Pandian Stores 2 Serial Today 711th Episode Highlights in Tamil : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 711ஆவது எபிசோடில் என்ன நடந்தது, நாளைய எபிசோடில் என்ன நடக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய ஹைலைட்ஸ், Pandian Stores 2 today highlights
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் இப்போது 3 ஜோடிகளுக்கு இடையில் சண்டை சச்சரவுகள் வந்த நிலையில் ஒரே ஒரு ஜோடி ஜாலியாக சென்னையில் தங்களது காதல் காட்சிகளை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய 711ஆவது எபிசோடானது, சரவணன் மற்றும் அஞ்சலியின் காட்சிகளோடு தொடங்கி கடைசியில் கோமதி மற்றும் கதிரின் காட்சிகளோடு முடிந்தது. இதற்கிடையில் என்ன நடந்தது என்பது தான் சுவாரஸ்யம். அதன்படி, சரவணன் மற்றும் அஞ்சலி இருவரும் மோதிக் கொண்டு பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்த போது இருவருக்குள்ளும் பட்டாம்பூச்சி பறந்தது. அஞ்சலி, சரவணனின் குடும்ப வாழ்க்கை பற்றி கேட்க, சரவணன், அஞ்சலியின் கல்யாண வாழ்க்கை பற்றி கேட்டார்.
25
சரவணன் அஞ்சலி காதல் காட்சிகள், Saravanan Anjali love scenes Tamil
ஆனால், அஞ்சலியோ, தான் கணவருடன் இல்லை. இப்போது அம்மா வீட்டில் தான் இருக்கிறேன். திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது என்று கூறினார். மேலும், நான் திருமணம் வேண்டாம் என்று சொல்ல, அப்பா, அம்மாவோ விடாப்பிடியாக திருமணம் செய்து வைக்க அவசர அவசரமாக நடந்த திருமணம் என்று மன வேதனையுடன் கூறினார். இதைத் தொடர்ந்து வீட்டில் அப்பா, அம்மா, அரசி எல்லோரும் எப்படி இருக்காங்க என்று கேட்டார். கடைசியாக சரவணனின் மொபைல் நம்பரை கேட்டார். அதற்கு சரவணன் சற்று பதற்றத்துடன் தனது போன் நம்பரை கொடுத்தார். அதோடு அவர்களது காட்சி முடிவுற்றது.
35
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் செய்திகள், Pandian Stores 2 serial news
அடுத்ததாக ராஜீ மற்றும் கதிர் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதில் கோச்சிங் கிளாசிற்கு சென்ற ராஜீக்கு துணையாக கதிரும் சென்றார். மேலும், ராஜீக்கு வகுப்பு முடியும் வரையில் காத்திருந்தார். அதன் பின்னர், செந்தில் மற்றும் மீனாவின் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் இருவரும் ஒருவருக்கொருவர் ஜாலியாக ரொமான்ஸாக பேசி வந்த நிலையில், தங்கமயில் போன் போடவே செந்திலுக்கு கோபம் வந்தது. நடு ரோடு என்று கூட பார்க்காமல் கோபத்தில் உச்சத்திற்கு சென்ற செந்தில் மீனா உடன் சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். செந்திலுக்கு மீண்டும் தங்கமயில் போன் போடவே அவரது போனை கட் செய்தார்.
45
கதிர் ராஜி ரொமான்ஸ், Kathir Raji romance update
இதைத் தொடர்ந்து கதிர் மற்றும் கோமதியின் போன் கால் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், தனக்கு ராஜீயை திருமணம் செய்து வைத்தது பற்றி கதிர் தனது அம்மாவிடம் பெருமையாக பேசினார். நீ எனக்கு நல்லது தான் செய்து வைத்திரூக்க. அதனால், நீ எதைப் பற்றியும் கவலைப்படாத அம்மா என்று அவருக்கு ஆறுதல் கூறினார். கடைசியாக கதிர் மற்றும் ராஜீ தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
55
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 நடிகர்கள், Pandian Stores Season 2 cast details
இதில், இருவரும் துணிக்கடைக்கு வந்து எல்லோருக்கும் புதிதாக துணி எடுத்தனர். ராஜீக்கு புதிய புடவை வாங்கினார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளையும் இந்த காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படும். அதன் பின்னர், சரவணனுக்கு அஞ்சலி போன் போட்டு பேசுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், இருவரும் சந்தித்து பேசலாம் என்றும் தெரிகிறது. அடுத்து தொடர்ந்து மீனாவிற்கு போன் போட்ட தங்கமயில் மீண்டும் மீனாவின் அலுவலகத்திற்கு சென்று பேசலாம். அப்படி இல்லை என்றால் தங்கமயிலின் குடும்பக் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படலாம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.