விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜை பிளாக்மெயில் செய்துவந்த ராணியை மிரட்டி உண்மையை வரவைத்து இருக்கிறார் முத்து. இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜை ஏமாற்றி வந்த ராணி மற்றும் ராஜாவை வீட்டுக்கே சென்று அழைத்து வந்த முத்து, வீட்டில் வைத்து பஞ்சாயத்து செய்தார். அப்போது மனோஜ், ராணியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற விஷயத்தை அனைவரிடமும் போட்டுடைக்கிறார். அதுமட்டுமின்றி ராணிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக் கூறி, மனோஜை, ராணி கழுத்தில் தாலிகட்ட சொல்கிறார். இதைக்கேட்டு அனைவரும் ஷாக் ஆகிறார்கள். தாலி கயிற்றை கொடுத்து முத்து கட்ட சொன்னதும், எதுக்கு என கேட்டு சண்டை போடுகிறார் ராஜா, இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
ராணிக்கு மீனா கொடுத்த பதிலடி
ராணி என் பொண்டாட்டி, அவளுக்கு ஏன் தாலி கட்ட சொல்றீங்க என ராஜா கேட்டது, அவனது சட்டையை பிடிக்கும் முத்து, உன் பொண்டாட்டினு இப்ப தான் தெரியுதாடா, நடக்காத ஒன்றை நடந்ததாக சொல்லி, உன் பொண்டாட்டிய வச்சு இவ்வளவு கேவலமான வேலை பண்ணீருக்க என மிரட்டுகிறார். ஏன் என்னோட புருஷன கேவலமா பேசுறீங்க என ராணி வாக்குவாதம் செய்ய, அவருக்கு பதிலடி கொடுக்கும் மீனா, உன்னை மாதிரி பொண்ணுங்களால தான் நிஜமா பாதிக்கப்பட்ட பெண்களை கூட நிறைய பேர் சந்தேகப்படுகிறார்கள் என சொல்கிறார். பதிலுக்கு முத்துவும், இந்த மாதிரி அசிங்கமான வேலை செஞ்சு தான் சம்பாதிக்கனுமா என கேட்கிறார்.
34
உண்மையை சொன்ன ராஜா
பின்னர் தவறை உணர்ந்த ராஜா, அவர்களிடம் மன்னிப்பு கேட்டதோடு, உண்மையையும் சொல்கிறார். மனோஜ் மீது தவறில்லை என்றும் அவர் தன்னுடைய மனைவியிடம் தப்பா நடந்துக்கவும் இல்லை. உழைச்சு சம்பாதிக்கணும்னு தான் நாங்க கடையில வேலைக்கு சேர்ந்தோம். ஆனா நாங்க எந்த தப்பும் செய்யாமலேயே 3 லட்சம் ரூபாய் திருடிவிட்டோம் என எங்கமேல பழிபோட்டாங்க. நிஜமாவே நாங்க எந்த பணத்தையும் திருடவில்லை. மனோஜும், ரோகிணியும் எங்க மேல பழிபோட்டு அசிங்கப்படுத்திட்டாங்க. அதற்கு பழிவாங்க தான் இப்படி பண்ணிட்டோம். எங்களை மன்னித்துவிடுங்கள் என ராஜா - ராணி இருவரும் கூறுகிறார்கள்.
பின்னர் ராஜா - ராணி இருவரிடம் எழுதி வாங்கிவிட்டு, அவர்களிடம் இருக்கும் ஆதாரத்தையும் அழித்துவிட்டு அவர்களை அனுப்புகிறார் முத்து. பின்னர் அந்த பணத்தை யார் திருடி இருப்பார்கள் என்கிற சந்தேகம் வருகிறது. அப்போது முத்து, அந்த பணம் இருந்த லாக்கர் பின் மனோஜுக்கும், ரோகிணிக்கும் தான் தெரியும். இவர்கள் இருவரில் தான் யாரோ எடுத்திருக்கணும் என சொல்கிறார். அதற்கு விஜயா, மனோஜ் ஏன் எடுக்க போறான், அவன் கடையில அவனே திருடுவானா... ஒருவேளை இவ தான் எடுத்திருப்பா என ரோகிணி மீது அனைவருக்கும் சந்தேகம் வருகிறது. இதன் பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.