பச்சை துரோகி; சோறு போட்டு வளர்த்த கடைக்கு துரோகம் செய்த பழனிவேலுவை விரட்டியடித்த பாண்டியன்!

Published : Nov 20, 2025, 03:03 PM IST

Pandian Lashes Out At Palanivel : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக தெரிந்து கொள்வோம்.

PREV
18
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில் பாண்டியன் மற்றும் சரவணன் நடந்து வரும் போது இதே தெருவில் யாரோ ஒருவர் கடை ஆரம்பித்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு ஒருவர் சென்றார். ஏற்கனவே அதே தெருவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையுடன் சேர்த்து கிட்டத்தட்ட 15 கடைகள் இருக்கும் போது இப்போது புதிதாக பழனிவேலுவும் காந்திமதி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் கடையை திறந்துள்ளார். ஆரம்பத்தில் பழனிவேலுவிற்கு கடை வைத்து கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட காந்திமதிக்கு இந்த கடையை அதுவும் பாண்டியனின் கடை இருக்கும் அதே தெருவில் இப்படியொரு பெரிய கடையை தனது மகன் பழனிவேலுவிற்கு வைத்து கொடுத்தது பிடிக்கவில்லை.

28
கடை திறக்க ஓகே

இதனால் ரொம்பவே சோகமாக இருந்தார். உண்மையில் பாண்டியனிடம் சென்று தனது மகனுக்கு அவனது அண்ணன்கள் கடை வைத்து கொடுக்கிறார்கள். அதனால், நீங்கள் இருவரும் சந்தோஷமாக அவனை ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார். அவர் கேட்டுக் கொண்டதால் பாண்டியனும், கோமதியும் பழனிவேலுவிற்கு கடை திறக்க ஓகே சொன்னார்கள். ஆனால், இப்போது காந்திமதிக்கே இப்படியொரு கடையை பார்த்து பிடிக்கவில்லை.

38
காந்திமதி

ஆரம்பத்திலேயே இதே தெருவில் தான் கடை திறக்கிறோம் என்று சொல்லியிருந்தால் பழனிவேலுவும் சரி, காந்திமதியும் சரி வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், இது யாருக்குமே தெரியாமல் பாண்டியனை பலி வாங்க முத்துவேல், சக்திவேல் மற்றும் குமரவேல் ஆகியோர் சேர்ந்து ஏற்பாடு செய்த கடை. இந்த கடையால் பாதிக்கப்பட்டது பழனிவேல் தான். மத்தளத்திற்கு ரெண்டு பக்கம் இடி மாதிரி பழனிவேலுவிற்கு தனது அண்ணன்கள் மத்தியிலும், பாண்டியன் மத்தியிலும் கெட்ட பேர் ஏற்பட்டுவிட்டது.

48
பாண்டியன் மற்றும் சரவணன்

இந்த கடையை பார்ப்பதற்கு முன்பு எந்த கிறுக்கன் இதே தெருவில் கடை திறக்கிறது என்று பேசிக்கொண்டு வந்த பாண்டியன் மற்றும் சரவணன் இருவரும், குமரவேலுவை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு கடையின் பெயரை பார்த்த பாண்டியனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அது பழனிவேல் கடை. பிறகு குமரவேல் மற்றும் சுகன்யா இருவரும் பாண்டியன் மற்றும் சரவணனை பார்த்து கடைக்கு வரவேற்றனர்.

58
சரவணன் மற்றும் பாண்டியன்

ஆனால், சரவணன் மற்றும் பாண்டியன் இருவரும் கோபமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து காந்திமதி மற்றும் சுகன்யா, பழனிவேல் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து கடையை திறந்தனர். காந்திமதி சர்க்கரையும் மஞ்சளும் வாங்கி வியாபாரத்தை தொடங்கி வைத்தார். பிறகு குமரவேல் இனிப்பு வாங்கினார். அதன் பின்னர் தான் முத்துவேல் 500 ரூபாய் நோட்டு கட்டை பழனிவேலுவிடம் கொடுத்தார். ஆனால், அவர் பெற்றுக் கொள்ளவில்லை.

68
அக்கா வீட்டிற்கு வந்த பழனிவேல்

அப்போதுதான் பாண்டியன் வந்தது பழனிவேலுவிற்கு தெரியவர உடனே அக்கா வீட்டிற்கு வந்த பழனிவேல் மீது பாண்டியன் கோபம் கொண்டார். மேலும், எல்லோருமே பழனிவேலுவை கண்ட மேனிக்கு திட்டித் தீர்த்தனர், துரோகம் செய்துவிட்டதாக கூறி அவரை திட்டி தீர்த்தனர். ஆனால், பழனிவேலுவை பேசுவதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. துரோகம் செய்துவிட்டு இப்போது என்ன பேச வந்திருக்க என்று கோமதி கேட்டார்.

78
உன்னை நான் வெகுளி என்று நினைத்துவிட்டேன்

உன்னை நான் வெகுளி என்று நினைத்துவிட்டேன். அந்த குடும்பத்தில் நீ மட்டும் நல்லவன் என்று நினைத்தேன். ஆனால், இப்போது தான் புரிகிறது. உன்னுடைய அண்ணன்கள் ரத்தமும் உன்னுடைய உடம்பிலும் ஓடுது என்பதை நிரூபித்துவிட்ட, உனக்கு நான் என்னென்னமோ செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இனிமேல் நீ என்னை மச்சான் என்று கூப்பிடாதே. இத்தனை வருடங்களாக சோறு போட்ட கடை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அதில் வரும் வருமானத்தில் தான் நீயும், நானும் எல்லோரும் சாப்பிட்டு வளர்ந்தோம். அதில் கை வச்சிட்டீயே.

88
உனக்கும் எனக்கும் இருந்த உறவு முறிந்துவிட்டது

இனி உனக்கும் எனக்கும் இருந்த உறவு முறிந்துவிட்டது. உனக்கும் இந்த குடும்பத்திற்கும் இருந்த எல்லா உறவும் முடிந்துவிட்டது என்று பாண்டியன் ஆக்ரோஷமாக பேசினார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது. எது எப்படியோ யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ சுகன்யாவிற்கு ரொம்பவே சந்தோஷம். ஏனென்றால் தனது கணவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் வேலை பார்ப்பது பிடிக்கவில்லை என்றாலும் கூட கொஞ்ச நாட்கள் பொறுமையாக இருந்தார். ஆனால், அவர் மீது திருட்டு பழி சுமத்துவது, அடிமை போன்று வேலை வாங்குவது என்று எதுவுமே சுகன்யாவிற்கு பிடிக்கவில்லை. ஆனால், இப்போது சொந்தமாக ஒரு கடை ஆரம்பித்திருக்கிறார். இது அவருக்கு சந்தோஷத்தை கொடுத்துவிட்டது. இனி நாளைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories