போட்டியிலிருந்து வெளியேறிய பின் சில நாட்கள் அமைதி காத்த கமருதீன், நேற்று ஆவடி பகுதிக்குச் சென்றார். அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளதாளங்கள் முழங்க, மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து கமருதீனை ஒரு வெற்றியாளரைப் போலவே ரசிகர்கள் வரவேற்றனர்.
https://www.instagram.com/reel/DTX_T8Vklyu/?igsh=MTVlMWRtYXcwaGJwdA%3D%3D
வைரலாகும் 'தரமான சம்பவம்' வீடியோ இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் உச்சகட்டமாக, ரசிகர்களுடன் இணைந்து கமருதீன் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தை அதிரவைத்து வருகிறது. பிக் பாஸ் வீட்டில் அவர் சந்தித்த எதிர்மறை விமர்சனங்கள் எதையும் பொருட்படுத்தாமல், ரசிகர்களோடு அவர் உற்சாகமாக நடனமாடியதுதான் இப்போதைய 'ட்ரெண்டிங்' டாபிக்.
"விளையாட்டில் தோற்றாலும், வெளியில் எனக்கு இவ்வளவு ஆதரவு இருக்கிறது" என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. குறிப்பாக, அவர் ஆடிய துள்ளலான நடனம் அவரது ஆதரவாளர்களிடையே வைரலாகி வருகிறது.