முத்து - மீனா மீது போலீஸில் புகார் கொடுத்த ரோகிணி.. விசாரணையில் நடந்த ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Jan 22, 2026, 09:15 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனா தன்னை அடித்துக் கொல்ல முயற்சி செய்ததாக ரோகிணி போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இதன் பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
16
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மை தெரிந்ததும் அவரை வீட்டை விட்டு துரத்திய கையோடு, மனோஜுக்கு டைவர்ஸ் வாங்கும் ஏற்பாடுகளையும் செய்து வருகி்றார் விஜயா. ரோகிணி, முத்துவை கொல்ல பார்த்த விஷயம் மீனாவின் தோழிகளுக்கு தெரியவந்ததை அடுத்து அவர்கள் சத்யாவுடன் சேர்ந்து ரோகிணியை கடத்தி, ஆட்டோவில் வைத்து அடிவெளுத்திருக்கிறார்கள். இவையெல்லாம் முத்துவும் மீனாவும் சொல்லி தான் நடந்தது என நினைத்த ரோகிணி, நேராக சென்று மனோஜிடம் சொல்லி அழ, அவர் ரோகிணியை திட்டி துரத்திவிட்டுள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

26
முத்து மீனா மீது புகார்

முத்துவும் மீனாவும் ரோகிணியை அடித்ததாக மனோஜ் வீட்டில் வந்து சொல்ல, அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை, இதுகுறித்து முத்துவிடம் விசாரிக்கிறார். அப்போது உண்மையில் என்ன நடந்தது என்பதை கூறுகிறார் முத்து. அந்த விஷயத்தை பேசிக் கொண்டிருக்கும் போதே போலீஸ் வீட்டுக்கு வருகிறது. முத்து - மீனா மீது ரோகிணி என்பவர் புகார் அளித்திருப்பதாகவும், அதற்கான விசாரணைக்காக இன்ஸ்பெக்டர் உங்களை அழைத்து வரச் சொன்னதாகவும் சொல்ல, எல்லோரும் பதறிப் போகிறார்கள். பின்னர் முத்துவும் மீனாவும் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார்கள்.

36
விசாரணை நடத்தும் போலீஸ்

அங்கிருந்த ரோகிணி, இவங்க தான் என்னை அடிச்சாங்க என போலீஸிடம் சொல்ல, ஏண்டி இப்படி பச்சையா பொய் சொல்ற என சண்டைக்கு போகிறார் மீனா. அதோடு ரோகிணியின் கையை பிடித்தும் அடிக்க பார்க்கிறார். அப்போது பயந்து போலீஸ் அருகே சென்ற ரோகிணி, பாருங்க சார் உங்க முன்னாடியே என்னை அடிக்க வருகிறார்கள். இந்த முத்து சின்ன வயசுலயே கொல பண்ணிட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போனவர். இந்த மீனாவும் ரெளடி பொம்பளைங்கள கூட வச்சுகிட்டு மிரட்டி பூ ஆர்டர் எல்லாம் வாங்குவா என சொல்ல, போலீஸ் முத்து - மீனா மீது சந்தேகப்பட்டு எஃப் ஐ ஆர் பதிவு செய்ய சொல்கிறார்.

46
மனம் மாறும் போலீஸ்

அந்த நேரத்தில் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்த லேடி போலீஸ் ஒருவரின் மகன் சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவனது தொண்டையில் சிப்ஸ் மாட்டிக் கொள்கிறது. உடனே துரிதமாக செயல்பட்ட முத்து, அந்த சிறுவனை தலைகீழாக தூக்கி, தொண்டையில் சிக்கிய சிப்ஸை எடுக்க உதவினார். இதைப்பார்த்த போலீஸ், ஒரு சின்ன பையனுக்காக இவ்வளவு அக்கறை எடுத்து உதவியதை பார்த்து வியந்து எஃப் ஐ ஆர் போட வேண்டாம் என சொல்கிறார். ஏன் சார் வேண்டாம்னு சொல்றீங்க என ரோகிணி கேட்டதும், நீ உண்மையை தான் சொல்றியானு எனக்கு சந்தேகமா இருக்கு என கூறுகிறார்.

56
ரோகிணி மீது எஃப் ஐ ஆர் போட வேண்டாம்

அதன்பின்னர் ரோகிணி செய்த ஃபிராடு வேலைகளை ஒவ்வொன்றாக லிஸ்ட் போட்டு சொல்கிறார் முத்து. அப்போது அருணும் அங்கே வர, அவரும் ரோகிணிக்கு எதிராக பேச, உடனே சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் பொய்யா சொல்ற, உன்மேல தான் எஃப் ஐ ஆர் போடணும் என சொல்ல, அதெல்லாம் வேண்டாம் என கூறும் முத்து, தற்போது என்னோட அண்ணன் டைவர்ஸுக்கு அப்ளை பண்ணிருக்கான். இந்த நேரத்துல இந்த கேஸ் வேண்டாம் என கெஞ்சிக் கேட்டதும் போலீஸ் எஃப் ஐ ஆர் போடாமல் ரோகிணியை வார்னிங் பண்ணி அனுப்புகிறார்கள்.

66
சவால்விடும் ரோகிணி

பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வரும் முத்து - மீனாவிடம் பேசும் ரோகிணி, மனோஜ்கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கி என்னை அந்த குடும்பத்தில் இருந்து பிரிப்பேன்னு சொன்னேல்ல அது ஒருநாளும் நடக்காது. மனோஜ்கிட்ட இருந்து என்னை யாருமே பிரிக்க முடியாது. இதை உனக்கு அடங்கி ரோகிணியா நான் சொல்லல, என் வாழ்க்கையை காப்பாத்திக்க என்னவேணா செய்யுற கல்யாணியா சொல்றேன் என மிரட்டுகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் மீனா, ஆளப்பாரு சவால்விடுறாலாம். தூக்கி உள்ள வச்சிற போறாங்க போடி என சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories