எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள கதிர், ஜனனியை மிரட்டிவிட்டு வீட்டுக்கு சென்று தன்னுடைய ரெளடியிசத்தை ஆரம்பித்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இத்தனை நாட்களாக போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருந்த கதிர் மற்றும் ஞானம், தாங்கள் இருவரும் கேஸில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் இருவரும் வீட்டுக்கு வரும் முன் நேராக ஜனனி நடத்தும் தமிழ் சோறு ஃபுட் டிரக்கிற்கே நேராக விசிட் அடித்து அங்கு பிரச்சனை பண்ணி உள்ளனர். அதுமட்டுமின்றி இனி இந்த பிசினஸை நடத்தக் கூடாது என்றும், வீடு இனிமே பழைய மாதிரி மாறப்போவதாகவும் வாய்ச்சவடால் விட்டுச் சென்றிருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
கொளுத்தும் கதிர்
ஜனனியிடம் சண்டை போட்டுவிட்டு, நேராக வீட்டுக்கு சென்ற கதிர், அங்கு விசாலாட்சியிடம் என்னை பெத்தவளே, அந்த ஒரு காரணத்துக்காக உன்னை சும்மா விடுறேன் என சொல்லிவிட்டு, நேராக அடுப்படிக்குள் சென்று அங்கு தமிழ் சோறு பிசினஸிற்காக ஜனனி வாங்கி வைத்திருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே கொண்டு வந்து போடுவதோடு அதை தீயிட்டு கொழுத்துகிறார். கதிர் செய்யும் இந்த ரெளடித்தனம் எல்லாம் ஜனனிக்கு தெரியாமல் அவர் பிசினஸில் பிசியாக இருக்கிறார். கதிரை விசாலாட்சி தடுக்க முயல, அவரையும் ரூமுக்குள் போட்டு அடைக்கிறார் கதிர்.
34
வீதிக்கு வந்த பெண்கள்
கதிருக்கு பயந்து வீட்டுக்கு செல்லாமல் இருக்கும் பெண்கள், தங்களின் தமிழ் சோறு ஃபுட் டிரக் இருக்கும் இடத்திலேயே இரவு தங்குகிறார்கள். அப்போது ஜனனியிடம் பேசும் நந்தினி, அவன் எப்படி இந்த கேஸில் இருந்து வெளியே வந்தான். முதலில் அந்த கொற்றவைக்கு போன் போட்டு என்ன விஷயம்னு கேளு என ஜனனியிடம் கேட்கிறார் நந்தினி. இனி கதிரோடு வாழவே மாட்டேன் என்கிற முடிவில் இருக்கும் நந்தினியை சமாதானப்படுத்தும் விதமாக பேசும் ஜனனி, நீங்கள் தாராவுக்காக கொஞ்சம் யோசிக்கலாமே அக்கா என சொல்ல, நந்தினி அதெல்லாம் பார்த்துக்கலாம் என சொல்கிறார்.
தமிழ் சோறு பிசினஸுக்கு தேவையான சாப்பாடுகளை இனி வீட்டில் சமைக்க முடியாத நிலை வந்துள்ளதால் ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோர் என்ன செய்யப்போகிறார்கள்? கதிரின் ஆட்டத்திற்கு முடிவு கட்டுவாரா ஜனனி? அறிவுக்கரசி மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவாரா? பெண்கள் மீது அதிருப்தியில் இருக்கும் தர்ஷன், கதிர் குரூப் பக்கம் சாய்வாரா? தலைமறைவாக இருக்கும் ஆதி குணசேகரனை போலீஸ் கைது செய்யுமா? கதிர் vs ஜனனி இடையேயான மோதலில் வெல்லப்போவது யார்? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.