வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!

Published : Dec 23, 2025, 11:08 PM IST

Gomathy Feels Guilty for Lying to Her Husband Pandian : தனது இத்தனை ஆண்டு கால குடும்ப வாழ்க்கையில் உன்னுடைய கல்யாணத்துல மட்டுமே தான் நான் பொய் சொல்லியிருக்கிறேன் என்று கோமதி தனது மகன் கதிரிடம் சொல்லி அழுதார்.

PREV
17
pandian stores 2 today episode gomathy feels guilty for lying to Pandian

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனின் மனைவி கோமதி தனது இத்தனை ஆண்டுகால திருமண வாழ்க்கையில் கதிரின் திருமணத்தில் தான் பொய் சொல்லியிருப்பதாக கூறி அழுதுள்ளார். ஆனால், தனது வீட்டிற்கு மூத்த மருமகளாக வந்த தங்கமயில் அடுக்கடுக்காக பொய் சொன்னது மட்டுமின்றி தனது பொய்யை மறைக்க மகன் மீதே குற்றம் சாட்டினார். அதோடு அவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறினார்.

ஒரு பொய்யை மறைக்க இன்னொன்று, அதை மறைக்க இன்னொன்று, அதையும் மறைக்க இன்னொன்று என்று அடுத்தடுத்து பொய் சொல்லி கணவரையும், அவரது குடும்பத்தையும் மயில் ஏமாற்றி வந்துள்ளார். இந்த உண்மை தெரிந்து அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அதோடு இனிமேல் உன்னுடன் வாழ விருப்பமில்லை என்றும், விவாகரத்து வாங்கி கொடுத்துவிடுங்கள் என்றும் சரவணன் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

27
pandian stores 2 today episode

மேலும், தங்கமயில் வீட்டைவிட்டு துரத்தப்பட்ட நிலையில் இனிமேல் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை. இந்த சூழலில் குடும்பமே தங்கமயிலுக்கு எதிராக இருக்கும் போது மீனா மட்டும் அவருடன் ஒட்டி உறவாடி வருகிறார். இன்றைய 670ஆவது எபிசோடில் மீனாவைச் சந்தித்து பேசினார். தங்கமயிலின் வீட்டிற்கு சென்ற மீனா அவரிடம் மனசு விட்டு பேசியுள்ளார்.

வயசு, படிப்பு என்று எதுவும்பெரிய மேட்டரே இல்லை. ஆனால், நீங்கள் சொல்லாமல் மறைத்தது தான் இங்க பிரச்சனை என்று சொல்லி முடிப்பதற்குள்ளாக பாக்கியம் வேண்டுமென்றால் மறைக்கவில்லை. எங்களது நேரம் என்றார். இதற்கு மயில், நான் அப்போதே சொன்னேன். பொய் சொல்லி கல்யாணம் எல்லாம் செய்து வைக்க வேண்டாம் என்று. இவர்கள் கேட்கவில்லை. கல்யாணத்திற்கு பிறகு கூட உண்மையை சொல்லிவிடலாம் என்று கேட்டேன். ஆனால் இவர்கள் தான் இப்போதைக்கு உண்மையை சொல்ல வேண்டாம்.

37
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கோமதி வருத்தம்

எப்படியாவது சமாளித்து குடும்பத்தை நடத்து என்று என்னிடம் சொன்னார்கள். அதனால் தான் நானும் சொல்லாமல் விட்டுவிட்டேன். உன்னிடமாவது நான் சொல்லியிருக்கலாம். ஆனால், சொல்லவில்லை. உன்னிடம் ஒரு பொய், ராஜீயிடம் ஒரு பொய், அத்தை மாமாவிடம் ஒரு பொய் என்று சொல்லி சொல்லி இப்போது இந்த நிலைமையில் வந்து இருக்கிறேன். பெத்தவங்க பேச்சை கேட்டால் நல்லா இருக்கலாம் என்று யாராவது என்னிடம் வந்து சொல்வார்கள். ஆனால், என்னிடம் யாராவது வந்து கேட்டால் நான் அதெல்லாம் முழுக்க முழுக்க தப்பு. அவர்கள் பேச்சை மட்டும் தயவு செய்து கேட்காதீங்க என்று தான் சொல்வேன்.

47
Vijay TV Serial Update Tamil 2025

இனிமேல் நான் அந்த வீட்டிற்கு வர முடியாதா? மாமா எனக்கு விவாகரத்து கொடுத்துவிடுவாரா என்று மீனாவிடம் கேட்டார். மேலும், நான் மாமாவிடம் பேசவா? இல்லையென்றால் அவரிடம் நேரில் சென்று பேசலாமா? எனக்கு என்னுடைய வாழ்க்கை திரும்ப வேண்டும் என்றார். இதற்கு மீனாவோ, விவாகரத்து எல்லாம் உடனே கொடுக்க மாட்டார்கள். அதற்கு கோர்ட், கேஸ் என்று இருக்கு. அதே போன்று எதையும் உடனுக்குடன் செய்து விட முடியாது என்றார். இப்போதைக்கு நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. சரவணன் மாமாவிடம் பேச கூடாது. இந்த பிரச்சனையை அப்படியே ஆரப்போடுங்கள். எல்லோருமே மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார்.

57
Thangamayil Lies Exposed in Pandian Stores

கடைசியாக அந்த நகை மேட்டரை பற்றி வெளியில் சொல்லிவிடாதீர்கள் என்று பாக்கியம் சொல்ல, நாங்களாவே எதுவும் சொல்லமாட்டோம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். தங்கமயில் வீட்டிற்கு மீனா வந்த விஷயம் செந்திலுக்கோ, கோமதிக்கோ தெரிந்தால் பிரச்சனை வரக் கூடும். செந்தில் மற்றும் மீனா இடையில் சண்டை வரக் கூடும் என்று தெரிகிறது. அடுத்த காட்சியாக டீ கடைக்கு சென்ற பாண்டியன் மற்றும் சரவணனிடம் சக்திவேல் குத்திக்காட்டுவது போன்று பேசி அவர்களிடம் வம்பிழுத்தார்.

67
Gomathy Guilty for Lying to Pandian

கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பாண்டியன், சக்திவேலுவிடம் வாக்குவாதம் செய்ய முயன்றார். ஆனால், சரவணன் அவரை தடுத்து நிறுத்தி அங்கிருந்து கூட்டிச் சென்றார். கடைசியாக கதிர், ராஜீ மற்றும் கோமதி தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், கோமதி இத்தனை வருடங்களில் நான் ஒரு பொய் கூட சொன்னது இல்லை. உனக்கும் ராஜீக்கும் இடையில் நடந்த திருமணத்தைத் தொடர்ந்து வேறு எந்த பொய்யும் நான் சொன்னதில்லை. ஆனால், அதையே என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

77
Pandian Stores 2 Today Episode

ஆனால், ஒரு பொண்ணாக இருந்து கொண்டு எப்படி இப்படியெல்லாம் பொய் சொல்லிவிட்டு அவனுடன் சேர்ந்து வாழ முடியும் என்று கேள்வி எழுப்பினார். மேலும், எப்படியெல்லாம் நாடகம் ஆடினார். தெருவில் நின்று அவமானப்படுத்தியது தான் மிச்சம் என்றார். இதையடுத்து பழனிவேலுவின் காட்சி ஒளிபரப்பானது. தனது அக்கா வீட்டில் இப்படியொரு சம்பவம் நடந்த பிறகு அவரால் வியாபாரத்தை கூட சரிவர கவனிக்க முடியவில்லை. ஒரு வாடிக்கையாளர் வெல்லம் கேட்கவே, பழனிவேல் இல்லை சாயங்காலம் தான் வரும் என்றார். அதற்கு சுகன்யாவோ காலையிலேயே வந்துவிட்டது என்றார். பிறகு பழனிவேல் வெல்லம் எடுத்து கொடுத்தார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories