பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணனிடம் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சொன்ன தங்கமயிலுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் அவருடைய அம்மா பாக்கியத்துக்கு தெரிந்ததை அடுத்து உடனே மகளை மாமியார் வீட்டில் கொண்டு போய் விட்டுவிடலாம் என பிளான் போட்டு, பெட்டி, படுக்கையெல்லாம் எடுத்துட்டு கிளம்பச் சொல்கிறார். ஆனால் மீனா அவரை தடுத்து நிறுத்தி, முதலில் இந்த விஷயத்தை சரவணனிடம் சொல்லட்டும், அதன் பின்னர் வீட்டில் சொல்லலாம் என கூறுகிறார். தங்கமயிலோ சரவணனிடம் போனில் சொல்லாமல் நேரில் தான் சொல்லுவேன் என கூறுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
சரவணனை சந்திக்கும் தங்கமயில்
இதையடுத்து சரவணன், தங்கமயிலை பார்க்க கோவில் குளம் அருகே வருகிறார். அப்போது. தங்கமயில் அவரிடம் மாமா என ஆசையோடு பேசப்போக, அதற்கு சரவணன், நான் தான் உன்னை பார்க்கவே புடிக்கலனு சொன்னேன்ல, அப்புறம் ஏன் என்னைய வரச் சொன்ன என கேட்க, அதற்கு தங்கமயில் நான் ஒரு நல்ல விஷயம் சொல்லப்போறேன். இது நமக்கு மட்டுமில்ல, நம்ம குடும்பத்துல எல்லாருக்குமே நல்ல விஷயம், பிரிஞ்சிருக்க நம்மளோட குடும்பமே இந்த விஷயத்தை கேட்டால் ஒன்றிணைந்துவிடும் என கூறுகிறார். நான் மாசமா இருக்கேன் மாமா என கூறுகிறார்.
35
இது கனவா? இல்லை நிஜமா?
இதைக்கேட்ட சரவணன், என்ன டிராமா போடுறியா என கேட்க, இல்ல மாமா நான் டாக்டர்கிட்ட போய் விசாரிச்சோம், நமக்கு பாப்பா வரப்போகுது என கூறுகிறார். அதன்பின்னர் சரவணன் கண்கலங்க, அவர் கையை பிடித்து தன் வயிற்றில் வைக்கிறார் தங்கமயில். உடனே சந்தோஷத்தில் திளைத்துப் போன சரவணன், ரொம்ப சந்தோஷமா இருக்கும் மயிலு என கூறி அவரை அலேக்காக தூக்கி, நான் அப்பா ஆகப்போறேன் என சுற்றுவது போல் காட்டுகிறார்கள். அதிலேயே தெரிகிறது நிச்சயம் இது கனவாக தான் இருக்கும் என்று. நாம் எதிர்பார்த்தபடியே அது தங்கமயிலின் கனவாக தான் இருக்கிறது.
மறுபுறம் கோமதி வீட்டில் இருக்கும் காந்திமதிக்கு தடபுடல் விருந்து போடப்படுகிறது. இதையடுத்து அம்மாவை வீட்டை விட்டு துரத்திய சக்திவேலிடம் நீங்க பண்ணுனது ரொம்ப தப்பு என குமார் சொல்லிக் கொண்டிருக்க, அப்போது அங்கு முத்துவேல் வருகிறார். ஊரில் இருந்து வந்த கையோடு, சக்திவேலை திட்டும் முத்துவேல், நீ அம்மாவை வீட்டை விட்டு அணுப்புனது ரொம்ப தப்பு, ஒழுங்கா அம்மாவை போய் கூட்டிட்டு வா என சொல்கிறார். அதற்கு சக்திவேல் மறுக்க, உடனே முத்துவேல் நானே போய் அம்மாவை கூட்டிட்டு வர்றேன் என சொல்லிக் கொண்டு கோமதி வீட்டு வாசலுக்கு செல்கிறார்.
55
வீட்டுக்கு செல்ல மறுக்கும் காந்திமதி
அங்கு வாசலில் இருந்து அம்மாவை அவர் அழைக்க, காந்திமதி, கோமதி உள்பட அனைவரும் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள். அப்போது தன்னுடைய அம்மாவை வீட்டுக்கு வாங்க என கூப்பிடுகிறார் முத்துவேல், அதற்கு நான் இனி அந்த வீட்டுக்கு வரமாட்டேன் என சொல்லும் காந்திமதி, எனக்கு தான் அந்த வீட்டில் உரிமையே இல்லையே, அப்புறம் ஏன் நான் அங்க வரணும் என கேட்கிறார். உனக்கு உரிமை இல்லையா யார் சொன்னது என கேட்க, உன் தம்பி தான் சொன்னான் என காந்திமதி கூறுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.