
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் தனது டிராமாவை மீனாவிடம் அரங்கேற்றிய நிலையில் இன்றைய 670ஆவது எபிசோடில் தங்கமயிலின் வீட்டிற்கு மீனா வந்துள்ளார். அவரை பார்த்த பின்னர் தான் தங்கமயில் சற்று ஆறுதல் அடைந்தார். அவரை பார்த்து கட்டியணைத்துக் கொண்டார். இதுவும் டிராமா தான் என்று பார்க்கும் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால், மீனாவிற்கு தெரியவில்லை.
இவ்வளவு தூரம் பிரச்சனைகள் வந்த பிறகு அந்த நகையைப் பற்றி தங்கமயிலே உண்மையை சொல்லியிருந்தால், அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்திருக்கும். ஆனால், தங்கமயில் அப்படி செய்யவில்லை. உன்னை பார்த்த பிறகு தான் நிம்மதி வந்தது. வீட்டில் எல்லோரும் எப்படியிருக்கிறார்கள். அவர் எப்படி இருக்கிறார் என்று மயில் நலம் விசாரித்தார். விவாகரத்து வேண்டாம் என்று யாராவது மாமாவிடம் சொன்னார்களா? எல்லோரும் அந்த முடிவில் தான் இருக்கிறார்களா என்று மயில் கேட்டார்.
அவரது அப்பாவோ எம் ஏ படித்திருப்பதாக சொல்லி வேலைக்கு சேர்ந்தால் தான் தப்பு. ஆனால், நாங்கள் கல்யாணம் தான் செய்து வைத்தோம், அதே போன்று தான் வயது வித்தியாசமும் 2 தான் என்று தங்களது பொய்யை நியாயப்படுத்தினார். இதற்கு மீனாவோ, வயது எல்லாம் பெரிய மேட்டரே இல்லை. ஆனால், நீங்கள் சொல்லாமல் மறைத்தது தான் இங்க பிரச்சனை என்று சொல்லி முடிப்பதற்குள்ளாக பாக்கியம் வேண்டுமென்றால் மறைக்கவில்லை. எங்களது நேரம் என்றார். இதற்கு மயில், நான் அப்போதே சொன்னேன். பொய் சொல்லி கல்யாணம் எல்லாம் செய்து வைக்க வேண்டாம் என்று. இவர்கள் கேட்கவில்லை. கல்யாணத்திற்கு பிறகு கூட உண்மையை சொல்லிவிடலாம் என்று கேட்டேன். ஆனால் இவர்கள் தான் இப்போதைக்கு உண்மையை சொல்ல வேண்டாம்.
எப்படியாவது சமாளித்து குடும்பத்தை நடத்து என்று என்னிடம் சொன்னார்கள். அதனால் தான் நானும் சொல்லாமல் விட்டுவிட்டேன். உன்னிடமாவது நான் சொல்லியிருக்கலாம். ஆனால், சொல்லவில்லை. உன்னிடம் ஒரு பொய், ராஜீயிடம் ஒரு பொய், அத்தை மாமாவிடம் ஒரு பொய் என்று சொல்லி சொல்லி இப்போது இந்த நிலைமையில் வந்து இருக்கிறேன். பெத்தவங்க பேச்சை கேட்டால் நல்லா இருக்கலாம் என்று யாராவது என்னிடம் வந்து சொல்வார்கள். ஆனால், என்னிடம் யாராவது வந்து கேட்டால் நான் அதெல்லாம் முழுக்க முழுக்க தப்பு. அவர்கள் பேச்சை மட்டும் தயவு செய்து கேட்காதீங்க என்று தான் சொல்வேன்.
இனிமேல் நான் அந்த வீட்டிற்கு வர முடியாதா? மாமா எனக்கு விவாகரத்து கொடுத்துவிடுவாரா என்று மீனாவிடம் கேட்டார். மேலும், நான் மாமாவிடம் பேசவா? இல்லையென்றால் அவரிடம் நேரில் சென்று பேசலாமா? எனக்கு என்னுடைய வாழ்க்கை திரும்ப வேண்டும் என்றார். இதற்கு மீனாவோ, விவாகரத்து எல்லாம் உடனே கொடுக்க மாட்டார்கள். அதற்கு கோர்ட், கேஸ் என்று இருக்கு. அதே போன்று எதையும் உடனுக்குடன் செய்து விட முடியாது என்றார். இப்போதைக்கு நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. சரவணன் மாமாவிடம் பேச கூடாது. இந்த பிரச்சனையை அப்படியே ஆரப்போடுங்கள். எல்லோருமே மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார்.
கடைசியாக அந்த நகை மேட்டரை பற்றி வெளியில் சொல்லிவிடாதீர்கள் என்று பாக்கியம் சொல்ல, நாங்களாவே எதுவும் சொல்லமாட்டோம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். தங்கமயில் வீட்டிற்கு மீனா வந்த விஷயம் செந்திலுக்கோ, கோமதிக்கோ தெரிந்தால் பிரச்சனை வரக் கூடும். செந்தில் மற்றும் மீனா இடையில் சண்டை வரக் கூடும் என்று தெரிகிறது. அடுத்த காட்சியாக டீ கடைக்கு சென்ற பாண்டியன் மற்றும் சரவணனிடம் சக்திவேல் குத்திக்காட்டுவது போன்று பேசி அவர்களிடம் வம்பிழுத்தார்.
கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பாண்டியன், சக்திவேலுவிடம் வாக்குவாதம் செய்ய முயன்றார். ஆனால், சரவணன் அவரை தடுத்து நிறுத்தி அங்கிருந்து கூட்டிச் சென்றார். கடைசியாக கதிர், ராஜீ மற்றும் கோமதி தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், கோமதி இத்தனை வருடங்களில் நான் ஒரு பொய் கூட சொன்னது இல்லை. உனக்கும் ராஜீக்கும் இடையில் நடந்த திருமணத்தைத் தொடர்ந்து வேறு எந்த பொய்யும் நான் சொன்னதில்லை. ஆனால், அதையே என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஆனால், ஒரு பொண்ணாக இருந்து கொண்டு எப்படி இப்படியெல்லாம் பொய் சொல்லிவிட்டு அவனுடன் சேர்ந்து வாழ முடியும் என்று கேள்வி எழுப்பினார். மேலும், எப்படியெல்லாம் நாடகம் ஆடினார். தெருவில் நின்று அவமானப்படுத்தியது தான் மிச்சம் என்றார். இதையடுத்து பழனிவேலுவின் காட்சி ஒளிபரப்பானது. தனது அக்கா வீட்டில் இப்படியொரு சம்பவம் நடந்த பிறகு அவரால் வியாபாரத்தை கூட சரிவர கவனிக்க முடியவில்லை. ஒரு வாடிக்கையாளர் வெல்லம் கேட்கவே, பழனிவேல் இல்லை சாயங்காலம் தான் வரும் என்றார். அதற்கு சுகன்யாவோ காலையிலேயே வந்துவிட்டது என்றார். பிறகு பழனிவேல் வெல்லம் எடுத்து கொடுத்தார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.