ரூ.10 லட்சம் பரிசு தொகை; குடும்பத்தை மீறி டான்ஸ் போட்டிக்கு சென்ற ராஜீக்கு என்ன நடக்கிறது? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

Published : Aug 31, 2025, 07:30 PM IST

Pandian Stores 2 This Week Promo : குடும்பத்தினரின் பேச்சைக் கேட்காமல் டான்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக ராஜீ செல்லும் காட்சிகள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

PREV
15
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இந்த வார புரோமோ வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் குமரவேல் மீது கொடுத்திருக்கும் வழக்கை திரும்ப பெறுவது பற்றி ராஜீ மற்றும் கதிர் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், ரூ.10 லட்சம் பரிசுத் தொகையோடு டான்ஸ் போட்டி பற்றி ராஜீ பேப்பரில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டார். இதே போன்று, குமரவேலுவிற்கு முத்துவேல் பெண் பார்த்திருந்தார். அந்த பெண் வீட்டார் நிச்சயம் செய்ய குமரவேல் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார். இது பற்றி சுகன்யா அரசியிடம் கூற, மீனா மற்றும் ராஜீ இருவரும் இதைப் பற்றி அரசி தெரிந்து என்ன செய்யப் போகிறார். நீங்கள் ஏன், இதைப் பற்றி அரசியிடம் கூறுகிறீர்கள் என்று இருவரும் கேட்டுக் கொண்டிருக்க பழனிவேல் அங்கு வந்துவிட்டார்.

25
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 செப்டம்பர் 1 முதல் 6 வரை புரோமோ

அதோடு கடந்த வார எபிசோடு முடிவுற்றது. இனி இந்த வாரம் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஏற்கனவே டான்ஸ் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று ராஜீ முடிவு செய்திருந்தார். அதைப் பற்றி கதிரிடம் கூறியிருக்கிறார். அதில் கதிருக்கு விருப்பம் என்றாலும் கூட அவரது அப்பாவிற்கு இதில் துளி கூட இருப்பம் இல்லை. இந்த சூழலில் ராஜீ அதற்காக பாண்டியனிடம் டான்ஸ் போட்டியில் பங்கேற்க அனுமதி கேட்கிறார்.

35
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

பாண்டியனுக்கு விருப்பம் இல்லாத சூழலில் ராஜி அந்த டான்ஸ் போட்டியில் பங்கேற்க புறப்பட்டுச் செல்கிறார். அங்கு ராஜீக்கு என்ன நடக்கிறது என்பது தான் இந்த வாரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. Rising Stars ஆடுங்க ஸ்டார் ஆகுங்க என்ற டான்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளே வரும் ராஜீ ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார். அப்போது நிறுத்து, என்ன இவ்வளவு தயங்கி தயங்கி ஆடிக்கிட்டு இருக்க, பொன்னு ரொம்ப பயப்படுது, மாஸ்டர் கூட ஆடி என்கரேஜ் பண்ணுங்க என்று மாஸ்டரை சொல்ல, அவரும் ராஜீயின் கை பிடித்து டான்ஸ் ஆடுகிறார்.

45
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

இது ராஜீக்கு பிடிக்காமல் வெளியில் ஓடி வருகிறார். அப்போது கதிர் போன் போட்டு எல்லாமே ஓகே தானா என்று கேட்கிறார். அப்போது கதிரிடம் தனது நிலைமையை சொல்ல முடியாமல் ராஜீ தவிக்கிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புரோமோ வீடியோ முடிகிறது. ராஜீ மட்டுமே தனியாக இந்த டான்ஸ் போட்டிக்கு வந்த சூழலில் இனி குமரவேல் அல்லது முத்துவேல் தான் அவருக்கு பக்க பலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

55
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

அந்த காட்சிகள் இந்த புரோமோவில் இடம் பெறவில்லை. ஏற்கனவே ராஜீயைப் பற்றி நன்கு அறிந்து கொண்ட குமரவேல் தனது தங்கைக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்து அந்த மாஸ்டரிடம் சண்டை போடலாம் என்று தெரிகிறது. இது போன்ற காட்சிகள் பாட்ஷா படத்தில் இடம் பெற்றிருந்தது. அதில், தனது தங்கைக்கு மெடிக்கல் காலேஜ் சீட் கிடைக்க அண்ணன் வந்து தன்னைப் பற்றி சொல்லி அவருக்கு சீட் வாங்கி கொடுப்பார். அது போன்று தங்கைக்காக வந்து மாஸ்டரிடம் சண்டை போடலாம் என்று தெரிகிறது.

ஆனால், இதெல்லாம் புரோமோவில் இடம் பெறவில்லை. கதிர் மற்றும் ராஜீ இருவரும் பெசுவதோடு மட்டும் புரோமோ முடிந்துவிட்டது அதன் பிறகு இது நடக்கும், அது நடக்கும் என்பது பற்றி கூறியது எல்லாம் கற்பனை தான். இந்த வாரம் நடப்பதை வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories