பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: தங்கமயிலின் போன் காலால் விபரீதம்! மீனாவுடன் நடுரோட்டில் மல்லுக்கட்டிய செந்தில்!

Published : Feb 09, 2026, 04:20 PM IST

Senthil Meena fight scene by Thangamayil phone call : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனாவிற்கு, தங்கமயில் போன் போட்டதைத் தொடர்ந்து செந்திலுக்கும், மீனாவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

PREV
16
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பெரிய பிரச்சனையாக வெடித்தது என்றால் அது தங்கமயில் பிரச்சனை தான். திருமண நிச்சயத்தில் ஆரம்பித்து போலீஸ் ஸ்டேஷன் வரையில் அடுக்கடுக்காக ஏராளமான பொய்களை சொல்லி இன்று தனது வாழ்க்கையை இழந்துவிட்டு நிற்கிறார் தங்கமயில்.

26
Pandian Stores 2 today episode

தங்கமயிலின் இந்த நிலைமைக்கு அவரது அம்மா தான் முக்கியமான காரணம். தனது மகளுக்கு 80 சவரன் நகை போடுகிறேன் என்று சொல்லிவிட்டு வெறும் 8 சவரன் மட்டுமே தங்க நகை போட்டுவிட்டு மீதி 72 சவரன் நகையை கவரிங் நகையாக போட்டுவிட்டு மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு எம் ஏ வரையில் படித்திருக்கிறார், கோல்டு மெடல் என்றெல்லாம் டயலாக் விட்டார். டீச்சர் வேலைக்கு சென்ற தங்கமயில் பின்னர் ஹோட்டலில் சர்வர் வேலை செய்தார்.

36
செந்தில் மீனா சண்டை, Senthil Meena fight scene

ஒரு கட்டத்தில் சரவணனுக்கு எல்லா உண்மையும் தெரிந்த பிறகு தங்கமயில் வீட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார். அதன் பின்னர் தான் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று சென்று இப்போது தங்கமயில் தனது அம்மா வீட்டில் இருக்கிறார். சரவணன் தொடர்ந்த விவாகரத்து வழக்கு இந்த வாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், ஏற்கனவே மீனாவின் அலுவலகத்தில் வைத்து தங்கமயில் அவரை சந்தித்து பேசினார்.

46
தங்கமயில் போட்ட போன் கால், Thangamayil phone call to Meena

இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் மற்றும் மீனா இருவரும் அலுவலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இருவரும் தங்களது குடும்பக் கதை மற்றும் சண்டையை மறந்து சமாதானம் ஆனதைப் பற்றி பேசிக் கொண்டே சென்றார்கள். அப்போத்தான் கோமதி மீனாவிற்கு போன் செய்து, தனது நிலைமையை பற்றி பேசினார். மேலும், பாண்டியன் மாமா உங்களிடம் பேசினாரா இல்லையா என்ற கதையைக் கேட்டார். ஆனால், அவர் இல்லை என்று சொல்லவே தனக்கு ஒரு மாதிரியாக இருப்பதாக கூற, நான் வேண்டுமென்றால் வீட்டிற்கு வரவா என்று மீனா கேட்க, கோமதி இல்லை இல்லை ஞாயிற்றுக்கிழமை வா என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

56
விஜய் டிவி சீரியல் அப்டேட், Vijay TV serial update Tamil

இதையடுத்து செந்தில் மீனாவை பெருமையாக பேசினார். அதாவது மாமியார், மருமகள் இப்படி ஒற்றுமையாக இருப்பதை பார்க்கும் போது சந்தோஷகமாக இருக்கிறது. உனக்காக அம்மா என்னிடம் சண்டை போட்டாங்க என்று பேசினார். அப்போது மீனாவிற்கு தங்கமயில் போன் போடவே, சற்று நேரத்தில் செந்திலின் முகம் மாறியது. நடுத்தெரு என்று கூட பார்க்காமல் மீனாவிடம் சண்டை போட்டார். ஏற்கனவே எல்லோரும் அவருடைய நம்பரை பிளாக்லிஸ்டில் போட்டோம், நானும் பிளாக் பண்ணி வைத்தேன். அப்போது நீ மட்டும் இன்னும் பிளாக் பண்ணவே இல்லையா? அப்போ நீயும், அவரும் பேசிக்கிட்டு தான் இருக்கீங்களா? அடுத்து என்ன பிளான் போட்டு இருக்கீங்க என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்.

66
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 செந்தில் கோபம், Pandian Stores 2 Senthil angry

தங்கமயிலால் இவ்வளவு பிரச்சனை நடந்த பிறகும் கூட, இன்னமும் மீனா அவருடன் பேசுவது கொஞ்சம் சரியில்லை தான். ஏன் அவருடன் பேச வேண்டும், போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நகை மேட்டரில் உண்மையை மட்டும் சொல்லாமல் இருந்திருந்தால் 72 சவரன் நகையை திரும்ப கொடுக்க வேண்டி வந்திருக்கும். இல்லையென்றால் குடும்பத்துடன் ஜெயிலுக்கு செல்ல வேண்டி வந்திருக்கும். இதையெல்லாம் மீனா கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையே. மீனா தங்கமயிலுடன் பேசியது மட்டும் பாண்டியனுக்கோ அல்லது கோமதிக்கோ தெரிந்தால் என்ன நடக்கும்? மறுபடியும் மீனா மீது வெறுப்பு தான் வரும். இந்த சூழலில் அடுத்து என்ன நடக்கிறது என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories