விபத்தில் சிக்கிய நிலா... பொய் சொல்லி மாட்டிக் கொண்ட சேரன் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

Published : Jan 21, 2026, 11:01 AM IST

அய்யனார் துணை சீரியலில் சோழன் டைவர்ஸ் வேண்டும் என அடம்பிடித்து கேட்டதை நினைத்து நிலா அப்செட்டில் இருக்க, அவர் பைக்கில் செல்லும் போது விபத்திலும் சிக்கி இருக்கிறார்.

PREV
15
Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலில் சோழன் - நிலா இருவரும் விவாகரத்து வழக்குக்காக கோர்ட்டில் ஆஜராகி இருந்த நிலையில், விவாகரத்து முடிவில் உறுதியாக இருப்பதாக சோழன் நீதிபதியிடம் சொன்னதைக் கேட்டு நிலா அதிர்ச்சி அடைய, இதையடுத்து இருவரையும் கவுன்சிலிங் அனுப்பி உத்தரவிட்டார் நீதிபதி. அங்கும் தனக்கு டைவர்ஸ் தான் வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார் சோழன், இதையெல்லாம் பார்த்த நிலாவுக்கு சற்று டவுட் வருகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த சோழனிடம் நீ இப்படி அடம்பிடிப்பதால் நிலா மனசு மாறும்னு நினைக்காத என நடேசன் சொல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
சோழனுக்கு அட்வைஸ் பண்ணும் சேரன்

நடேசன் சொன்னதைக் கேட்டு சோழன் ஒருபுறம் பயந்துகொண்டே செல்கிறார். அதற்கு ஏற்றார்போல் சேரன், சோழனுக்கு போன் போட்டு, நீ ஏண்டா டைவர்ஸ் கொடுக்குறேன்னு ஒத்துக்கிட்ட என கேட்கிறார். சோழன் தன்னுடைய பிளானை சொல்லிவிடுகிறார். அதன்பின்னர் நீ கவலைப்படாத அண்ணேன் அவ்வளவு சீக்கிரம், நிலாவை விட்டுக் கொடுத்துட மாட்டேன் என சொல்கிறார். இப்ப கொடுக்க முடியாதுனு சொன்னா ஏன் தர மாட்டேங்குற என நிலா கேட்பாள். அதற்கு என்னிடம் பதில் இல்லை. அதனால் பாத்துக்கலாம். நிலாவுக்கு என்மீது பாசம் வரும், கண்டிப்பா அவளை விட்டுக்கொடுக்க மாட்டேன் என சேரனிடம் சோழன் சொல்கிறார்.

35
விபத்தில் சிக்கும் நிலா

சோழன் ஏன் இப்படி சொன்னான் என்கிற நினைப்பிலேயே இருக்கும் நிலா, ஆபிஸுக்கு பைக்கில் செல்லும் போது, விபத்தில் சிக்குகிறார். மனதில் சோழன் டைவர்ஸ் கேட்டதை நினைத்துக் கொண்டே செல்லும் அவர் வண்டி மீது மோதி விழுகிறார். அதில் நிலாவுக்கு எதுவும் காயம் ஏற்படாமல் தப்பிக்கிறார். பின்னர் பைக்கை எடுத்துக் கொண்டு ஆபிஸுக்கு செல்கிறார் நிலா. அங்கு ராகவ் வேண்டுமென்றே நிலா பக்கத்தில் வந்து அமர்கிறார். அப்போது நிலாவிடம் பேசும் ராகவ், வாங்க நம்ம வெளிய போய் டிஸ்கஸ் பண்ணுவோம் என அழைக்கிறார். ஆனால் நிலா வரவே முடியாது என சொல்லிவிடுகிறார்.

45
பாண்டியனிடம் போட்டு வாங்கும் வானதி

மறுபுறம் பாண்டியனின் கடைக்கு வரும் வானதி, அங்கு ஒரு சேரை போட்டு உட்கார்ந்து கொண்டு, வலவலவென பாண்டியனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது உங்க அண்ணனும் அந்த பொண்ணும் ரொமான்ஸ் பண்ணுவதை பார்த்தேன். அவங்களுக்கு எப்போ கல்யாணம் என வானதி கேட்க, சீக்கிரமாவே பண்ணப்போவதாக சொல்கிறார் பாண்டியன். அதன்பின்னர் நாமளும் கல்யாணம் பண்ணிக்கணும் என பாண்டியன் சொல்ல, உடனே வானதி, உங்க வீட்டுல ரெண்டு ரூம் தான இருக்கு, நாம கல்யாணம் பண்ணுனா மூணாவதா ஒரு ரூம் தேவைப்படுமே என சொல்ல, அதற்கு என்ன மேலே ஒரு ரூம் கட்டிக்கலாம் என கூறுகிறார் பாண்டியன்.

55
பொய் சொல்லி மாட்டிக் கொண்ட சேரன்

கடை திறந்து ஒரு வண்டி கூட வரலையே என கண்ணன் ரோட்டையே பார்த்துக் கொண்டிருக்க, அப்போது பேசும் வானதி, குத்துவிளக்கு ஏத்தி வச்சது உங்க அண்ணி தான் அப்புறம் எப்படி ஆள் வருவாங்க என சொல்லிக் கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்து வண்டிகள் வரத் தொடங்குகின்றன. உடனே நான் இங்க உட்கார்ந்திருப்பதால் தான் கூட்டம் வருது என தற்பெருமை பேசுகிறார் வானதி. பின்னர் வீட்டிற்க்கு சீக்கிரமே வரும் சேரன், ஒரு வளைகாப்பு பங்க்‌ஷன் இருப்பதாக பொய் சொல்லிவிட்டு டிப் டாப் ஆக கிளம்ப, அவர் பொய் சொல்கிறார் என்பதை சோழனும், பல்லவனும் கண்டுபிடிக்கிறார்கள். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories