Pandian Stores 2: பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்த அதிரடி! அஞ்சலி என்ட்ரியால் ஆட்டம் காணும் தங்கமயிலின் வாழ்க்கை!

Published : Feb 08, 2026, 03:32 PM IST

Pandian Stores 2: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணன் விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்ல, தங்கமயில் அவருடன் சேர்ந்து வாழப் போராடுகிறார். மறுபுறம், சரவணன் தனது பழைய தோழி அஞ்சலியை சந்திப்பது கதையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
15
சீரியல் ரசிகர்களுக்கு இந்த வாரம் செம தீனி.!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. பொய்களை மட்டுமே முதலீடாக வைத்து சரவணனை திருமணம் செய்த தங்கமயிலின் வாழ்க்கை, இப்போது நீதிமன்றப் படி ஏறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பிப்ரவரி 9 முதல் 14 வரையிலான எபிசோட்களுக்கான ப்ரோமோ வெளியாகி, இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

25
அஞ்சலியுடன் எதிர்பாராத சந்திப்பு

சரவணனின் வாழ்வில் புதிய மாற்றம்? இந்த வாரத்தின் தொடக்கமே அதிரடியாக அமைகிறது. மன உளைச்சலில் இருக்கும் சரவணன், அமைதி தேடி கோவிலுக்குச் செல்கிறார். அங்கே யாரும் எதிர்பாராத விதமாக தனது பழைய தோழி அஞ்சலியை சந்திக்கிறார். இந்த சந்திப்பு வெறும் தற்செயலானதா அல்லது சரவணனின் வாழ்வில் அஞ்சலி புதிய ஒளியை ஏற்றி வைக்கப்போகிறாரா? என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

35
தங்கமயில் வீட்டில் வெடித்த பூகம்பம்: "சாப்பாட்டுக்கே வழியில்லை!"

மறுபுறம், புகுந்த வீட்டிலிருந்து துரத்தப்பட்ட தங்கமயில் தனது தாய் பாக்கியம் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆனால் அங்கேயும் அவருக்கு அவமானமே மிஞ்சுகிறது. அனைவரும் சாப்பிட அமரும்போது, "நம்ம மூணு பேருக்கே சாப்பாட்டுக்கு வழியில்லை, இதுல இவ வேற வந்துட்டா!" என பாக்கியம் கடுமையாகப் பேசுகிறார். மேலும், "கால்ல விழுந்தாவது புருஷன் கூட சேர்ந்து வாழப் பாரு" என பாக்கியம் சாட்டையடியாகக் கூற, மனமுடைந்த தங்கமயில் சாப்பிடாமல் எழுந்து செல்கிறார். எப்படியாவது சரவணனுடன் பேசி சமாதானம் செய்ய அவர் எடுக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகின்றன.

45
நேருக்கு நேர்: சரவணனின் ஆவேசமும் மயிலின் பிடிவாதமும்!

கதையின் மிக முக்கியத் திருப்பமாக, கோமதி தனது மகன் சரவணனை இந்தச் சிக்கலில் இருந்து மீட்க நீதிமன்றத்தின் கதவைத் தட்டுகிறார். குடும்ப நல நீதிமன்றத்தில் சரவணனும் தங்கமயிலும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். அப்போது நீதிபதியிடம் சரவணன் தனது குமுறலை வெளிப்படுத்துகிறார். "என் கேரக்டர் பத்தி தப்பா பேசினவ கூட என்னால சேர்ந்து வாழ முடியாது. எனக்கு விவாகரத்து தான் வேணும்!" என ஆணித்தரமாகக் கூறுகிறார். ஆனால், கையில் பிடிமானம் இல்லாத தங்கமயிலோ, "எனக்கு விவாகரத்து வேண்டாம், நான் என் கணவருடன் தான் சேர்ந்து வாழ்வேன்" என மண்டியிட்டுப் போராடுகிறார்.

55
தங்கமயிலின் கண்ணீர் சரவணனின் மனதை மாற்றமா?

உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான இந்த போராட்டத்தில் நீதி வெல்லுமா? அல்லது தங்கமயிலின் கண்ணீர் சரவணனின் மனதை மாற்றமா? வரும் வார எபிசோட்கள் இந்த கேள்விகளுக்கு விடை சொல்லும். சீரியலை விட ப்ரோமோவே மாஸாக இருப்பதால், ரசிகர்கள் அடுத்த வாரத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories