'குக் வித் கோமாளி 6’-ஐ பதம் பார்த்த 'டாப் குக்கு டூப் குக்கு 2'... சல்லி சல்லியாய் நொறுக்கப்பட்ட TRP சாதனை..!

Published : Aug 30, 2025, 11:58 AM IST

டிஆர்பியில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சாதனையை சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி முறியடித்து மாஸ் காட்டி உள்ளது.

PREV
14
Top Cooku Dupe Cooku 2 vs Cook With Comali 6 TRP

ரியாலிட்டி ஷோவுக்கு பெயர் போனது விஜய் டிவி, ஆனால் சமீபகாலமாக அதற்கு போட்டியாக சன் டிவியும் புதிது புதிதாக ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் பிக் பாஸுக்கு அடுத்தபடியாக, டிஆர்பியில் கிங் ஆக இருக்கும் ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சியின் முதல் சீசன் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் சீசனே வேறலெவல் ஹிட் ஆனதை தொடர்ந்து ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

24
குக் வித் கோமாளி சீசன் 6

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. இதில் ராஜு, ஷபானா, பிரியா ராமன், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜாங்கிரி மதுமிதா, உமைர், நந்தகுமார் ஆகியோர் போட்டியாளராக கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி இரண்டு மாதங்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு மற்றும் கெளஷிக் ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள். அதேபோல் கோமாளிகளாக புகழ், குரேஷி, தங்கதுரை, ராமர், செளந்தர்யா, சுனிதா, சர்ஜின் ஆகியோர் கலக்கி வருகிறார்கள்.

34
டாப் குக்கு டூப் குக்கு 2

குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்கிற நிகழ்ச்சி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முதல் சீசன் சக்சஸ் ஆன நிலையில், இரண்டாவது சீசனை இம்மாதம் தொடங்கினர். அதில் குக்குகளாக கிரண், ரோபோ சங்கர், டெல்னா டேவிஸ், பெசண்ட் ரவி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் டூப் குக்குகளாக ஜிபி முத்து, மோனிஷா, கமலேஷ், அதிர்ச்சி அருண் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவர்களை வழிநடத்தும் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் ராம்குமார் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் சிவாங்கி தொகுப்பாளினியாக களமிறங்கி உள்ளார்.

44
டிஆர்பி நிலவரம்

இந்நிலையில் இரண்டு நிகழ்ச்சிகளின் ஒப்பனிங் வாரத்திற்கான டிஆர்பி நிலவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சி முதல் வாரத்தில் வெறும் 2.79 டிஆர்பி ரேட்டிங்கை தான் பெற்றிருந்தது. ஆனால் டாப் குக் டூப் குக்கு சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே 3.29 டிஆர்பி ரேட்டிங்கை பெற்று அசத்தி உள்ளது. இத்தனைக்கும் குக் வித் கோமாளி இரவு பிரைம் டைமில் ஒளிபரப்பாகிறது. ஆனால் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகியும் இவ்வளவி டிஆர்பியை பெற்றிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories