Pandian Stores 2 Serial 13th to 18th October 2025 Promo : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான காட்சிகளைக் கொண்டு சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரம் சரவணன் மற்றும் தங்கமயில் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் தங்கமயில் மற்றும் அவரது அப்பா மாணிக்கம் இருவரும் வேலை பார்க்கும் ஒளிபரப்பானது.
26
அக். 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை காந்திமதி பிறந்தநாள் கொண்டாட்டம்
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் தனிக்குடித்தனம் செல்லும் பிளானில் இருந்த மீனா மற்றும் செந்தில் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பானது. இதில், செந்தில் மற்றும் மீனா இருவரும் தனிக்குடித்தனம் சென்று பாலும் காய்ச்சினர். இப்போது இந்த வாரம் காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பமாகிறது. இந்த வாரம் முழுவதும் இது தொடர்பான காட்சிகள் தான் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அக்டோபர் 13ஆம் தேதி முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரையில் காந்திமதி தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
36
சக்திவேல் மற்றும் முத்துவேல்
இது தொடர்பான புரோமோ வீடியோ தான் இப்போது வெளியாகியிருக்கிறது. இதில், காந்திமதி தனது 75ஆவது பிறந்தநாளை 3 மகன்களும், மகளும் சேர்ந்து தான் கொண்டாட வேண்டும் என்று பேசுகிறார். அப்போது முத்துவேல், சக்திவேல், பழனிவேல் என்று 3 மகன்களும், வடிவு, மாரி என்று 2 மருமகள்களும், குமரவேல் என்ற பேரனும் இருந்தனர்.
46
பாண்டியன் மற்றும் காந்திமதி
காந்திமதி சொல்வதைக் கேட்டு சக்திவேல் அப்படி ஒரு விஷயம் மற்றும் நடக்கவே நடக்காது என்று கோபத்தோடு பேசுகிறார். மேலும், அந்த குடும்பத்தோடு சேர்ந்து அம்மாவின் பிறந்தநாளை கொண்டாட போகிறோம் என்று நினைக்கும் போது அப்படியே பத்திக்கிட்டு வருகிறது என்று ஆக்ரோஷமாகிறார். இதைத் தொடர்ந்து கோமதி தனது கணவரிடம் தனது அம்மாவின் பிறந்தநாள் பற்றி சொல்லவே, அவரும் நாம் எல்லோருமே உன்னுடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு செல்வோம். அப்படியே ஒரு அன்னதானமும் செய்வோம் என்று வாக்குறுதி அளிக்கிறார். அதோடு அந்த புரோமோ வீடியோ முடிவடைகிறது.
இதற்கு முன்னதாக இந்த வாரத்திற்கான அச்சாரமாக கடந்த வாரத்தில் காந்திமதி தனது பிறந்தநாளை எதுக்கு கொண்டாட வேண்டும். உன்னுடைய தாத்தா என்னை கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார் என்பது போன்று தனது பேரன் குமரவேலுவிடம் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து குமரவேல் பாண்டியன் டிராவல்ஸிற்கு சென்று ராஜீயிடம் பாட்டியின் பிறந்தநாளை கொண்டாட இருக்கிறோம். நீயும், அத்தையும் கண்டிப்பாக வர வேண்டும் என்று அழைத்துள்ளார்.
66
காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
அதற்கு ராஜீ, நானும் அத்தையும் வருவது இருக்கட்டும். ஆனால், நம்முடைய வீட்டில் தான் பிரச்சனை செய்வார்கள். அதை நினைக்கும் போதுதான் பயமாக இருக்கிறது என்றார். அதற்கு குமரவேல் என்னுடைய அப்பாவை நினைத்து நீ ஒன்றும் பயப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். எது எப்படியோ கடந்த 2 வாரங்கள் விறுவிறுப்பாக சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது இந்த வாரம் காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எப்படி செல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.