பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கேப்டன்சி டாஸ்க் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், அதில் ஜெயிப்பவர்களுக்கு சகல வசதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. இந்த சீசனில் ஏராளமான புது முகங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரத்திற்கு பின்னர் தான் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை ஆரம்பிக்கும். ஆனால் இந்த சீசன் ஆரம்பமான முதல் நாளில் இருந்தே சண்டையும் தொடங்கிவிட்டது. இதில் பெரும்பாலும் திவாகர், விஜே பார்வதி, ரம்யா ஜோ, சுபிக்ஷா ஆகியோர் தான் சண்டைபோட்ட வண்ணம் உள்ளனர். மற்ற சீசன்களைக் காட்டிலும் இந்த சீசனில் மிஸ் ஆவது காமெடி தான். அதில் யாருமே கவனம் செலுத்துவதில்லை.
24
பிக் பாஸ் கேப்டன்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைப்படி வார வாரம் ஒருவர் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார். அவரின் தலைமையில் தான் அந்த வாரம் முழுக்க வீட்டின் செயல்பாடுகள் இருக்கும். யார்... யார் எந்தெந்த அணியில் இருக்க வேண்டும் என்பதை கேப்டன் தான் தீர்மானிப்பார். அதேபோல் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை சரிவர பெற்றுத் தரும் பொறுப்பும் கேப்டனுக்கு உண்டு. அதுமட்டுமின்றி கேப்டனாக தேர்வு செய்யப்படும் நபரை அந்த வாரத்திற்கான நாமினேஷனில் யாரும் நாமினேட் செய்ய முடியாது.
34
வீட்டு தல
கேப்டன் இந்த முறை வீட்டு தல-யாக மாறி இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் போட்டியின் அடிப்படையில் அதில் யார் வெற்றிபெறுகிறார்களோ அவர்கள் வீட்டு தல ஆக முடியும். அந்த வீட்டு தல நாமினேஷனில் இருந்து தப்பிப்பது மட்டுமின்றி அடுத்த வாரத்திற்கான கேப்டன்ஸி டாஸ்கில் நேரடியாக போட்டியிட முடியும் என்கிற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஒரு வகையில் பார்த்தால் இது பைனலுக்கு முன்னேறும் ஒரு எக்ஸ்பிரஸ் வே, ஒவ்வொரு வாரமும் கேப்டன்ஸி டாஸ்கில் வெற்றி பெற்றால் அந்த நபர் நாமினேஷனில் சிக்காமல் பைனலுக்கே செல்ல முடியும்.
அதுமட்டுமின்றி, இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில், இந்த முறை கேப்டனுக்கு என தனி ரூம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு அவருக்கு சகல வசதியும் கிடைக்குமாம். இதனால் கேப்டனாகும் நபர்கள் ஒரு வாரம் ராஜ வாழ்க்கை வாழ வாய்ப்பு இருக்கிறது. முதல் வாரத்திற்கான கேப்டன்ஸி டாஸ்க் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று யார் முதல் வீட்டு தலை ஆகப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.