ரூ.5 கோடிக்கு பதிலாக ரூ.50 கோடி கொடுக்கும் சந்திரகலா ; கார்த்திக்கின் இடத்தை ஆட்டைய போட நியூ பிளான்!

Published : Feb 04, 2026, 05:35 PM IST

Chandrakala Ready to Give Rs 50 Crore in Karthigai Deepam Serial : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Zee Tamil Serial Karthigai Deepam Serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கார்த்திக் இப்போது தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற அவர் கொடுத்த இடத்தில் ஆதரவற்றோருக்கு உதவும் வகையில் ஒரு விடுதி கட்ட திட்டமிட்டுள்ளார். இதற்காக ரூ.5 கோடிக்காக நிபந்தனையாக வைத்திருந்த தனது இடத்தை வட்டியும், அசலும் கட்டி மீட்க திட்டமிட்டார்.

24
Karthigai Deepam Serial Update

இதற்காக தனது இடத்தை கொடுத்த சேட்டு வீட்டுக்கு சென்றார். ஆனால், அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு அவரது மகனிடம் பேசினார். அவரும் டாக்குமெண்டை தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால், வருவதற்கு 2 நாட்கள் ஆகும் என்றார். கார்த்திக்கும் அதுவரையில் வெயிட் பண்ணுறேன் என்று சொல்லிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

34
Karthigai Deepam Indraya Episode

கார்த்திக் பேசுவதையெல்லாம் ஒட்டுக் கேட்ட சந்திரகலா, தனது கணவரிடம் சொல்லவே அவருடம் சேட்டின் மகன் இருக்கும் இடத்திற்கு சென்று ரூ.5 கோடிக்கு பதிலாக ரூ.50 கோடி கொடுப்பதாக கூறி அந்த பத்திரத்தை மட்டும் தரும்படி கேட்டார். இதற்கு 2 நாட்கள் அவகாசமும் கொடுத்தார். ஆனால், சந்திரகலா உடனே ரூ.50 கோடி தருவதாகவும், பத்திரத்தை உடனே மீட்க வேண்டும் என்றும் தனது கணவரை வற்புறுத்தினார்.

44
Karthigai Deepam Serial Today Episode,

இதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாத கார்த்திக் ஆதரவற்றோர் விடுதி கட்டுவதற்கான பூமி பூஜை போடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். எப்படியும், கார்த்திக்கை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று விடாப்பிடியாக சந்திரகலா இருக்கும் நிலையில் கார்த்திக் எப்படியாவது தனது அத்தையை கூட்டிக்கொண்டு சென்று பூமி பூஜை போட வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார். இதில், கார்த்திக் வெற்றி பெற்றால் சந்திரகலா தான் கட்டும் ஆதரவற்றோர் விடுதியில் தினமும் கூட்டி பெருக்கி வேலை பார்க்க வேண்டும் என்று சபதம் போட்டுள்ளார். என்ன நடக்கிறது என்பது பற்றி இன்று இரவு ஒளிபரப்பு செய்யப்படும் கார்த்திகை தீபம் சீரியலை பார்த்து தெரிந்து கொள்வோம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories