
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன் மற்றும் தங்கமயில் பிரச்சனையால் இப்போது மீனாவின் வாழ்க்கையும் சிக்கலில் சிக்கியுள்ளது. தங்கமயில் வீட்டிற்கு சென்று வந்த்தால் செந்தில் மற்றும் மீனாவிற்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் நாளடைவில் பிரிவு வரை செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அது என்ன என்று முழுவதுமாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன் மற்றும் தங்கமயிலுக்கு இடையிலான குடும்ப பிரச்சனை இப்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் அவரைப் பற்றிய உண்மைகள் தெரிந்து கடைசியில் தங்கமயில் வீட்டை விட்டு துரத்தப்பட்டார். எனினும், தங்கமயில் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது சரவணன், என்னுடைய சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டவே தங்கமயில் குடும்பத்தினர் அங்கிருந்து புறப்பட்டனர். மேலும், இனிமேல் உன்னுடன் வாழ முடியாது. விவாகரத்து வேண்டும் என்று கேட்டார்.
இந்த நிலையில் தான் மன வேதனையில் இருந்து வந்த தங்கமயில் மீனாவிற்கு போன் போட்டு தொந்தரவு செய்தார். இதன் காரணமாக தங்கமயில் வீட்டிற்கு மீனா சென்று அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார். இப்போது நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. மாமா, சும்மா தான் சொல்லியிருப்பார். விவாகரத்து தரமாட்டார். அப்படி இப்படி சொல்லி தங்கமயிலை சமாதானம் செய்தார். அப்போது தங்கமயிலின் அம்மா, அந்த நகை மேட்டரை மட்டும் சொல்லிவிடாதே என்று மீனாவிடம் கெஞ்சி கேட்டார். மீனாவும் பரிதாபமாக நான் சொல்லமாட்டேன் என்றார்.
இதைப் பற்றி ஆட்டோ டிரைவர் மூலமாக செந்தில் எப்படியோ தெரிந்து கொண்டார். ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்த மீனாவிடம் காலையில் கிளம்பும் போது நேராக ஆபிஸூக்கு தான் போனயா? உங்க ஆபிசை சிராவயலுக்கு எப்போது மாத்துனாங்க என்று கேட்டார். எல்லா விஷயமும் எனக்கு தெரிந்துவிட்ட்து. நீ எதுக்கு அவங்க வீட்டுக்கு போன. நீ போனது நம்ம வீட்டுக்கு தெரிந்தால் என்ன நடக்கும்? இவ்வளவு ஏன் காலையில் எப்படியெல்லாம் பேசுனாங்க, மிரட்டுனாங்க. அதையெல்லாம் பார்த்த பிறகும் கூட நீ எப்படி அவங்க வீட்டுக்கு போன?
என்ன அக்கா பாசமா? தங்கச்சி தங்கச்சின்னு ராஜீ மீது பாசம் வச்சிருக்க. அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கு. அது நம்முடைய சொந்தம். ஆனால், அவங்க மீது உனக்கென்ன பாசம்? அவங்க அண்ணனை ஏமாற்றிவிட்டு போயிருக்காங்க. அண்ணனையும், அவங்களையும் சேர்த்து வைக்கிறேனு வாக்குறுதி கொடுக்க போனீயா? நீ எதுக்கு அங்க போன, ஆபிஸ் கால் என்று சொன்னீயே, அங்க நம்பரை பிளாக்கில் போட வேண்டியதுதான?
நீ இப்படி அவங்களுக்கு சப்போர்ட் பண்ணவும் தான் குடும்பமாக நம் தலையில் ஏறி ஆடுறாங்க. இவ்வளவு பெரிய துரோகம் செய்தவர்களுக்கு ஆறுதல் ஒரு கேடா? நீ பண்ணது நம்ம வீட்டுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் தெரியுமா? நீ பண்ணது தப்பு, நீ என்ன அவ்வளவு பெரிய நல்லவளா? நீ பண்ணது தப்பு தப்பு தப்பு…அந்த கும்பலோடு சேர்ந்து நீ ஏதாவது பண்ணா அவ்வளவு தான். நான் சும்மாவே இருக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஏற்கனவே மீனா மற்றும் ராஜீயிடம் நீங்கள் ஏதும் பொய் சொல்லுறீங்களா என்று கோமதி கேட்டார். அதோடு சரவணன் மற்றும் தங்கமயில் பிரச்சனையின் போது ஏன் உனக்கும், மீனாவும் ஏதும் பிரச்சனையா? சொல்லு, அதுக்கும் ஒரு பஞ்சாயத்து வச்சிருவோம் என்று கோமதி கூறியிருந்தார்.
அவர் சொன்னது போன்று இப்போது செந்தில் மற்றும் மீனாவிற்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக தனிக்குடித்தனம் செல்லும் போது தான் மீனா மற்றும் செந்தில் இடையில் சண்டை வந்தது. ஆனால், அது கூட மீனா தனது அத்தை, மாமாவை விட்டு வர முடியாது. அவர்கள் தனக்கு இன்னோரு அம்மா, அப்பா என்று அவர் நினைத்த்து தான். ஆனால், இப்போது தனக்கு தெரியாமல் தங்கமயிலை பார்த்துவிட்டு வந்தது செந்திலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனா மற்றும் செந்தில் வாழ்க்கையில் இனி அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.