இதைத் தொடர்ந்து தனிக்குடித்தனம் செல்லும் ஆர்வத்திலும், உற்சாகத்திலும் செம குஷி மோடில் இருக்கும் செந்தில் எத்தனை பேர் வருவார்கள், அவர்களுக்கு டிபன், சாப்பாடு என்று எல்லாம் வாங்க வேண்டும். இதற்கு எவ்வளவு செலவாகும், என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்தார். இதில் மாலை, பாய், சேர் என்று லிஸ்ட் கொஞ்சம் நீண்டுக் கொண்டே போனது. அதுமட்டுமில்லாமல் தன்னிடம் ரூ.200 தான் இருந்தது. இதை வைத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் தூங்கிக் கொண்டிருந்த மீனாவை தட்டி எழுப்பினார். அவரும், என்னங்க என்று கேட்டுக் கொண்டே தூக்கத்திலிருந்து கண் விழுத்தார்.