கயல் மற்றும் ஆதிரை கைகோர்த்த மாஸ் ஆக்ஷன்! ஆனந்தி, ரோகிணி எங்கே? மகா சங்கமத்தில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்கள்!

Published : Feb 21, 2026, 06:45 PM IST

Kayal and Aadhirai in Action to Find Anandhi and Rohini: கயல் மற்றும் மருமகள் சீரியல் மகாசங்கமத்தில் கடத்தப்பட்ட ரோகிணி மற்றும் ஆனந்தியை யாருக்கும் தெரியாமல் கயல் மற்றும் ஆதிரை இருவரும் தேடுகின்றனர்.

PREV
14
கயல் மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமம்

கயல் மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமம் நேற்றைய எபிசோடில் ஆனந்தியை கௌதம் கடத்தி சமையல்காரர்கள் காய்கறி மூட்டையோடு வைத்தனர். ரோகினியை பாலுவின் நண்பர்கள் கடத்தி செடிக்கு மறைவாகவைத்தனர். அனைத்து மூட்டுகளையும் சமையல்காரர்கள் எடுத்துக்கொண்டு காய்கறியோடு சேர்த்து வைத்தனர். மாறிய மூட்டைகள்: ஆனந்தியை தேடும் கௌதம் எந்த மூட்டையில் இருக்கு என்று தெரியாமல் ஒவ்வொரு முட்டையாக பிரித்துப் பார்க்கின்றார். கௌதம் ஆனந்தி தான் என்று ரோகினியை கட்டி வைக்கப்பட்டு இருக்கும் மூட்டையை எடுத்துக்கொண்டு செல்கிறார். பாலுவின் நண்பர்கள் ஆனந்தி தான் என்று ரோகினியை தூக்கிக் கொண்டு செல்கின்றன. இருவரையும் மாற்றி மாற்றி கடத்தி செல்கின்றனர்.

24
ரோகினியை காணாமல் தேடும் ஆதிரை:

ரோகிணியை காணவில்லை என்று ரேவதி வந்து ஆதிரையிடம் சொல்ல அதிர்ச்சி அடைகிறார் ஆதிரை.ஆதிரை அங்கும் இங்குமாக தேடிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது காணவில்லை என்று தெரியவரும் பொழுது தன் மாமாவிடம் சென்று சொல்லி அதிர்ச்சியை அதிகரிக்கிறார். பிரபுவின் அப்பா பயத்தில் பிரபுவிடம் போய் சொல்லுமா ஆதிரை என்று சொல்ல வேண்டாம் மாமா நம்ம யாருக்கும் தெரியாம காதும் காதும் வச்ச மாதிரி தேடி கண்டுபிடித்து விடுவோம் என்று ஆதிரை நம்பிக்கையுடன் சொல்லிவிட்டு செல்கிறார்.

34
ஆனந்தியை தேடும் கயல்:

ஆனந்தியை எங்கும் தேடியும் காணவில்லை என்று கயலுக்கு தெரிய வருகிறது. திருமணம் பிடிக்காமல் ஆனந்தி சொல்லாமல் சென்று விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார் ஆனந்தியின் குடும்பத்தினர். டாக்டருக்கு படிக்க விரும்பியதாலும் சீக்கிரமாக திருமணம் செய்து வைப்பதாலும் இங்கிருந்து சென்றதாக நினைத்துக் கொண்டிருக்கின்றன கயல் மற்றும் கயல் குடும்பத்தினர். ஆனால் பாலுவின் நண்பர்கள் பாலுவிற்காக கடத்தப்பட்டது யாருக்கும் தெரியாது. அப்பொழுது கயல் நான் சீக்கிரமாக தேடி வருகிறேன் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் அன்பு அங்கு வர எங்கு ஆனந்தி என்று கயலிடம் கேட்கிறார்.அதற்கு கயல் அவ இங்க தான் இருக்கா என்று சொல்லி மழுப்புகிறார் . ஆனந்தியை காணாத விஷயம் இவனுக்கு தெரியவே கூடாது என்று அனைவரிடமும் சொல்கிறார் கயல். தெரிந்தால் இவன் பெரிய பிரச்சனை செய்துவிடுவான் என்று சொல்கிறார். பிறகு நான் எப்படியாவது தேடி கண்டுபிடிக்கிறேன் என்று கயல் அனைவரிடமும் சொல்லி நம்பிக்கையுடன் வருகிறார்.

44
கயல் மற்றும் ஆதிரை இணைந்து தேடுகிறார்கள்:

இருவரும் தேடி கொண்டு வரும் பொழுது ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கின்றனர். அப்பொழுது ரோகிணியை காணவில்லை என்று ஆதிரை சொல்ல, ஆனந்தியை காணவில்லை என்று கயல் சொல்கிறார். இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பிறகு நாம் சேர்ந்து தேடுவோம் என்று முடிவு செய்து இருவரும் ஒன்று சேர்ந்து தேடுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories