அறிவுக்கரசிக்கு ஆப்பு வைத்த ஆதி குணசேகரன்... தர்ணாவில் இறங்கும் தர்ஷினி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

Published : Mar 03, 2026, 11:18 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரிக்காக மருத்துவமனையில் காசு கட்ட தான் தயாராக இருப்பதாக ஆதி குணசேகரன் சொல்ல, அதற்கு தர்ஷினி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், அவரை இன்னும் ஒரு வாரத்தில் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என டாக்டர் சொன்னதோடு, மிகப்பெரிய தொகையை செலுத்த வேண்டியிருக்கும் எனவும் கூறி இருக்கிறார். இதனால் அந்த பணத்தை ரெடி பண்ணிவிட்டு வருகிறோம் என சொல்லிவிட்டு நந்தினி, ரேணுகா ஆகியோர் வீட்டுக்கு வருகிறார்கள். வீட்டுக்கு வந்ததும் ஆஸ்பத்திரியில் ஈஸ்வரி குணமாகி வருவதை வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய வேண்டாம் என அவர்கள் மூடி மறைக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
50 லட்சம் கட்ட சொன்ன டாக்டர்

அவர்கள் ஈஸ்வரியின் உடல்நிலை பற்றி யாருக்கும் தெரியவேண்டாம் என இருந்தாலும், இந்த விஷயம் ஆதி குணசேகரனுக்கு தெரிந்துவிடுகிறது. அவர் அனைவரையும் அழைத்து ஈஸ்வரி குணமாகி வரும் விஷயம் தனக்கு தெரியும் என்றும் அவருக்கு ஆஸ்பத்திரியில் எவ்வளவு கட்ட வேண்டும் என சக்தியிடம் கேட்க, அவர் உடனே மருத்துவமனைக்கு போன் போட்டு கேட்கிறார். அவர்கள் 50 லட்சம் கட்ட வேண்டியிருக்கும் என சொல்கிறார். இவ்வளவு பெரிய தொகையா என அனைவரும் ஷாக் ஆகிறார்கள். ஆனால் ஆதி குணசேகரன் அந்த தொகையை தான் கட்ட தயாராக இருப்பதாக சொல்கிறார்.

35
ஆதி குணசேகரனிடம் பணம் வாங்க மறுக்கும் தர்ஷினி

ஆதி குணசேகரன் பணம் கொடுக்க சம்மதித்தாலும் அவரின் பணம் தங்களுக்கு வேண்டாம் என ஒற்றைக்காலில் நிற்கிறார். அவரே அம்மாவை அடிச்சு இந்த நிலைமைக்கு கொண்டு வருவாரு, இப்போ அவரே பணத்தை கட்டி நல்லவராக மாறப்பார்க்கிறார். என் அம்மாவை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவர்கிட்டயே பணத்தை வாங்கி, என்னோட அம்மாவை காப்பாத்தனும்னு எனக்கு என்ன அவசியமா, அதைவிட பெரிய அசிங்கம் வேற எதுவுமில்லை. அவருடைய பணம் எனக்கு வேண்டாம் என சொல்லிவிடுகிறார். அவரை அனைவரும் சமாதானப்படுத்தப் பார்க்கிறார்கள். ஆனால் முடியவில்லை.

45
பிரச்சனை பண்ணும் அறிவுக்கரசி

பின்னர் அறிவுக்கரசி, ஆதி குணசேகரனிடம் பிரச்சனை பண்ணுகிறார். அவரிடம் உனக்கு துரோகம் பண்ண நினைச்சது நான் தான், அவங்க இல்ல, அவங்ககிட்ட நீ எதுவும் பேசக் கூடாது என கண்டிஷன் போடுகிறார். நான் தான உன் தங்கச்சியை என்னோட மகனுக்கு கட்டிவைக்குறேன்னு சொன்னேன். அதை நான் சரி பண்ணித் தர்றேன் என குணசேகரன் சொல்ல, எப்படி சரி பண்ணுவீங்க, இந்த விளங்காதவ, இங்க வந்து குடும்பம் நடத்திட்டு இருக்கா, அப்படி இருக்கையில் எப்படி சரி பண்ணுவீங்க எனக்கு பதிலை சொல்லுங்க என ஒரே போடாக போடுகிறார் அறிவுக்கரசி.

55
ஆப்பு வைத்த ஆதி குணசேகரன்

இனிமேலும் உன் தங்கச்சியை இந்த வீட்டுக்குள்ள கொண்டு வந்த வாழ வைக்கணும்ங்கிற நினைப்பை விட்று, உனக்கு என்ன நஷ்ட ஈடு தரணுமோ அதை நான் செஞ்சிடுறேன் என ஆதி குணசேகரன் கூற, உங்க பணமெல்லாம் வேண்டாம், நான் யாருன்னு காட்டுறேன் உங்களுக்கு என சொல்லிவிட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியே செல்கிறார் அறிவு. பின்னர் வக்கீலுக்கு போனை போட்டு வரச் சொல்கிறார் ஆதி குணசேகரன். இதையடுத்து என்ன நடக்கப் போகிறது? ஈஸ்வரி மீண்டும் திரும்பி வருவாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories