கார்த்திக்கின் கனவு நிறைவேறுமா? அம்மாவின் சிலைக்கு பாம்ப் வைத்த சிவனாண்டி – கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Published : Feb 09, 2026, 06:24 PM IST

Shivanandi Evil Plan in Karthigai Deepam Serial : கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் தனது அம்மாவின் சிலை திறப்பு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்த நிலையில், சிவனாண்டி அதில் வெடிகுண்டு வைத்துள்ளார்.

PREV
15
Shivanandi plants bomb in statue

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம். இந்த சீரியலானது கார்த்திக் என்ற ஒன் மேன் ஆர்மிக்காகவே இன்று வரை ஒளிபரப்பாகி வருகிறது. இத்தனை நாட்களாக கார்த்திக் தனது மாமியார் வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில் இப்போது எல்லாம் ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால், என்ன கார்த்திக் யார் என்ற உண்மை தெரிந்த சாமுண்டீஸ்வரி கார்த்திக் மற்றும் ரேவதியை பிரிக்க ஏற்பாடுகள் செய்தார். மேலும், பஞ்சாயத்து மூலமாக காசு வெட்டி போட்டு இருவரையும் பிரித்தார். பின்னர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

25
Karthigai Deepam Today Episode Promo

இருவரும் 6 மாத காலம் ஒன்றாக சேர்ந்து வாழ நீதிபதி உத்தரவிட்ட நிலையில் இப்போது கார்த்திக் தனது மாமியார் வீட்டில் ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போதும் அவர்களது வீட்டில் எடுபிடி வேலை தான் பார்க்கிறார் என்றாலும் அவர் ராஜா தான். ரேவதி மற்றும் கார்த்திக் இப்போது காதல் மலர்ந்து இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களது காதல் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் வெளிநாட்டு மாப்பிள்ளை என்று ஒருவரை கூட்டி வந்து உங்கள் இருவருக்கும் தான் திருமணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

35
Karthik Revathi emotional scenes

இதையெல்லாம் காதிலே வாங்காத ரேவதி தனது கணவருடன் வெளியில் சென்று வருவது, அவருக்கு பக்க பலமாக இருப்பது என்று இருக்கிறார். இந்த நிலையில் தான் தனது அம்மா கொடுத்த இடத்தில் அம்மாவின் சிலையை திறந்து அந்த இடத்தில் ஆதரவற்றோர்களுக்கு விடுதி கட்ட கார்த்திக் தீர்மானித்தார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து அழைப்பிதழும் அடித்துவிட்ட நிலையில் அதை தடுக்க சந்திரகலா, சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோர் தீர்மானித்த நிலையில், கார்த்திக் அடமானம் வைத்த இடத்தை ஆட்டைய போட பிளான் போட்டனர்.

45
Shivanandi's evil plan in Karthigai Deepam

அந்த பிளானை கார்த்திக் முறியடித்துவிட்டு, சிலையையும் வைத்துவிட்டார். வரும் 15ஆம் தேதி சிலை திறப்பு விழா நடக்க இருக்கிறது. ஆனால், எப்படியாவது இந்த சிலை திறப்பு விழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சிவனாண்டி மற்றும் சந்திரகலா இருவரும் பக்கா பிளானோடு இப்போது இறங்கியிருக்கிறார்கள். அதன்படி முதல் படியாக சிலைக்கு பாம் வைத்துள்ளனர். சரியாக, சிலை திறக்கும் நாளன்று காலை 10 மணிக்கு வெடிப்பது போன்று செட் செய்து வைத்திருக்கிறார்கள்.

55
arthigai Deepam full episode watch online

இது தொடர்பான புரோமோ வீடியோவை ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டது. அதில், சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருவரும் சிலைக்கு வெடிகுண்டு வைத்தது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதோடு சந்திரகலாவிற்கு போன் போட்டு தெரியப்படுத்துகிறார்கள். ஆனால், பேசியது சந்திரகலா தானா என்பது தான் இன்னும் தெரியவில்லை. மேலும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து இருவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதோடு இந்த சீரியலின் புரோமோ வீடியோ முடிந்துள்ளது. அடுத்து என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories