ரோகிணியை கடத்தி கதற கதற அடித்தது யார்? முத்து - மீனா மீது விழும் பழி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்

Published : Jan 21, 2026, 09:57 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷின் ஸ்கூலுக்கு சென்றுகொண்டிருந்த ரோகிணியை ஒரு கும்பல் வந்து கடத்திச் சென்று தர்ம அடி கொடுத்திருக்கிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் மற்றும் ரோகிணிக்கு டைவர்ஸ் வாங்க அண்ணாமலை சம்மதித்ததை அடுத்து, அது தொடர்பாக வக்கீலை சந்திக்க சென்றிருக்கிறார் விஜயா. அப்போது அந்த வக்கீல் தன்னுடைய கணவரிடம் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அதைக்கேட்டு ஷாக் ஆன விஜயா என்ன நீங்க உங்க புருஷனிடம் சமைக்க சொல்றீங்க என கேட்க, அதற்கு அவர் என்னுடைய கணவர் ஹவுஸ் ஹஸ்பண்டா இருக்கார் என சொல்கிறார். இதையடுத்து டைவர்ஸ் மேட்டர் பற்றி பேசும் விஜயாவிடம் நீங்க அவசரப்பட்டு உங்க பையனுக்கு இன்னொரு பொண்ணு பாத்துராதீங்க என சொல்லும் வக்கீல் தற்போது வக்கீல் நோட்டீஸ் அனுப்பலாம் என சொல்கிறார்.

26
மீனா சொன்ன உண்மை

இதையடுத்து மீனாவின் அம்மா வீட்டில், சங்மித்திருந்த மீனாவின் பூக்கார தோழிகள், ரோகிணி விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சத்யா அவர்களிடம், முத்து மாமா கார் பிரேக் வயரை அறுத்துவிட்ட விஷயத்தையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க, அவர்கள் ரோகிணியை திட்டிதீர்க்கிறார்கள். அப்போது அங்கு வரும் மீனா, இந்த பூ ஆர்டர் கிரிஷின் ஸ்கூலுக்கு தான், நான் அங்கு சென்றால் கிரிஷ் என்னை பார்த்து அழுவான், அதேபோல் அந்த ரோகிணியும் அங்கு வருவாள் அவ மூஞ்சிலும் முழிக்க நேரிடும். அதனால் நீங்க இந்த பூக்களை அங்கு டெலிவரி செஞ்சிடுங்க என சொல்கிறார்.

36
குமுறும் மீனாவின் தோழிகள்

அப்போது ரோகிணி உங்களுக்கு பண்ணிய விஷயத்துக்கு அவ எங்க கையில கிடைச்சா அடிச்சு வெளுத்துருவோம் என அந்த பெண்கள் சொல்ல, அதெல்லாம் பண்ணாதீங்க என சொல்கிறார். பின்னர் ரோகிணியால் தான் என்னுடைய அம்மா கோவில் முன் போட்டிருந்த கடையை எடுத்திருக்கிறார்கள். வித்யா தான் இந்த விஷயத்தை எங்களிடம் சொன்னார் என கூறுகிறார் மீனா. இதைக்கேட்டு கடுப்பான அந்த பெண்கள், அப்போ அவளை சும்மா விடக் கூடாது என முடிவெடுக்கின்றனர். இதையடுத்து பூக்களை டெலிவரி கொடுக்க சத்யாவுடன் ஆட்டோவில் அவர்கள் கிளம்புகிறார்கள்.

46
கடத்தப்படும் ரோகிணி

செல்லும் வழியில் ரோகிணியை மடக்கிப் பிடிக்கும் அந்த பெண்கள், நீ எங்க அண்ணன் முத்துவையே கொல்லப்பார்ப்பியா என சொல்லி ரோகிணியிடம் பிரச்சனை பண்ணுகிறார்கள். அதற்கு ரோகிணி, அது எங்க பர்சனல் என திமிராக பேசுகிறார். உடனே அவரை தூக்கி ஆட்டோவுக்குள் போட்டு அடிவெளுக்கிறார்கள். அப்போது முத்துவிடம் போன் போட்டு, எங்க இருக்கீங்க என மீனாவின் தோழி கேட்க, அவர் கார் ஷெட்டில் இருப்பதாக சொன்னதும், ரோகிணியை அடித்தபடியே அங்கு வண்டியை விடுகிறார்கள். அங்கு வண்டி வந்து நிற்பதை பார்த்து முத்துவும் மீனாவும் ஷாக் ஆகிறார்கள்.

56
அடிவாங்கிய ரோகிணி

அப்போது வெளியே வரும் அந்த பெண்கள், ரோகிணியை அடிச்சு அமர வைத்திருப்பதை முத்துவும் மீனாவும் பார்த்து ஷாக் ஆகிறார்கள். அப்போது வெளியே வந்த ரோகிணியிடம் ஒழுங்கு மரியாதையா இவங்க கிட்ட மன்னிப்பு கேளு என அந்த பெண்கள் சொல்ல, ரோகிணியும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். காயங்களோடு ரோகிணி நேராக மனோஜின் ஷோரூமுக்கு செல்கிறார். அங்கு இவரைப் பார்த்து கோபமடையும் மனோஜ், எதுக்காக இங்க வந்த என கேட்க, உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும் என சொல்லி அழைத்துச் செல்கிறார்.

66
முத்து - மீனா மீது விழுந்த பழி

அப்போது முத்துவும் மீனாவும் தன்னை அடித்துவிட்டதாக சொல்லி மனோஜை கட்டிப் பிடித்து அழுகிறார் ரோகிணி. பின்னர் அவரை தள்ளிவிட்டு, நீ என் தம்பியை கொல்ல பாத்திருக்க, அதான் இப்படி செஞ்சிருப்பான். நீ இங்க இருந்து கிளம்பு என மூஞ்சில் அடிச்சது போல் சொல்லிவிடுகிறார் மனோஜ். பின்னர் வீட்டிலும் இந்த விஷயத்தை சொல்கிறார். அதன்பின்னர் முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வர, அவர்களிடம் ஏன் இப்படி ரோகிணியை அடிச்சீங்க என கேட்கிறார் அண்ணாமலை. நாங்கள் அடிக்கவில்லை என்று சொல்லும் முத்து, நடந்தவற்றை சொல்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories