மூன்று முடிச்சு முதல் அழகே அழகு வரை... இந்த வார டாப் 10 தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங் இதோ

Published : Mar 26, 2026, 03:44 PM IST

தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் நிலவரம் வெளியாகி உள்ள நிலையில், அதில் விஜய் டிவியின் அழகே அழகு சீரியல் லேட்டஸ்ட் எண்ட்ரியாக உள்ளே வந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Top 10 Tamil Serial TRP Rating

சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் தமிழ் தொடர்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. 2026-ஆம் ஆண்டு 11-வது வாரத்திற்கான TRP மதிப்பீடுகள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் பல தொடர்கள் தங்கள் இடங்களில் மாற்றங்களை சந்தித்திருக்கின்றன. இந்த வாரத்தின் TRP பட்டியலில் மூன்று முடிச்சு தொடர் 9.44 என்ற ரேட்டிங் உடன் முதல் இடத்தில் வீற்றிருக்கிறது. ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த தொடர் கடந்த சில வாரங்களாகவே முதல் இடத்தை தக்கவைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

24
முன்னேறிய கயல் சீரியல்

இரண்டாம் இடத்தில் சிங்கப்பெண்ணே தொடர் 8.15 மதிப்பெண்ணுடன் தடம் பதித்துள்ளது. இந்த தொடர் கடந்த வாரம் 8.27 புள்ளிகளை பெற்றிருந்தது. மூன்றாம் இடத்தில் கயல் தொடர் 7.66 மதிப்பெண்ணுடன் உறுதியாக நிலைகொண்டுள்ளது. கடந்த வாரம் 7.60 புள்ளிகள் உடன் நான்காம் இடத்தில் இருந்த கயல் சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி இருக்கிறது. மருமகள் தொடர் 7.43 மதிப்பெண்ணுடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 7.73 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் சற்று சரிவை சந்தித்து உள்ளது.

34
பின்னுக்கு தள்ளப்பட்ட சிறகடிக்க ஆசை

ஐந்தாம் இடத்தில் அய்யனார் துணை (6.99) நுழைய, ஆறாம் இடத்தில் அன்னம் (6.87) என்ற தொடர் உள்ளது. இதில் அய்யனார் துணை சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 5ம் இடத்தில் நீடித்தாலும், அன்னம் சீரியல் கடந்த வாரத்தைக் காட்டிலும் ஒரு இடம் முன்னேறி இருக்கிறது. இந்த சீரியல் கடந்த வாரம் 6.86 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் இருந்தது. ஏழாம் இடத்தில் சிறகடிக்க ஆசை (6.73) தொடர் உள்ளது. இந்த சீரியலும் இந்த வாரம் சரிவை சந்தித்து உள்ளது. இந்த சீரியலுக்கு கடந்த வாரத்தில் 6.98 புள்ளிகள் கிடைத்து ஆறாம் இடத்தில் இருந்தது. ஆனால் இந்த வாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது.

44
டாப் 10ல் அழகே அழகு சீரியல்

எட்டாம் இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (6.41) தொடர் வலுவான இடத்தில் உள்ளது. இருப்பினும் கடந்த வாரத்தை விட டிஆர்பி சற்று குறைந்துள்ளது. ஒன்பதாம் இடத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது உள்ளது. அதற்கு (5.97) டிஆர்பி புள்ளிகள் பதிவாகியுள்ளது. இதைடுத்து பத்தாம் இடத்தில் விஜய் டிவியின் அழகே அழகு சீரியல் உள்ளது. அதற்கு (5.31) டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இந்த சீரியல் அண்மையில் தான் தொடங்கப்பட்டது. மொத்தத்தில் இந்த வாரம் மூன்று முடிச்சு தொடர் மட்டும் 9-க்கும் மேல் TRP பெற்று மற்ற தொடர்களுக்கு கடும் போட்டியாக விளங்குகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories