Meena Idea to Gomathi against Pandian in Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இந்த வாரத்திற்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
Meena Idea to Gomathi against Pandian in Pandian Stores 2 Serial : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது நீண்ட நாட்களுக்கு பிறகு விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. சரவணன் மற்றும் தங்கமயில் விவாகரத்து வழக்கு ஒரு புறம் நடக்கிறது என்றால், செந்தில் மற்றும் மீனாவின் சண்டை காட்சிகளும், கதிர் மற்றும் ராஜீயின் காதல் காட்சிகளும் மாறி மாறி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதற்கிடையில் பாண்டியன் மற்றும் கோமதியின் பிடிவாதமான காட்சிகளும் ஒளிபரப்பு செய்யப்படுக்கின்றன.
27
Meena Gomathi combo
தனக்கு தெரியாமல் கதிர் மற்றும் ராஜீக்கு திருமணம் செய்தது வைத்தது மட்டுமின்றி அதனை இத்தனை நாட்களாக தன்னிடம் சொல்லாமல் மறைத்ததற்காக பாண்டியன் தனது மனைவியிடம் பேசாமல் இருக்கிறார். கோமதி எத்தனையோ முறை முயற்சித்தாலும் பாண்டியன் தனது மனைவியிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் தான் இந்த வாரம் பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையிலான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டது. இதில் இந்த வாரம் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
37
Pandian Stores today episode
புரோமோவில் மீனா, கோமதி மற்றும் பாண்டியன் ஆகியோரது காட்சிகள் இடம் பெற்றுள்ளன. முதலில் உங்க மாமா சரியாக சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது என்று கோமதி மீனாவிடம் கூறுகிறார். அதற்கு மீனாவோ, அவரை எப்படி உங்களுக்கு அருகில் வர வைப்பது என்று நீங்கள் இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை என்று கூறி அட்வைஸ் செய்கிறார். அதன் பிறகு தான் கோமதியின் மண்டையில் உறைக்கிறது.
47
Vijay TV Serial News Tamil
பின்னர் தான் கோமதியின் ரிவெஞ்ச் ஸ்டார்ட் ஆகிறது. அதில், இருமல் வருவது போன்று பாண்டியன் செய்கை செய்து, தண்ணீர் தண்ணீர் என்று கேட்கிறார். கோமதி சைலண்டாக இருந்து கொண்டு என்னுடைய பேரு தண்ணீர் இல்ல என்றும், ஏய் தண்ணீர் அங்க போ என்று கூறுகிறார். இதைத் தொடர்ந்து பாண்டியன் தானாக சாப்பாடு வைத்தும், குழம்பு ஊற்றியும் சாப்பிடுகிறார். ஆனால், குழம்பு ஊற்றுகிறேன் என்ற பெயரில் தனது உடையில் ஊற்றிவிடுகிறார்.
57
Pandian Stores 2 Serial This Week Promo
பின்னர் சாப்பிட ஆரம்பிக்கும் போது, அவர் மட்டும் வழிக்கு வரட்டும் பிடித்ததை ஆக்கி போட்டு ஊட்டியே விடுகிறேன் என்று கோமதி பேசுகிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரத்திற்கான புரோமோ வீடியோ முடிகிறது. இந்த வாரத்தில் வேலைக்கு சென்ற தங்கமயிலின் காட்சிகள், மீனா மற்றும் செந்திலின் சண்டைகள், சரவணன் மற்றும் அஞ்சலியின் நட்பு என்று பல காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
67
Pandian Stores 2 Serial
தங்கமயிலின் அம்மா பாக்கியம் எப்போது பாண்டியன் குடும்பத்தை பழி தீர்க்க வாய்ப்பு கிடைக்கும் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சரவணன் மற்றும் அஞ்சலியின் நட்பு சிம்ம சொப்பமானமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தங்கமயில், சரவணனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார். இப்போது அது உண்மையாகும் நிலை உருவாகி வருகிறது.
77
Vijay TV Pandian Stores 2 Serial, Vijay TV Serial
இது ஒரு புறம் இருந்தாலும், குமரவேலுவிற்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. குமரவேல் அரசியை காதலிக்கும் நிலையில், அவருக்கும் வேறொரு பெண்ணிற்கும் இடையில் திருமணம் நடக்க இருக்கிறது. ஆனால், குமரவேலுவிற்கு இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் உடன்பாடில்லை. சரி, என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.