அய்யனார் துணை சீரியலில் வீட்டை போலீசார் சீல் வைத்து நடேசன் பேமிலியை வெளியேற்றிய நிலையில், அவர்கள் தற்போது ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலில் நடேசன் வீட்டில் பாம்பு வந்ததை அடுத்து, வீட்டில் உள்ள ஓட்டைகளை அடைக்கவும், சேதமடைந்தவற்றை எல்லாம் சரி செய்யவும், சேரன் வேலைகளை தொடங்கினார். அதைப்பார்த்த நடேசனின் அண்ணன், இந்த வீட்டின் மீது கேஸ் நடப்பதால், எந்த வேலையும் செய்யக் கூடாது என சொல்ல, அதையும் மீறி அவர்கள் வேலை செய்து வந்ததால், நடேசனின் அண்ணன் போலீசை அழைத்து வருகிறார். அங்கு வரும் போலீஸிடமும் நடேசன் திமிராக பேசியதால், அவர்கள் அனைவரையும் வீட்டை விட்டு காலி செய்ய சொல்லி வீட்டுக்கு சீல் வைக்கிறார்கள். இதனால் அனைவரும் ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
நிலா கொடுக்கும் ஐடியா
ஓட்டலில் தங்கியிருக்கும்போது, அடுத்து என்ன செய்யலாம் என டிஸ்கஸ் பண்ணுகிறார். ஒருநாள் அவசரத்துக்கு ஓட்டலில் தங்கியாச்சு, ஆனால் நாளை என்ன செய்யப்போகிறோம் என அனைவரும் கலந்து ஆலோசிக்கின்றனர். அந்த ஆலோசனையில் நிலாவும் கலந்துகொள்கிறார். இப்போ நாம் அந்த வீட்டை விட்டுக்கொடுத்துவிட்டால், அவ்வளவு சீக்கிரம் அந்த வீட்டுக்கு நம்மால் திரும்ப செல்ல முடியாது. அதனால் எப்படியாச்சும் அந்த வீட்டுக்கே செல்ல வேண்டும். அதற்காக அந்த வீடு நமக்கு தான் சொந்தம் என்பதற்கான ஆதாரம் நமக்கு வேண்டும் என நிலா சொல்கிறார். ஏதாச்சும் ஆதாரம் இருக்கிறதா என நிலா கேட்கிறார்.
35
உயிலைப் பற்றி பேசும் நடேசன்
தங்களுக்கு தெரிந்து எந்த ஆதாரமும் இல்லை என சேரன், பாண்டியன், சோழன் சொல்கிறார்கள். நடேசன் அடிக்கடி, தன்னுடைய அப்பா, அம்மா தனக்காக உயில் எழுதி வைத்திருப்பதாக சொல்வதை சுட்டிக்காட்டும் நிலா, அந்த உயில் கிடைத்தால் வீட்டை மீட்டுவிடலாம் என சொல்கிறார். அவர் சொல்றதையெல்லாம் எப்படி நம்ப முடியும் என மகன்கள் சொல்ல, கண்டிப்பா அவரிடம் உயில் இருக்கும் என சொல்லி, நடேசனிடமே இதுபற்றி விசாரிக்கிறார் நிலா. அதற்கு அவர் ஆமா உயில் இருக்கு, அந்த உயிலில் நான் இருக்கும் வீடு எனக்குதான்னு இருக்கு என சொல்கிறார் நடேசன்.
சரி, அந்த உயில் எங்க என நிலா கேட்க, அதற்கு நடேசன், அது எங்க இருக்குனு யாருக்கு தெரியும் என சொல்லிவிடுகிறார். அதுமட்டுமில்ல இப்போ நான் நேரா போய் என்னுடைய தங்கச்சியையும், அண்ணனையும் சாத்து சாத்துனு சாத்திட்டு, சீல் வச்சிருக்க பூட்டை உடைச்சு எறிஞ்சிடுறேன். வாங்க நம்ம எல்லோரும் வீட்டுக்கு போலாம் என கூறுகிறார் நடேசன். இப்படியெல்லாம் செய்தால் உங்களை ஜெயில்ல புடிச்சு போட்டிருவாங்க. வீடு உங்க கைக்கு வராது. அதனால் இப்படியெல்லாம் யோசிக்காம இருங்க என நிலா சொல்லுகிறார்.
55
பாண்டியனை தேடி ஓட்டலுக்கு வந்த வானதி
இரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது, வானதி பாண்டியனுக்கு போன் போட்டுக் கொண்டே இருக்கிறது. இதையெல்லாம் பார்த்த சோழன் கடுப்பாகி, போனை பிடுங்கி, ஒழுங்கா போனை வச்சிட்டு தூங்குனு சொல்லிட்டு போனை சுவிட் ஆஃப் பண்ணிவிடுகிறார். மறுநாள் காலையில், பாண்டியனை தேடி, வானதி ஓட்டலுக்கே வந்துவிடுகிறார். இதைப்பார்த்த ஷாக் ஆன பாண்டியன், அவரை தனியாக அழைத்துச் சென்று அட்வைஸ் பண்ணி அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது. அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.