அசிங்கப்பட்ட முத்து... ரவியிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ருதியின் அப்பா - சிறகடிக்க ஆசை அப்டேட்

Published : Feb 03, 2026, 08:59 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் நீத்துவின் ரெஸ்டாரண்டை ஆள் வைத்து அடித்து உடைத்தது ஸ்ருதியின் அப்பா தான் என்கிற உண்மை ரவிக்கு தெரியவந்திருக்கிறது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் நீத்துவின் ரெஸ்டாரண்டை கொளுத்தியது மட்டுமின்றி நீத்துவையும் ஆள் வைத்து அடித்து உடைத்தது முத்து தான் என நினைத்து அவருடன் சண்டை போட்டிருக்கிறார் ரவி. அதேபோல் முத்துவுடன் ஏற்பட்ட மோதலால் மன உளைச்சலில் இருந்த செல்வம், காரில் செல்லும் போது அருணின் அம்மா மீது மோதி விடுகிறார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். இதையடுத்து செல்வம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அருணின் அம்மா உடலுக்கு அஞ்சலில் செலுத்த வந்த முத்துவை அருண் வாசலிலேயே தடுத்து நிறுத்தி உள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
முத்துவை பகைத்துக் கொள்ளும் அருண்

முத்து தன்னுடைய அம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த விடமாட்டேன் என ஒற்றைக் காலில் நிற்கிறார் அருண். அவரை ஸ்ருதி, மீனா, அண்ணாமலை என பலரும் சமாதானப்படுத்திப் பார்க்கிறார்கள். ஆனால் அவர் யாருடைய பேச்சையும் கேட்கவில்லை. என்னுடைய அம்மாவின் சாவுக்கு இவன் தான் காரணம். இவன் சொல்லி தான் அந்த செல்வம் என்னோட அம்மாவை கார் ஏத்தி கொன்றிருக்கிறான் என அருண் சொல்ல, கடைசியா ஒருமுறை அம்மா முகத்தை பார்த்துவிட்டு போகிறேன் என முத்து கெஞ்சிக் கேட்டும் நோ சொல்லிவிடுகிறார் அருண். இதன் பின்னர் முத்து அஞ்சலி செலுத்தாமலேயே அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

35
சிக்கிய ஸ்ருதியின் அப்பா

மறுபுறம் ஸ்ருதியின் அப்பா வீட்டிற்கு நீத்துவின் ரெஸ்டாரண்டை அடித்து நொறுக்கிய ரெளடிகள் வருகிறார்கள். அப்போது ஸ்ருதியும் வீட்டுக்கு வருகிறார். அந்த ரெளடிகளுக்கு தன் தந்தை காசு கொடுப்பதை பார்த்ததும், நீங்க தான் நீத்துவின் ரெஸ்டாரண்டை கொளுத்தியதா என கேட்க, அதற்கு அவரும் ஆமாம் என சொல்லிவிடுகிறார். என் மகள் வாழ்க்கையை கெடுக்கும் ஒருத்தியை நான் எப்படி சும்மா விட முடியும். அதனால் தான் இப்படியெல்லாம் செய்தேன் என கூறுகிறார் ஸ்ருதியின் தந்தை. நீங்கள் இப்படி செய்ததால் இனி நான் ரவியுடன் சேரவே முடியாது என புலம்புகிறார் ஸ்ருதி.

45
மீனாவுக்கு தெரியவரும் உண்மை

பின்னர் மீனாவுக்கு போன் போட்டு உண்மை எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறார் ஸ்ருதி. அவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் ஸ்ருதியின் அப்பா தான் நீத்துவை இப்படி செய்திருக்கிறார் என்கிற உண்மை போட்டுடைக்கிறார். அப்போது செல்வத்தின் மனைவி முத்துவை பார்க்க வீட்டுக்கு வருகிறார். தன் கணவரை எப்படியாவது ஜாமினில் வெளியே கொண்டு வர உதவுமாறு கெஞ்சிக் கேட்கிறார். செல்வத்தை ஜாமினில் எடுக்க உதவினால் அருண் கோபித்துக் கொள்வார் என தெரிந்தும் அவருக்கு உதவ சம்மதிக்கிறார் முத்து. இதுதொடர்பாக வக்கீல் ஒருவரை பார்க்கவும் கிளம்புகிறார்.

55
ரவி போட்ட கண்டிஷன்

நீத்துவை அடித்தது ஸ்ருதியின் தந்தை தான் என்கிற உண்மை தெரிந்ததும் வேக வேகமாக வீட்டிற்கு செல்லும் ரவி, ஸ்ருதியின் அப்பாவிடம் சண்டை போடுகிறார். வேறு யாராவது இப்படி செய்திருந்தால் அவர்களை நான் வேற மாதிரி டீல் பண்ணிருப்பேன். ஸ்ருதியின் அப்பா என்கிற ஒரே காரணத்தால் தான் நான் பணிந்து பேசுகிறேன். ஸ்ருதியின் ஆஸ்பத்திரி செல்வு 4 லட்சம், அவளுடைய ரெஸ்டாரண்டை சரிசெய்ய 5 லட்சம் என மொத்தம் 9 லட்சத்தை நீங்கள் கொடுக்க வேண்டும் என சொல்கிறார் ரவி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories