இன்றைய எபிசோட் முத்துவேல் வீட்டில் இருந்து கோமதி வெளியே வருவதில் இருந்து தொடங்குகிறது. ராஜியும் கோமதியும் கனத்த இதயத்துடன் வெளியேறினர். காவல்நிலையத்திற்கு வந்து ஆதரவு அளித்ததால், மீண்டும் ஒன்று சேருவோம் என்ற நம்பிக்கையில் வந்ததாக கோமதி அழுதுகொண்டே வெளியேறினார். தான் ஆசைப்பட்டது எதுவுமே நடக்காது என கோமதி வருத்தத்துடன் புலம்பியடி தாய் வீட்டில் இருந்து வெளியேறினார். அப்போது கடையில் இருந்து பாண்டியன் மற்றும் சரவணன் வந்ததால் கோமதி அதிர்ச்சியுடன் செய்வது அறியாமல் தவிக்கிறார்.
பாண்டியனிடம் உண்மையை சொன்ன கோமதி
பின்னர் வீட்டுக்கு வந்த பாண்டியனிடம், தான் அண்ணன் குடும்பத்துடன் தான் உறவாட போகவில்லை என கூறி தானாகவே அவரிடம் ஆஜராகிறார். நான் தான் எதுவுமே கேட்கவில்லையே என பாண்டியன் கூற, கோமதி ஏதேதோ பேசுகிறார். மேலும் நன்றி சொல்லிவிட்டு அவர்களை சாப்பிட கூப்பிட சென்றதாகவும் கோமதி தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மீனா, அவர்கள் என்ன சொன்னார்கள் என கேட்டார். அதற்கு கோமதி, தனது அண்ணன்கள் இருவரும் சாப்பிட வரமாட்டேன் என கூறிவிட்டதாக தெரிவித்தார். மனசு பதறும் வகையில் ஏதேனும் கூறினார்களா என சரவணன் கேட்க, ராஜியும் கோமதியும் உடனடியாக மறுத்தனர். காவல் நிலையத்திற்கு வந்ததால், மீண்டும் அவர்களுடன் உறவு கொண்டாடுவது சரியாக இருக்காது எனவும், அதனை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது என்றும் பாண்டியன் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு பிரச்சினை என்றால் நாமும் போகலாம் என்று கூறிய பாண்டியன், இனிமேல் உங்க அண்ணன் முத்துவேல் வீட்டில் சென்று நிற்க வேண்டாம் என கூறினார்.