Gandhimathi Come to Pandian House : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 586ஆவது எபிசோடில் பாண்டியன் வீட்டிற்கு வந்த கோமதியின் அம்மா காந்திமதி கதறி அழுது அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் யாருமே எதிர்பார்க்காத திருப்பம் கடந்த வார எபிசோடில் நடந்தது. இதில், குமரவேல் மீது கொடுத்த புகாரை அரசி வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து குமரவேல் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செப்டம்பர் 15ஆம் தேதி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். கோர்ட் வழக்கு முடிந்து வெளியில் வந்த குமரவேல் அரசியின் காலை பிடித்துக் கொண்டு கதறி அழுதார். மேலும், இந்த வழக்கை வாபஸ் பெறுவ, என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று காலை பிடித்துக் கொண்டு கதறி அழுதார்.
24
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு
இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், குமரவேலுவை அங்கிருந்து அழைத்துச் சென்றார். வீட்டிற்கு சென்ற அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சக்திவேல் கோர்ட் வாசலில் என்ன நடந்தது என்பது பற்றி குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் கூறினார். இத்தனை நாட்கள் உங்களது பேச்சை கேட்டு தான் இப்படி இருந்தான். இப்போதுதான் அவன் திருந்தியிருக்கிறான். அவன் அவனாக இருக்கட்டும் என்று குமரவேலுவிற்கு ஆதரவாக வடிவு பேசினார்.
34
பாண்டியன் வீட்டிற்கு வந்த காந்திமதி
இதையெல்லாம் கேட்ட காந்திமதி உடனடியாக பாண்டியன் வீட்டிற்கு வந்தார். அவர், பாண்டியனின் கையை பிடித்துக் கொண்டு ஓன்னு அழுதார். மேலும், கோமதி, ராஜீ மற்றும் அரசி என்று எல்லோரையும் கட்டிப்பிடித்து அழுதார். பாண்டியன் கோர்ட்டில் என்ன நடந்தது என்பதை தெளிவாக காந்திமதியிடம் சொல்ல, அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கோமதி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். தனது மகளா இப்படியெல்லாம் பேசியிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்.
44
பாண்டியன் செய்த உதவி
பாண்டியன் செய்த இந்த உதவியை தனது உடலில் உயிர் இருக்கும் வரையில் மறக்கமாட்டேன் என்றும் இனி தனது குடும்பத்தால் பாண்டியன் குடும்பத்திற்கு எந்தவித பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்வேன் என்றும் வாக்குறுதி அளித்தார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 586ஆவது எபிசோடு முடிந்தது. இனி நாளைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.