சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியை வீட்டை விட்டு துரத்திவிட்ட விஜயாவை ரோகிணி பழிவாங்கப் போகிறார். அதற்காக அவர் என்னவெல்லாம் செய்ய இருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்பார்த்த தருணம் அண்மையில் அரங்கேறியது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்தது மட்டுமின்றி தன்னுடைய மகன் தான் கிரிஷ் என்கிற டாப் சீக்ரெட்டையும் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தார். இந்த சீக்ரெட் பல மாதங்களுக்கு முன்பே மீனாவுக்கு தெரிந்தும், அவரை அதை வெளியே சொல்ல விடாமல் தன்னுடைய கிரிமினல் புத்தியை பயன்படுத்தி, மீனாவை பிளாக்மெயில் செய்துவந்தார் ரோகிணி. இதனால் ரோகிணி அவருடன் சேர்ந்து கூட்டுக் களவாணியாக மாறினார். ரோகிணியை காப்பாற்ற முத்துவிடமே பல்வேறு பொய்களை சொன்னார் மீனா.
24
மாட்டிக்கொண்ட ரோகிணி
ஆனால் இந்த உண்மை அனைத்தும் ரோகிணியின் முதல் கணவர் சேகரின் அண்ணன் மூலமாக முத்துவுக்கு தெரியவந்ததை அடுத்து, அதை வீட்டில் ரோகிணி வாயாலேயே உண்மையை வர வைக்க, கிரிஷோட அம்மா கேவலமானவள் என்று சொல்லி டேமேஜ் செய்ய, அதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத ரோகிணி, முத்துவிடம் சண்டை போட்டு, நான் தாண்டான் கிரிஷோட அம்மா என்கிற உண்மையை அனைவர் முன்னிலையிலும் ஒத்துக்கொண்டார். அதன்பின்னர் ரோகிணி இத்தனை நாள் நம்மை எல்லாம் ஏமாற்றி வந்த விஷயத்தை அனைவரிடம் போட்டுடைத்திருக்கிறார் முத்து.
34
ரோகிணிக்கு அடைக்கலம் தரும் சிந்தாமணி
உண்மை தெரிந்ததும் ரோகிணியை வீட்டைவிட்டே துரத்தி விட்டுள்ளார் மனோஜ். வீட்டை விட்டு வெளியேறிய ரோகிணிக்கு அவரது தோழிகளான மகேஸ்வரி மற்றும் வித்யா அடைக்கலம் கொடுக்க மறுக்க, இறுதியாக சிந்தாமணியிடம் சென்று தஞ்சமடைந்துள்ளார் ரோகிணி. அந்த சிந்தாமணியும் கணவரை பிரிந்து வாழ்ந்து சிங்கிளாக வாழ்பவர் என்பதால், ரோகிணிக்கு அடைக்கலம் கொடுக்க சம்மதிக்கிறார். அவரிடம் என்னோட இந்த நிலைமைக்கு காரணமே அந்த முத்துவும், மீனாவும் தான், அவர்கள் இருவரையும் அந்த குடும்பத்தை விட்டே துரத்த வேண்டும் என சபதம் எடுக்கிறார் ரோகிணி.
முத்து - மீனாவுக்கு எதிராக யார் எது செய்தாலும் அவர்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு உதவ முன்வந்துவிடுவார் சிந்தாமணி. அந்த வகையில் தற்போது ரோகிணியை பகடைக்காயாக பயன்படுத்தி முத்து - மீனாவை பழிவாங்க திட்டமிடுகிறார் சிந்தாமணி. நீ நினைச்சதை சாதிக்க எல்லா உதவியும் நான் செய்யுறேன் என ரோகிணியிடம் கூறுகிறார் சிந்தாமணி. ரோகிணியை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி மீனாவுக்கு முடிவு கட்டுவதோடு, அண்ணாமலையின் வீட்டையும் தன்னுடைய பெயருக்கு மாற்றிக் காட்டுவேன் என முடிவெடுத்திருக்கிறார் சிந்தாமணி. இவர்கள் இருவரின் ஆட்டத்தால் இனி மீனாவுக்கு அடுத்தடுத்து அடி காத்திருக்கிறது.