எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இனி நீ எனக்கு வேண்டாம் என கூறி கதிரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளார் நந்தினி. அதன் பின் இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கதிர் மற்றும் ஞானம் இருவரும் வீட்டுக்குள் திரும்ப வந்துள்ளதால் அடுத்தடுத்து பிரச்சனைகள் வெடிக்க தொடங்கியுள்ளன. வீட்டுக்கு வந்த கையோடு விசாலாட்சியிடம் சண்டை போடும் கதிர், சமையலறைக்குள் சென்று தமிழ் சோறு பிசினஸ்க்காக ஜனனி வாங்கி வைத்திருந்த பொருட்களை எல்லாம் வெளியே கொண்டு வந்து போட்டு தீ வைத்துக் கொளுத்துகிறார். இதனை தடுக்க முயன்ற விசாலாட்சியையும் தரதரவன இழுத்துச் சென்று ரூமுக்குள் அடைத்து விடுகிறார் கதிர். வீட்டுக்கு சென்றால் பிரச்சனை வரும் என பயந்து ஜனனி, நந்தினி தர்ஷினி ஆகியோர் கடையிலேயே தங்கி விடுகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
விவாகரத்து கேட்கும் கதிர்
ஜனனி மற்றும் நந்தினி ஆகியோர் வீட்டுக்கு வந்தால் அவர்களிடம் தகராறு செய்யலாம் என வாசலிலேயே அமர்ந்திருக்கிறார் கதிர். அந்த நேரம் பார்த்து நந்தினி மற்றும் ரேணுகாவின் அம்மாக்கள் வீட்டுக்குள் வருகிறார்கள். வாசலில் பொருட்களை எல்லாம் தீயிட்டு கொளுத்தி இருப்பதை பார்த்து பதறிப் போகிறார்கள். பின்னர் அங்கிருந்த கதிரிடம் என்ன மாப்பிள்ளை ஆச்சு என நந்தினி என் அம்மா விசாரிக்க, உங்க கிட்ட எல்லாம் பேச ஒன்னும் இல்ல, முதல்ல என் பொண்ணு இங்க வரணும், அப்புறம் உங்க பொண்ணு இங்க வரணும். வந்து விவாகரத்து கொடுத்துவிட்டு மொத்தமா இந்த வீட்டை விட்டு கிளம்பி போகச் சொல்லுங்க என முகத்தில் அடித்தார் போல் சொல்கிறார் கதிர்.
34
ஜனனி கொடுக்கும் அட்வைஸ்
வீட்டுக்கு வந்திருக்கும் விஷயத்தை நந்தினியிடம் அவரது அம்மா போன் போட்டு சொல்லுகிறார். அதுமட்டுமின்றி கதிர் என்னவெல்லாம் சொன்னார் என்பதையும் போனில் சொல்ல, அதைக் கேட்டு கடுப்பாகும் நந்தினி, இதோ இப்பவே அங்க கிளம்பி வரேன். உடனே அவனுக்கு டைவர்ஸ் கொடுக்குற என சொல்கிறார். இதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஜனனி, அக்கா கொஞ்சம் பொறுமையா இருங்க, நீங்க அங்க போயி மொத்தமா சரண்டர் ஆகுங்க அப்படின்னு நான் சொல்லல, அங்க போயி அவனிடம் தெளிவாகப் பேசி ஒரு முடிவு எடுத்துவிட்டு வாங்க என ஜனனி சொல்ல, நந்தினியும் அவர் சொன்னபடியே வீட்டுக்குப் போய் கதிரிடம் பேச முடிவெடுக்கிறார்.
வீட்டுக்கு சென்று நந்தினி பொறுமையாக பேசிக் கொண்டிருக்க, கதிர் வழக்கம்போல் தன் ரவுடித்தனத்தை காட்டுகிறார். இதனால் கடுப்பாகும் நந்தினி, அங்கிருந்த தன் மகள் தாராவை அழைத்துக் கொண்டு, வாடி போலாம் உன் அப்பன் செத்துட்டான்னு நினைச்சுக்கோ என சொல்லி தாராவை அழைத்துச் செல்ல முயல்கிறார். அதனைத் தடுக்கும் கதிர், போகணும்னா நீ மட்டும் போ என் பொண்ணு என் கூட தான் இருப்பா என சொல்லி தாராவை தன் பக்கம் இழுக்கிறார். அப்போது நந்தினிக்கும் கதிருக்கும் இடையே கைகலப்பு ஆகிறது. அப்போது அறிவுக்கரசி தாராவை தரதரவென இழுத்துச் சென்று ரூமுக்குள் அடைக்கிறார். இதன்பின் என்ன ஆனது? நந்தினியும் கதிரும் டைவர்ஸ் செய்தார்களா? என்பதை இனிவரும் எபிசோடில் பார்க்கலாம்.