Pandian Stores 2: யாருமே செய்யாத மேஜிக்! விஜய் டிவியின் ஒட்டுமொத்த ஸ்லாட்டையும் தட்டித்தூக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி!

Published : Feb 04, 2026, 05:59 PM IST

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஜோடி சின்னத்திரையில் புதிய சாதனை படைக்க உள்ளனர். ஒரே சேனலில், ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் முதல் ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெறுகின்றனர். 

PREV
16
சாதனை படைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஜோடிகள்

சின்னத்திரை வரலாற்றில் இதுவரை எந்தவொரு முன்னணி ஜோடியும் செய்யாத ஒரு சாதனையை, தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஜோடிகள் நிகழ்த்தப் போகிறார்கள். விஜய் டிவியின் ஒட்டுமொத்த டிஆர்பி ரேட்டிங்கையும் வளைத்துப் போடும் வகையில் ஒரு மெகா பிளான் தயாராகி வருகிறது.

26
ஒரே சேனல்.. ஒரே ஜோடி.. இரண்டு சீரியல்கள்!

பொதுவாக ஒரு சீரியலில் பிஸியாக இருக்கும் நடிகர், நடிகைகள் மற்றொரு சீரியலில் கமிட் ஆவது வழக்கம். ஆனால், ஒரே சேனலில், ஒரே சமயத்தில் ஒளிபரப்பாகும் இரண்டு வெவ்வேறு சீரியல்களில் அதே ஜோடி மீண்டும் ஜோடியாகவே நடிப்பது என்பது இதுவரை நடக்காத ஒரு மேஜிக். அந்த சாதனையைத் தான் ஸ்டாலின் - நிரோஷா கூட்டணி தற்போது செய்திருக்கிறது.

36
இரவு மட்டுமல்ல.. இனி பகலிலும் இவங்கதான்!

தற்போது இரவு நேர பிரைம் டைமில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் - தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' சீரியலில் பாண்டியன் மற்றும் கோமதி கதாபாத்திரங்களில் ஸ்டாலினும் நிரோஷாவும் கலக்கி வருகின்றனர். இவர்களது எதார்த்தமான நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த விஜய் டிவி நிர்வாகம், இவர்களை வைத்து மதிய நேர ஸ்லாட்டிலும் ஒரு புதிய சீரியலைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

46
சின்னத்திரை வட்டாரத் தகவல்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்போது சேனலின் அடையாளமாக மாறிவிட்டது. அந்த ஜோடிக்கு மக்களிடையே இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, பகல் நேரத்திலும் டிஆர்பி-யை உயர்த்தவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என சின்னத்திரை வட்டாரத் தகவலாகும்.

56
புதிய சீரியலின் ஸ்பெஷல் என்ன?

பாண்டியன் ஸ்டோர்ஸில் கண்டிப்பான கணவன் - அமைதியான மனைவியாக வலம் வரும் இவர்கள், இந்தப் புதிய சீரியலில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு குடும்பப் பாங்கான கதையாக இருந்தாலும், நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் எனத் தெரிகிறது.

66
ரசிகர்கள் உற்சாகம்

ஒரே நாளில் இரண்டு முறை தங்களுக்குப் பிடித்த ஜோடியைத் திரையில் பார்க்கப்போகும் ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். "விஜய் டிவியின் இந்த மாஸ்டர் பிளான் கண்டிப்பாக ஒர்க்-அவுட் ஆகும்" என சமூக வலைதளங்களில் கமெண்ட்கள் குவிகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories