷயத்தை கூறுகிறார். அதுமட்டுமின்றி தத்துக்கொடுத்தால், நமக்கு 25 லட்சம் கிடைக்கும் என்கிற விவரத்தையும் சொல்ல, எல்லோரும் இதற்கு முத்து மறுப்பு தெரிவிப்பார் என நினைத்துக் கொண்டிருக்க, அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக கிரிஷை தத்துக்கொடுக்கும் முடிவுக்கு சம்மதம் தெரிவிக்கிறார் முத்து.
25
முத்து கொடுத்த ட்விஸ்ட்
கிரிஷை வெளிநாட்டுக்கு தத்துக்கொடுத்துவிடலாம், அந்த பணத்தை வைத்து நீ உன்னுடைய கடனை அடைத்துக் கொள் என முத்து சொல்ல, எல்லாருமே ஷாக் ஆகிறார்கள். ஆனால் ஒரு கண்டிஷனும் போடுகிறார் முத்து. அது என்னவென்றால் கிரிஷை தத்துக் கொடுக்க வேண்டுமென்றால் கிரிஷின் அம்மாவோட பர்மிஷன் வேண்டும் என சொல்கிறார். அதுதான் அவனோட அம்மா செத்துப்போயிட்டாளே என எல்லோரும் சொல்ல, அதற்கு முத்து, கிரிஷோட அம்மா உயிரோட தான் இருக்காங்க என ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார். அதைக்கேட்டதும் ரோகிணிக்கு தூக்கிவாரிப் போட்டுடிச்சு.
35
கிரிஷோட அம்மாவை திட்டும் முத்து
அதன்பின்னர் கிரிஷோட அம்மாவை பற்றி பேசும் முத்து, அவ ஒரு கேவலமானவள், அவளோட கேரக்டரே சரியில்ல என தரக்குறைவாக பேசுகிறார். ரோகிணி வாயாலேயே உண்மையை சொல்ல வைக்க வேண்டும் என்பதற்காக தான் முத்து இப்படியெல்லாம் பேசுகிறார். முத்து ஏன் இப்படி பேசுகிறார் என அனைவருமே அதிர்ச்சியடைகிறார்கள். அண்ணாமலையும் முத்துவிடம், நீ இப்படியெல்லாம் ஒரு பெண்ணை கொச்சையாக பேச மாட்டியே, அப்டினா அந்த பெண் அப்படிப்பட்டவள் தானா என கேட்கிறார். ஆமா நான் என் கண்ணாலயே பார்த்தேன் என கிரிஷோட அம்மா பற்றி சொல்கிறார்.
முத்து இப்படி பேசுவதைக் கேட்டு ரோகிணியால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. இதையடுத்து முத்துவிடம் ரோகிணி சண்டை போடுகிறார். கிரிஷோட அம்மா பத்தி சொன்னதுக்கு இவ எதுக்காக சண்டை போடுறா என எல்லாருமே ஆச்சரியமா பார்க்கிறார்கள். அவளிடம் அந்த பெண் நல்லவ இல்லனு நான் சொல்றேன். உனக்கு எப்படி அவளைப் பத்தி தெரியும் என முத்து கேட்க, வேறுவழியின்றி உண்மையை ஒத்துக் கொள்கிறார் ரோகிணி. கிரிஷோட அம்மாவே நான் தான் என ரோகிணி சொன்னதைக் கேட்டு அனைவருமே ஷாக் ஆகிறார்கள். இதைக்கேட்ட விஜயாவுக்கு தூக்கி வாரிப்போட்டுடிச்சு.
55
ரோகிணியை பற்றி புட்டு புட்டு வைத்த முத்து
ரோகிணி சொன்னதைக் கேட்டு எல்லாருமே அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்கிறார்கள். அதன்பின்னர் பேசும் முத்து, இவ வாயாலேயே உண்மையை வர வைக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி செய்தேன் என சொல்லும் முத்து, இவ பெயர் ரோகிணி இல்ல கல்யாணி, இவளோட முதல் புருஷன் கல்யாணமாகி 7 மாசத்துலயே இறந்துட்டான். அவங்களுக்கு பிறந்தவன் தான் கிரிஷ். கிரிஷோட பாட்டி வேற யாருமில்ல, ரோகிணியோட அம்மா தான் என அனைத்து உண்மைகளையும் புட்டு புட்டு வைக்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இனி நாளைய எபிசோடு பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.