Fans Want Anandhi to Live With Anbu in Singappenne Serial : சிங்க பெண்ணே சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரசிகர்களின் ஆதரவு இருந்தாலும் வருத்தப்படக் கூடிய காட்சிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அது என்ன என்று பார்க்கலாம்
அன்பு வீட்டிற்குச் சென்று வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கும் ரசிகர்கள்:
கோகிலாவின் அக்காவின் மாமனார் மற்றும் மாமியார் இருவரும் ஆனந்தி அன்புடன் வீட்டிற்கு சென்று வாழ்ந்தால் தான் கோகிலாவையும் தன் மகனோடு வீட்டிற்கு அழைத்துச் சென்று வாழ வைக்க முடியும் என்று கட்டளை இடுகின்றனர். அதன்படி ஆனந்தி அன்பின் வீட்டிற்குச் சென்று வாழ வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழ தொடங்கியுள்ளது. ஆனந்தி மற்றும் அன்பு இருவரும் ஒரு வீட்டில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்றும் காதல் கதைகளும், குடும்ப வாழ்க்கையிலும் சிறப்பாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
25
துளசியின் பொறாமை
துளசியின் பொறாமை மற்றும் வஞ்சகத்தால் கதை சூடு பிடிக்கப் போகிறது: ஆனந்தி அன்பு வீட்டுக்கு சென்றால் துளசி மற்றும் அன்புவின் அம்மா இருவரும் சேர்ந்து ஆனந்தியின் மீது வஞ்சகமும், துளசி ஆனந்தின் மீது பொறாமையும் சண்டை ஏற்படும் அதை பார்ப்பதற்காக ரசிகர்கள் கதை சூடு பிடிக்க போகிறது. என்று ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.
35
ஹாசன் ஹீரோ அன்பரசன்:
அன்புவிற்கு ரசிகைகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அன்பு மிகவும் அழகாக இருக்கிறார் என்றும் ரசிகைகள் ஹாட் விட்டு பதிவிடுகின்றனர். ஆனந்தி பாவம்: ஆனந்தி ஒவ்வொரு பிரச்சனைகளிலும் தனியாக இருந்து போராடி வருவதால் இவர் சிங்கப்பெண் என்றும் ஆனந்தியை பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது என்றும் நொட்டிசன்கள் பதிவிடுகின்றனர்.
45
ஆனந்தியின் கர்ப்பத்திற்கு காரணம்
ஆனந்தியின் கர்ப்பத்திற்கு காரணம் என்று ஒரு முடிவுக்கு வாங்க: ஆனந்தியின் கர்ப்பத்தை கண்டுபிடிப்பதற்கு ஆனந்த மிகவும் போராடி வருகிறார் அதனை சீக்கிரமாக கண்டுபிடித்து ஒரு முடிவுக்கு கொண்டு வாங்கள் என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். தனி குடுத்தனம் போங்க ஆனந்தி மற்றும் அன்பு: ஆனந்தி தனது அக்காவிற்காக எதையும் செய்வார் என்று அனைவருக்கும் தெரியும் ஆகையால் அன்பு வீட்டிற்கு செல்லவில்லை என்றால் தனிக்குடுதனம் செல்லுங்கள் என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
55
குழந்தைக்கு அப்பா யாரு:
முதலில் குழந்தைக்கு அப்பா யாருன்னு கண்டுபிடிங்க. கண்டுபிடிக்கிற மாதிரி காட்டுறீங்க ஆனா அது நடக்க மாட்டேங்குது டைரக்டர் ரொம்ப ஜவ்வா இழுக்கிறாரு. அன்புக்கும் ஆனந்திக்கும் ஒரு அன்பான காதல் இருக்குன்னு ரீல் ஓட்டுறீங்க அது எப்ப தான் முடியப்போகிறது ஆனந்தி யாருக்கு மனைவியாக போற அந்த குழந்தைக்கு அப்பா யாருன்னு சொல்லுங்க என்று டைரக்டரிடம் தன் மனதில் இருக்கும் அனைத்து கவலைகளையும் ரசிகர் ஒருவர் கேட்டது போல் இருக்கிறது.